னைத் தேற்றுதற்கு கொன்றைத்தார் அருளாதொழிவானோ? அவர் அவ்வாறாயினும் அவர்க்கு நான் கனவளையுங் கடவேனோ? என் கண்பொருந்தும் போதும் அவரை நான் கைவிடக் கடவேனோ? என்பது. குயில் - பூந்தென்றல் - நாரை - அன்னம் முதலிய இவை தலைவன் தலைவர் கூடியிருந்த காலத்து இன்பம் விளையத் துணையாய் நின்ற பொருள்களாதலின், இவற்றை விளித்து, ஊடற் குறிப்பும் இரங்கற் குறிப்பும்படக் கூறியவாறு. இரங்கற் குறிப்பு நெய்தற்றிணைக் குரியது. திணை மயக்கக்தால் இங்குக் கூடிவந்தது. கைதைகாள் ! நெய்தல்காள் ! என்றது காண்க. முன்னர்த் திருப்பழன மருங்கணைந்து இறைவரது கழல் வணங்க நேர்பெற்றுப் போந்து, மீண்டு பின்னரும் வந்து புகுந்து பொங்கிய அன்புறப் பாடுகின்றாராதலின் அப்பொருள்படவும் அத்திணைக்குரிய பொருள்படவும் இவ்வாறருளிச் செய்தனர் போலும், ஆளுடைய பிள்ளையாரது "சிறையாரு மடக்கிளியே!" என்ற திருத்தோணிபுரம் பழந்தக்கராகப் பதிகக் குறிப்பிக்கள் இங்குச் சிந்திக்கத்தக்கன. இப்பதிகப் பண்ணும் அதுவேயாதலும் கருதுக. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள்! - "கீதமினிய குயிலே" (திருவாசகம்). சொன்மாலையாகிய கீதம். பயிலுதல் - பல காலும் சொல்லுதல். இனம் - கூட்டம். திருவாதவூட்டிரடிகள் குயிற்பத்துப் பகுதியில் கட்டளையிட்டபடி பலகாலும் சிவன் சீர்ச்சொற்களைக் கீதமாகச் சொல்லிப் பயின்ற குயில்களின் வழிவழி இனமாகிய குயில்களே என்ற குறிப்புமாம். சொல்லீரே! - மார்பன் என்னை இகர்வானோ? என்பதைச் சொல்வீராக. பிறவும் இவ்வாறு. பன் மாலை வரி - மாலைகளைப்போலத் தொடரும் வரிகளையுடைய. பண் - "செவ்வழி நற்பண் பாடும்" (தேவாரம்) என்பதுபோலப் பல பண்களையும். வண்டுகள் மிழற்றுவது பண்கள்; குயில்கள் கூவுவது அப்பண்ணிலமைந்த சொன்மாலையாகிய கீதங்கள். முன் மாலை - அந்திமாலைப் பொழுது. நகுதிங்கள் முகீழ் - புதிதாய் முளைத்துத் தோன்றும் பிறை. நகுதல் - உருவகம். முகிழ் விளங்கும் - முகிழ் - முகை. பூப்போல விளங்கும் என்றலுமாம். இதனைப் புடைமாலை மதிக்கண்ணி - என்று காண்க. பொன்மாலை மார்பன் - பொன்னின் தன்மையுடைய மார்பன். பொன்னார் மேனியன். மாலை - தன்மை - இயல்பு. "அடைமாலைச் சீலம்" என்றது இப்பொருளை ஆசியரியர் ஆண்டமை காண்க. புதுநலம் உண்டு - பிறர் ஒருவர்க்கும் ஆட்படாது புதுவதாகிய எனது அன்பின் நலத்தினை உண்டும். சிறப்பும்மை தொக்கது. -(2) கண்டகம் - நீர்முள்ளி: முண்டகம் - தாமரை; கைதை - தாழை; நெய்தல் - வெள்ளாம்பல். கருங்குவளை என்றலுமாம். மருதமும் நெய்தலும் விரவி வந்தன; திணைமயக்கம். இதனானே, இப்பதிகத்துள் மருதத்து உரிப்பொருளாகிய ஊடலும், நெய்தலுரிப் பொருளாகிய இரங்கலும் மயங்கி வந்தமையும் காண்க. பண்டரங்கம் - சிவன்கூத்து. பாட்டு ஒவா - பாட்டுக்களைப் பாடுதல் எப்போதும் ஒழியாத. என் தளிர் வண்ணம் கொண்ட - என் நலனை அனுபவித்த. குறிக்கொள்ளாது - குறிக்காமல்.நினையாமல். -(3) காஞ்சி - மரம். சொற்றூதாய்ச் சோர்வாளோ? - தனது எண்ணத்தைச் சொல்லும் தூது பிறர் ஒருவருமின்றி அயர்வாளோ? - (4) தென்றால் - தென்றல் என்றது ஈற்றயல் நீண்டு விளியுணர்த்திற்று. புறங்காடு - உலகமழியும் சுடுகாடு. பதி - அக்காலத்துத் தானழியாது நிற்கும் இடம். மதியாதார் வேள்விதனை மதித்திட்ட - முரண் அணி. அவர் மதியாவிட்டாலும் தாம் அவரை மதித்து மறக்கருணை செய்த என்று நகைச்சுவைப்படக் கூறியவாறு. மதித்தல் - அழித்தல் என்ற குறிப்புமாம். மதிக்கங்கை விதியாளன் - மதிக்கும் கங்கைக்கும் ஏற்றபடி விரிவும் ஒடுக்கமும் விதித்தவன். உயிர்மேல் விளையாடல் - உயிருணின்று ஆளாகக் கொள்ளுதல். - (5) மாதீர்த்தம் - மிகப் புனிதமுடைய - தூய. வீடு - விள்ளற்பா |