லதனைவிட்டுத் துன்பத்தினீங்குதல்; பேறு - சிவப்பேறு. பண்பொருந்த இசைபாடுதல் - "வருங்கடன் நீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" என்றபடி ஊழிமுடிவில் உலகங்களை ஒடுக்கிப் புனருற்பவத்தின் பொருட்டு நாததத்துவத்தை இயக்குதல். கண் பொருந்தும்போது - உறக்கத்துக் கனவு நிலை. -(6) கொன்றைத் தாரருளுதல் - அருளிப்பபபாடு. -(7) கணை ஆர - அம்பு எய்யப்படாமல் வில்லில் தங்க - பொருந்த. -(8) கூ - பூமி. கூவைவாய்மணி - பூமியிற் படும் மணிகள், குவை என்பது கூவை என வந்ததென்றலுமாம். காவிரிப் பூம்பாவை - காவிரியாகிய கன்னி. -(9) புள் உயர்த்தான் - அன்னப்பறவையினைக் கொடியில் உடையபிரமன். நாகப் பள்ளியான் - விட்டுணு. புள்ளிமானுரியுடையினையும் அரவத்தையும் கொண்டு இருக்கின்ற என்று கூட்டுக. கள்ளியேன் - வஞ்சமுடையேன். - (10) கலிமெலிய அழலோம்புதல் - "எரியோம்பிக் கலியை வாராமே செற்றார்" (பிள்ளையார் - கோயில் - 1. குறிஞ்சி.) குஞ்சிப்பூவாய் நின்ற சேவடி - தலையிற் பூப்போலச் சூட்டிக்கொள்ளும் திருவடி. கோடி - ஏற்றுக்கொள். தலவிசேடம் :- திருப்பழனம் - காவிரிக்கு வடகரையில் 50-வது தலம். திருவையாற்றை உட்கொண்ட சததத்தானம் என்னும் எழுதலங்களுள் ஒன்று. திருநாவுக்கரசு நாயனாரது பொதுத்திருத்தாண்டகத்தினுள் இவற்றைப் பாடியருளினது காண்க. அப்பூதியடிகளுடைய திங்களூர் இதற்கு வடக்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது. அப்பூதியடிகளுடைய திங்களூருக்கு எழுந்தருளுதற்கு முன்னும் பின்னுமாக இருமுறை இத்தலத்தைத் தரிசித்து இரண்டாம் முறையில் பாடிய பதிகத்தினுள் அப்பூதியாரது அடிமைத்திறத்தைச் சிறப்பித்தருளினர். (திங்களூர் வைப்புத் தலங்களுள் ஒன்று.) சுவாமி - ஆபத்சகாயர். அம்மை - பெரியநாயகி. பதிகம் 6. இதனைத் தஞ்சாவூர் என்னும் இருப்புப்பாதை நிலயத்தினின்றும் திருக்கண்டியூர்க் கற்சாலை வழியே 7 நாழிகையிலுள்ள திருவையாற்றை அடைந்து அங்கிருந்து கிழக்கே மட்சாலைவழி இரண்டரை நாழிகையில் அடையலாம். வடகுரங்காடுதுறைக்கு மேற்கே மட்சாலைவழி மூன்று நாழிகையளவிலும் இதனை யடையலாம். குறிப்பு :- அப்பர் சுவாமிகள் கைத்திருத்தொண்டு செய்த இந்த ஆலயம் மிகக்கிலமாயுள்ளது. நால்வர் திருவுருவங்களும் இல்லை. சைவவுலகம் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றது ! 1477. | எழும்பணியு மிளம்பிறையு மணிந்தவரை யெம்மருங்குந் தொழும்பணிமேற் கொண்டருளித், திருச்சோற்றுத் துறைமுத லாத் தழும்புறுகேண் மையினண்ணித் தானங்கள் பலபாடிச், செழும்பழனத் திறைகோயிற் றிருத்தொண்டு செய்திருந்தார். |
212 (இ-ள்.) எழும் பணியும்...அணிந்தவரை - எழுகின்ற படத்தையுடைய பாம்புகளையும் இளம்பிறையினையும அணிந்த சிவபெருமானை; எம்மருங்கும்..பணி மேற் கொண்டருளி - எங்குமுள்ள எல்லாத் தலங்களிலும் தொழுகின்ற திருப்பணியை மேற்கொண்டவராகித்; தழும்பு உறு கேண்மையில் - மாறாத அன்பினாலே; திருச்சோற்றுத் துறை முதலா நண்ணி - திருச்சோற்றுத்துறை முதலாகிய தலங்களைச் சேர்ந்து; தானங்கள் பலபாடி - கோயில்கள் பலவற்றையும் பாடிப் பணிந்து; செழும்...இருந்தார் - செழிப்புடைய திருப்பழனத்திறைவரது திருக்கோயிலில் திருத்தொண்டுகள் செய்து இருந்தனர். (வி-ரை.) எழும் பணியும் - பணி - பாம்புகள். பணத்தையுடையது பணி. பணி - படம். எழும் பணி என்றது மேலே படம் எடுக்கும் தன்மை குறித்தது. தழும்பு உறு கேண்மை - மாற்ற முடியாதபடி அழுந்திய அன்பின் உறைப்பு. உடலின் மேற்புறத்து உள்ள மாறாவடு தழும்பு எனப்படும். "வயனங்கண் மாயா |