பக்கம் எண் :


326திருத்தொண்டர் புராணம்

 

வருவிக்க. "குழையும் சுருடோடும்....உடைத் தொன்மைக் கோலம்" (திருவாகோத்); "ஒருபாற் றோடு மொருபாற் குழையு, மிருபாற்பட்ட மேனி யெந்தை" (11-ம் திருமுறை - கோயினான்..36) இரண்டு கொலாம் உருவம் - இருவகையும் கூடிய உருவம் - (3) கையதுவாகிய பொன்மலைவில்லினது பாம்பாகிய நாணிற் கோத்த கணை மூன்று கூறுடையது. "குன்ற வார்சிலை நாண ராவரி வாளி கூரெரி, காற்றின்மும்மதில், வென்றவா றெங்ஙனே" (சீகாமரம் - ஆமாத்தூர் - 1 - பிள்ளையார்); கணையின் மூன்று கூறாவன:- ஈர்க்கு - வாயு; உடல் - திருமால்; கூர் - தீக்கடவுள். "மாருதம் - மால் - எரி மூன்றும் வாய் - அம்பு - ஈர்க்காஞ் சரத்தானை" (தாண்டகம் - வீழி - 9) என்று நாயனார் எதிர் நிரனிறையாக வைத்தோதிக் காட்டுவது காண்க. -(4) முகம் - இங்கு அவர் காட்சிப்படும் நெறிகளை உணர்த்தி நின்றது போலும். -(5) அவரது ஆடும் அரவு. இப்பதிகத்தின் 5-வது பாட்டாகிய முற்கூற்று இறுதியில் அரவின் படத்தையும், 10-வது பாட்டாகிய பிற்கூற்று இறுதியில் அரவுப் படத்தினுள்ள கண் - பல் - எயிறு என்றிவற்றையும் வைத்த முறையும், எயிறுந்நெரிந் துக்கன் என முடித்த முறையும் கருதுக. அவராற் காயப்பட்டான் - மன்மதன். -(7) ஊழி முடிவில் அவராற் படைக்கப்பட்டன எழுவகைப் பறிவி. -(8) "எண் குணத்தான்" குறள் - சூடும் இனமலர் எட்டு - அட்டபுட்பம் எனப்படும். -(9) நூல் - பூணூல். ஒன்பது பாரிடம் - பாரிடம் - பேய்க்கணம் - பூதக்கூட்டம். இவை ஈரொன்பது - பதினெண் கணம் எனப்படும். ஈரொன்பதென்பது என வகை குறிக்க ஒன்பதெனப்பட்டது. அவராற் காயப்பட்டான் - இராவணன். அடியார் செய்கை பத்து - "பத்துடையீர் ஈசன் பழவடியீர்" (திருவாசகம் திருவெம் - 3) - குறிப்பு - இத்திருப்பதிகத்தை மந்திரமாகக் கொண்டு மெய்யன்போடு பாராணஞ்செய்து கைவரப் பெற்றோர் அரவின் விட வேகத்தை நீக்கவல்லவராதலை இன்றும் கண்கூடாகக் காணலாம்.

1474.

அருந்தனய னுயிர்பெற்ற வதுகண்டு மமுதுசெயா
திருந்ததற்குத் தளர்வெய்தி யிடருழந்தார் துயர்நீங்க
வருந்துமவர் மனைப்புகுந்து வாகீசத் திருமுனிவர்
விருந்தமுது செய்தருளி விருப்பினுடன் மேவுநாள்,

209

1475.

திங்களூர் தனினின்றுந் திருமறையோர் பின்செல்லப்
பைங்கண்விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதிபுகுந்து
தங்குபெருங் காதலொடுந் தம்பெருமான் கழல்சார்ந்து
பொங்கியவன் புறவணங்கி முன்னின்று போற்றிசைப்பார்,

210

1476.

புடைமாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொற்கழற்கீழ்
அடைமாலைச் சீலமுடை யப்பூதி யடிகடமை
நடைமாணச் சிறப்பித்து நன்மைபுரி தீந்தமிழின்
றொடைமாலைத் திருப்பதிகச் "சொன்மாலை" பாடினார்.

211

1474. (இ-ள்.) அரும் தனயன் உயிர்பெற்ற அது கண்டு - அருமையாகிய மகன், இழந்த உயிரை மீளவும்பெற்று எழுந்த அதனைக்கண்டும்; அமுது செயாது இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர்நீங்க - தாம் அமுது செய்யாமல் தாழ்ந்து இருக்க நேர்ந்தமைக்கு மனந்தளர்ந்து வருந்தும் அப்பூதியார் மனைவியார் முதலியோர்களது துன்பம் நீங்கும் பொருட்டு; வருந்தும் அவர் மனைப் புகுந்து - வருந்துகின்ற அவர்களுடைய திருமனையினுள் கோயில் முன்பினின்றும் போந்து