தினிப் பிறவா வண்ணம்" (6) பெற்றதோர் உபாயம் - இயன்ற அளவு மனம்வாக்குக் காயங்களானாகிய சாதனம். பிதற்றுதல் - இடைவிடாது பலவாறும் சொல்லுதல். II திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து மேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்த சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேன் மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- அமரர் விரும்பு மிடமாம் சோலை மணங்கமழ் சோற்றுத் துறை உறையும், வினை தீர்த்திடும் விண்ணவர்கோன் - வெண்ணீற்றினன் - நஞ்சதனை உண்டு ஒடுக்க வல்லான் - மழுவினன் - என்னை யாளுடையான் ஆகிய இறைவனுக்கு மாலை மதியம், வெண்டலைமாலை, ஏந்து கைச்சூலம், பாயுந் திரைக்கங்கை, படமணி நாகம், வில்லாடி நின்ற நிலை என்ற இவை முதலியன வெல்லாம் அழகியன. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) தாம் - தாமே. தூயன - விதிப்படி தூய்மை பெற்றனவாக. -(2) தொண்டு - தொண்டர். -(3) அளக்கும். "அளக்கும் தன்னடி யார் மனத் தன்பினை", "அன்ப ராயிருப் பாரை யறிவரே" - (5) உழுவை - புலி. ஆற்றில் - கங்கையில். - (6) கோளர் - தீயர். தீமையாற் கொள்ளப்பட்டார். - (8) உண்டும் அதனை ஒடுக்கவல்லான் - உண்டாரை யெல்லாம் ஒடுக்கும் அந்த நஞ்சினைத் தான் உண்டும் தான் ஒடுங்காது அதனை ஒடுக்க வல்லவன். உம்மை உணர்வு சிறப்பு. இண்டை மதியம் - இண்டை மாலை போன்ற பிறை. "புடைமாலை மதிக்கண்ணி" (1476). III திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்; தில்லைச் சிற்றம் பலத்துறை செல்வனார்; தொல்லை யூழியர் சோற்றுத் துறையர்க்கே, வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- மடநெஞ்சமே ! நீ வல்லையாய்ப், பத்தியாய்ப், பட்டியாய், வாதியய்ப், பூணியாய், நீட்டி - தங்கிப் பற்றிப் - புல்லி - உண்டு - தாழ்ந்து சோற்றுத் துறையர்க்கே பணி செய்வாயாக. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கொல்லை ஏறு - "கொல்லைச் சில்லைச் சே" (தேவா. கோத்திட்டை). ஊழியர் - உழி ஊழி கண்டும் அழியாதிருப்பவர். வல்லையாய் - வலிமையுடையையாகி. -(2) முத்திஆக - வீடுபெறும்பொருட்டு. ஒரு தவம் - தவமும். முற்றும்மை தொக்கது. அத்தவமாவன அடியார்க்களித்தலும் அரனைவணங்குதலுமாம். அவற்றுள் அடியார்க்கு ஒன்றும் அளித்தாயில்லை. ஆதலின் அரனுக்கேனும் பத்தியாய்ப் பணிசெய் என்றபடி. அத்தியால் - அருத்தியால் - விருப்பத்துடன். அதனால் என்றலுமாம். அடியார்க்களித்தல் அரன் பணியினும் சிறந்த தென்பது வைப்பு முறையாலும் குறிக்கப்பட்டது. "மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன்" என்ற விடத்தும் இவ்வாறே விளக்கப்படுவது காண்க. -(3) ஒட்டி நின்ற...நோய் ஆணவம் என்னும் சகச மலம். ஒட்டிநிற்றல் அத்துவிதமாய்ப் பிரிப்பின்றி நிற்றல். பட்டியாய் - மீளா அடிமையாகி. -(4) வாதியாய் - பரமன் புகழ்களையே வாதிப்பவனாய் - சொல்பவனாய். -(5) நீட்டி - புகழ்களை நீளச்சொல் லிக்கொண்டு. -(6) நஞ்சினைப் பங்கி யுண்டதோர் தெய்வமுண்டோ சொலாய் - |