பக்கம் எண் :


318திருத்தொண்டர் புராணம்

 

வரை உள்ள நிகழ்ச்சிகள் அப்பூதியார் சரிதத்தினுள் பேசப்படுதல் முறையாத லானும், இங்கு இவ்வாறு சுருக்கிக்கூறினார். இஃது ஆசிரியரது சிறப்பாகிய கவிநலம். அரசுகள் மனைக்கடை நண்ணினார்; அடியவர் ஒருவர் வந்தார் எனக்கேட்டு உள்ளிருந்த அவர் வந்து தொழுதனர்; அரசுகள் தண்ணீர்ப்பந்தர் முதலிய அறச் சாலைகளில் உம்பேர் எழுதாது வேறொரு பேர் முன் எழுதக்காரணமென்னை என்று வினாவியபோது, "திருநாவுக்கரசு" என்ற ஆத்தமாகிய தூயபேரோ வேறொரு பேர்? என வெகுண்டு "அவரது பெருமை யறியாத நீர் யாவர்?" என்று அப்பூதியார் கேட்டனர்; அதற்கு இறைவரால் சூலைதந் தாட்கொள்ளப்பட்ட உணர்விலாச் சிறியேன் நான் என்று அரசுகள்கூற, அப்பூதியார் பெருங்களி கூர்ந்து, மனைவியார் மைந்தர் சுற்றத்தார் முதலிய அனைவரையும் உள்ளிருந்து அழைத்துவந்து கடைத்தலையில் நின்ற நாயனரைத் தொழுது எழுந்தனர்; என்ற இத்துணையும் இங்கு விரித்துரைத்துக் கொள்ளவைத்தார். மற்றவர் என்றதனால் "வேறொரு பேர்" என்று சொல்லக் கேட்டபோது அரசுகளிடம் மனப்பிணக்கங் கொண்ட நிலையும், மனமகிழ்ந்து என்றதனால் முன்னர் அந்தப் பிணக்கத்தால் மகிழாது வெகுண்ட நிலையும் களிகூரத்தொழுது என்றதனால் அதுநீங்கிப் பின்னர்க் களிகூர்ந்த நிலையும் உய்த்துணர வைத்த திறமும் கண்டுகொள்க.

சூழ்தல் - சுற்றி வலம்வருதல். சூழ்ந்து - நினைந்து - எண்ணி - என்றலுமாம். "அமுது செய்விக்கு நேசமுற" (அப்பூதி - புரா - 21).

அமுதுசெயக் குறைகொள்வார் இறைகொள்ள - குறைகொள்வார் - குறை கொள்வாராகி. குறைகொள்ளுதல் - மிகப்பணிந்து வேண்டுதல். "குறைந்தடையு நன்னாளில்" (1310). இறைகொள்ள - விடைகேட்க. இறை - விடை. "விண்ணப்பஞ்செய" (அப்பூதி - புரா - 21)

பெற்ற பெருந்தவத் தொண்டர் - பெற்ற கிடைக்கபெற்ற. இவ்வாறு தியான் உறைப்பன் பயனாகத் தாமே வந்து கிடைக்கப்பெற்ற. பெருந்தவம் - முன்னை தவமும் இம்மைத் தவமும். 1405-ம் திருப்பாட்டும் ஆண்டுரைத்தவையும் இங்கு நினைவு கூர்க. இங்கு இவ்வாறன்றிப் பெருந்தவம் பெற்ற தொண்டர் என்று கூட்டியுரைப்பாரும், சிவபெருமானால் அடிமை கொள்ளப்பெற்று என்பாருமாயினர் முன் உரையாசிரியர்கள். தொண்டர் - அப்பூதியார் என்று கொண்டு, நாயனாரது திருவுள்ளம் பெற என வருவித்துரைப்பாருமுண்டு.

திருவுள்ளம்பெற - இசைய; இசைவுதர; அதற்கு உடன்பட.

202

1468.

காண்டகைமை யின்றியுமுன் கலந்தபெருங் கேண்மையினார்
பூண்டபெருங் காதலுடன் போனகமுங் கறியமுதும்
வேண்டுவன வெவ்வேறு விதங்கள்பெற விரும்பினால்
ஆண்டவர சமுதுசெயத் திருவமுதாம் படியமைத்து,

203

1469.

திருநாவுக் கரசமுது செய்தருள மற்றவர்தம்
பெருநாமஞ் சாத்தியவப் பிள்ளைதனை யழைத்தன்பு
தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக்
குருநாளக் குருத்தரிந்து கொண்டுவரத் தனிவிட்டார்.

204

1468. (இ-ள்.) வெளிப்படை. காணும் தன்மை யில்லாதேயும், முன்கலந்த பெரும்கேண்மையைக் கொண்டவராகிய அப்பூதிநாயனார் மேற்கொண்ட பெருத்த காதலுடனே திருஅமுதும், கறியமுது வகைகளும் வேண்டுவனவற்றை வெவ்வேறு