விதங்களாக விருப்பத்தினால் ஆண்ட அரசுகள் அமுது செய்வதற்குரிய திருவமுதாகும்படி அமைத்து, 203 1469. (இ-ள்.) வெளிப்படை. திருநாவுக்கரசு நாயனார் அமுதுசெய்தருள்வதற்காக. அவருடைய பெருநாமத்தைச் சூட்டப்பெற்ற அந்த மூத்தபிள்ளையை அழைத்து, அன்பு பொருந்தும் ஞானத்திருமறையோராகிய ஆப்பூதியார், தோட்டத்தில் வளப்பமுடைய கதலியின் பெரிய நாளத்தையுடைய குருத்தினை அரிந்துகொண்டு வரும்படி தனி ஏவி விடுத்தனர். 204 1468. (வி-ரை.) காண்தகைமை.......கேண்மையினார் - முன்காண்தகைமை என்றும், முன்கலந்த என்றும் இருவகையும் கூட்டியுரைக்க நின்றது. முன் - இடைநிலைத்தீபம். உம்மை - உயர்வு சிறப்பு. முன்கலந்த - கேண்மை நிலையை அவர் அறிந்த மேற்கொள்வதன் முன்பே கலந்த. "பாதம் அடைந்தவ ரறியா முன்னே, காண்டகு காதல் .கூரக் கலந்த அன்பினர்" (அப் - புரா - 1) என்பது பார்க்க. கேண்மை - இங்கு உயிரினைப் பற்றிய அன்பு சுற்றம் குறித்தது. "மருவியநண் புறுகேண்மை அற்றை நாள்போல் வளர்ந்தோங்க" (1452) பார்க்க. இதனை மேல்வரும் பாட்டில் "அன்புதரு ஞானம்" என்று விளக்கியது காண்க. கேண்மையினார் - அன்புதரு ஞானத்திரு மறையோர் - அமைத்து அழைத்து - குருத்தரிந்து கொண்டுவர விட்டார் - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. வேண்டுவன - வெவ்வேறு விதங்கள் பெற - கறியமுது வகைகள் சுவையாலும், உண்ணும் வகையாலும் பலதிறப்பட்டபோதே உணவுக்கு ஏற்பவையாகு மாதலின், வேண்டுவன - வெவ்வேறு - விதம் எனக் கூறினார். "உண்டி நாலுவிதத்தி லாறு சுவைத்தி றத்தினில்" (443) என்று பார்க்க. விருப்பினால் - அமுதுசெய என்றது, விருப்பினால் அமைத்து என்றும் கூட்டி உரைக்க நின்றது. முதனிலைத் தீபம். ஆண்ட அரசு அமுதுசெய - தம்மை ஆளுடைய குருவாகிய அரசுகள் அமுது செய்தற்குரிய படி - தக்கபடி. திருவமுது ஆம்படி - தூய்மை - அன்பு முதலியவற்றால் குருவுக்கு நிவேதனமாகும்படியில். ஆண்ட அரசு - திருநாவுக்கரசு என்ற திருநாமத்தையே எண்ணியும் சொல்லியும் சாத்தியும் அப்பூதியார் ஒழுகியமை குறிக்க இப்பெயராலே குறித்தனர். முன்பாட்டில் "மொழிக் கொற்றவர்" என்றதும், மேல்வரும் பாட்டில் "திருநாவுக்கரசு....அவர்தம் பெருநாமம்" என்பதும், "செம்மைபுரி திருநாவுக்கரசர் திருப் பெயரெழுத" (அப்பூதி - புரா - 14) முதலியனவும் காண்க. 203 1469. (வி-ரை) அமுது செய்தருளக் - கதலிக் குருத்து - என்று கூட்டுக. முன்பாட்டில் திருவமுதினைக் கூறியவிடத்து, வாளா அமுதுசெய என்ற ஆசிரியர், இங்கு அமுதுக்குப் பரிகலமாகிய மட்டில் அமையும் கதலிக் குருத்தினைப் பற்றி அமுது செய்தருள என்றார்; மேல்வினைவு அந்தக் குருத்தினைப் பற்றி நிகழ்வதாலும், அரசுகளின் அருள்பெருகி நிகழ்வதற்கு அதுவே கருவியாய் நிற்பதானும் என்க. பெருநாமம் சாத்திய அப்பிள்ளை - மைந்தர் பலருக்கும் அத்திருப்பெயரினையே சாத்தியழைத்து ஒழுகினாராயினும், அவருள் இப்பிள்ளைக்கே முதலாவதாக அது சாத்திப் பெருக அழைக்கப்பட்டதனாலும், அதனால் மூத்த திருநாவுக்கரசு என்று அழைக்கப்பட்டமையாலும், பெருநாமம் என்றதனோடு அகரச் சுட்டும் சார்த்தி ஒதினார். அன்புதரு ஞானத் திருமறையோர் - அன்பு - இறைவனிடத்தன்பு. "ஈசனுக்கன்பில்லார்" என்ற சிவஞான சித்தியார் (11 - சூத்) பார்க்க. "தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக் கன்பர்" (அப்பூதி - புரா - 1) என்று இதனை விளக்குவது காண்க. சிவன்பாலன்பு அவனடியாரிடத்துப் பத்தியாய் விளைய, அதனால் |