பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்329

 

அடை மாலைச் சீலம் - அடைவிக்கும் இயல்புடைய நல் ஒழுக்கம். மாலை - இயல்பு - தன்மை. "பொன்மாலை மார்பன்" என்ற விடத்திற்போல.

நடை - நடையை - ஒழுக்கத்தினை; இரண்டனுருபு தொக்கது. நடை - பாட்டினது சொன்னடை பொருணடை என்றலும் பொருந்தும். நடையைச் சிறப்பித்தமை - "அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும்" என்ற திருவாாக்கால் அறிக. மாண - மாட்சிமைபெற.

நன்மை புரி தீந்தமிழ் - இறைவன் உயிர்களுக்குச் செய்யும் நன்மையினையே இடைவிடாது எடுத்துச் சொல்லும் இனிய சுவைத் தமிழ். புரி - செய்யும்; நன்மை செய்யும் என்றலுமாம்.

இன்தொடை மாலை - இனிய தமிழால் செய்த - இனிமை பெறத் தொடுத்ததாகிய மாலை. மாலைத் திருப்பதிகம் - பதிகப் பாட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இனிய கருத்துக்கொண்ட மாலையாம்படி.

சொன்மாலை - இரட்டுற மொழிதலால் பதிகமாகிய சொல்லாலாகிய மாலை எனவும், "சொன்மாலை" என்று தொடங்கும் முதற்குறிப்புடைய பதிகம் எனவும் உரைக்க நின்ற அழகு காண்க.

211

திருப்பழனம்

திருச்சிற்றம்பலம்

பண் - பழந்தக்கராகம்

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் ! சொல்லீரே,
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கண் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பனென் புதுநலமுண் டிகழ்வானோ?

1

மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போகத்துங் கைவிடநான் கடவேனோ?

3

வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதிக்
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- கூடிப் பிரிந்த தலைமகனை நினைந்து, புலந்துரைத்த தலைவி கூற்றாகிய அகப்பொருட்டுறையில் அமைந்தது இத்திருப்பதிகம். மருதத்திணைக் குரிய ஊடலாகிய உரிப்பொருளும், வைகுறு விடியல் என்ற சிற பொழுதாகிய முதற்பொருளும், ஏற்றனவாய அன்னம், குயில், நாரை முதலியனவாகிய கருப்பொருளும் பெற, இத்திருப்பதிகம், இனிமையும் அழகும்பட அமைந்தமை காண்க. "நன்மைபுரி தீந்தமிழின் தொடைமாலைத் திருப்பதிகம்" என்றது இக்கருத்துப்பற்றியது. நன்மையாவது இரங்கு முயிர்களின்பால் இறைவனைக் கூட்டுவித்தல். குயில்காள் ! இளங்குருகே ! பூந்தென்றால் ! நாராய் எனது புது நலமும் எழினலமுமுண்டும், என் தளிர்வண்ணம் கொண்டும், என் உயிர்மேல் விளையாடியும் முன்னைநாள் ஆண்ட என் தலைவனாகிய பழனத்தான் இப்போது என்னைப் பிரிந்து குறிக்கொள்ளாது இகழ்வானோ? என்னை விடுத்தானோ? என்