பக்கம் எண் :


332திருத்தொண்டர் புராணம்

 

வடுச் செய்தான் காணேடீ" (திருவாசகம் - சாழல்). இங்கு அதுபோன்று மனத்தினுட் புகுந்து மாற்ற முடியாதபடி பதிந்துகொண்ட உணர்ச்சியினைத் தழும்பு என்றார்.

தானங்கள் - திருக்கோயில்கள். இறைவர் விளங்க வீற்றிருக்கும் இடங்கள்.

திருத்தொண்டு - மனம் வாக்குக் காயம் என்ற மூன்றாலும் செய்யும் திருத்தொண்டுகள். இருந்தார் - பல நாள் தங்கி யிருந்தனர்.

மேற்கொண்டருளும் - என்பதும் பாடம்.

212

திருச்சோற்றுத்துறை

I திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன்; வேதியா ! வேத நாவா
ஐவரா லலைக்கப் பட்ட வாக்கைகொண் டயர்த்துப் போனேன்;
செய்வரா லுகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே!

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பொய் பொருந்தும் உடலைப் பொருள் எனக் கருதியும், பூங்குழலினாரைக் கூறியும் காலம் போக்கினேன்; அயர்த்துப் போனேன்; சோற்றுத் துறையனார் என்னுள்ளச் சோர்வு கண்டருளினார். உலகீரே! நீங்கள் கண்டராய் நின்று என்னைப்போலக் காலத்தைக் கழிக்கவேண்டா; ஒருவனை நினையாது ஒதியே கழிக்கின்றீர்!; இனியும் பேர்த்துப் பிறவாமை வேண்டில், மறுமையைக் கழிக்க வேண்டில், எல்லியும் பகலும் ஏகாந்தமாக ஏத்துமின்!; அங்கதிரோனை அண்ணலாக் கருதாது வெங்கதிரோன் வழியே போவதற்கமைந்து கொண்மின்; திருச்சோற்றுத் துறையனாராகிய பிரானையே பிதற்றுமின்கள்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பொய்விரா மேனி - பொய்யாய உடல், பொருள் என - மெய்ப்பொருள் என்று; விரா - விரவும். பொருந்தும். -(2) கட்டராய் - துன்பத் தழுந்தியவர்களாய்; எல்லி - இரவு - ஊழி - முடிவு. -(3) ஏத்தும் - ஏத்துமின்; பல் இலம் - பல இல்லம். வீடுகள். சொல்லும் பொருளும் - சொற்பிரபஞ்சம் பொருட் பிரபஞ்சம். -(4) கண்டம் கறையராய் என்க. செய்த எல்லாம் பீடர் - பீடு - பெருமை. அவர் செய்கைகள் யாவும் அருளே. "உருவருள்" (சூத் - 47) என்பது சித்தியார். உள்ளச் சோர்வு கண்டு அருளினார் - உள்ளம் சோர்வது கண்டு அருள் புரிந்தார். -(5) பொருக்கென - விரைவாக. பந்தமாய் வீடுமாகிப் பரம்பர மாகிநின்று - "பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான்" (சித்தி - 1-44); "பந்தமு மாய் வீடு மாயினர்க்கு" (திருவா - பொற்); "பந்தம் வீடு தரும் பரமன் கழல்" (300). -(6) ஏற்றுத் தீர்த்தமாப் போதவிட்டார் - பரந்து அழிக்கவந்த கங்கைகையச் சடையினுள் ஏற்றுச் சிறிதாக, உலகர் தோய்ந்து தூயராகும்படி, உலகில் செல்ல விடுத்தனர். -(8) அங்கதிரோன் - சூரியன். அண்ணல் - தெய்வம். வெங்கதிரோன். அந்த ஞாயிறு. அகரச் சுட்டு தொக்கி நின்றது. வழியேபோதல் - "வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே" - (கழிப்பாலை - தாண்). உடன் வைத்தல் - வலக் கண்ணாகக் கொள்ளுதல். வணங்கும் - பூசிக்கும். தல வரலாறு. தலவிசேடம் காண்க. -(9) ஒதியே - சிவனை நினையாமலும் வணங்காமலும் சாத்திரம் ஒதி. சாத்திரம் பல பேசுஞ் சழக்கர்காள், பாத்திரஞ் சிவனென்று பணிதிரேல், மாத்தி ரைக்குள் ளருளுமாற் பேறரே" (குறுந்தொகை) பூங்குழலினாரை ஒதி என்றலுமாம். -(10) மற்று - வேறொன்றிலும். மறுமை - மறுபிறவி. "பேர்த்