பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்335

 

வைத்துணர்ந்து சத்திசெய்தல். 3-வது பாட்டிலும் இவ்வாறே காண்க. அபயம் - அடைக்கலம். (திருவாசகம் - அடைக்கலப்பத்து). திகழ் ஒளி - ஒளிகளெல்லாம் திகழ்தற்குக் காரணமாய ஒளி. - (3) உற்றுரென்று ஒருவரையும் மில்லாதன் - "வேண்டுதல் வேண்டாமை யிலான்" (குறள்). - (4) ஊழி கண்டிருக்கின்றான் - காலங் கடந்தவன். - (5) ஞானக் கூத்தா - "ஞான நடனம்" (திருமூலர்) திருமந்திரம் திருக்கூத்துத் தரிசனம் என்ற பகுதியும், உண்மை விளக்கமும், ஞான சாத்திரம் பிறவும் பார்க்க. - (6) ஆர்ந்தவன் - நிறைந்தவன். முழுநிறைவு - சர்வ வியாபகம் என்பர். உலகெலாம் நீயேயாகி - இடைநிலைத் தீபம். குற்றாலம் மேய கூத்தா - "குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தா" (திருவாசகம்), "குற்றலாத்துறைகூத்தனல்லால்" (திருவங்கமாலை). குற்றாலம் - ஐம்பெரு மன்றங்களுட் சித்திரசபை எனப்படும். - (9) அறிந்தார் - புலவர் என்னும் தேவர்களுட் பெருந் தேவர்கள். இருவர் - அயன் - அரி. -(11) மெய்யவன் - திருமேனியுடையான்; உண்மை - சத்து - ஆணவன். அடியார்கள்...செய்யவன் - இறைவன் அடியார்களுக் கெளிமையா யருள் செய்யும் தன்மை குறிக்கப்பட்டது. செய்யவன் - செம்மைத் திரு வுடையவன்.

தலவிசேடம் :- திருச்சோற்றுத்துறை :காவிரிக்குத் தென்கரை 13-வது தலம். மூவர் பாடலும் பெற்ற பெருமையுடையது. கௌதம ஆச்சிரமம் எனப்படும். திருவையாற்றினை உள்ளிட்ட ஏழு பெருந்தலங்களுள் (சத்தத் தானம் ஒன்று. பஞ்ச காலத்தில் வந்தடைந்த சிவனடியார்களை யெல்லாம் தன்னிடத்து வைத்துக் காப்பாற்றிய தலமென்பது வரலாறு. "சிறந்தார் சுற்றம் திருவென்றின்ன, துறந்தார் சேருந் சோற்றுத் துறையே" என்பது ஆளுடைய நம்பிகள் தேவாரக் குறிப்பு. அருளாளர் என்னும் ஒரு வேதிய அடியாருக்கு அட்சய பாத்திரம் - உலவாத பிச்சைப் பாத்திரம் - அருளிய நலமென்பது வரலாறு. இந்திரன், சூரியன் முதலியோர் பூசித்த தலம். (திருநேரிசை பார்க்க.) சுவாமி - தொலையாச் செல்வர்; அம்மை - ஒப்பிலாவம்மை. சோறளித்தது பற்றி, முறையே ஒதனவனேசுவரர் எனவும், அன்னபூரணி எனவும் வடபெமாழியில் வழங்கப்படுவர். பதிகம் 6.

இது திருக்கண்டியூரினின்றும் கிழக்கில் 1 நாழிகையளவில் உள்ள திரு வேதிகுடியினின்றும் கரைவழி இரண்டு நாழிகையளவில் மட்சாலைவழி அடையத்தக்கது. குடமுருட்டி யாற்றைப் பரிசிலினாற் கடத்தல் வேண்டும்.

தானங்கள் பல - இவை திருக்கண்டியூர், திருவேதிகுடி, பசுபதி கோயில், திருச்சக்கரப்பள்ளி, திருவாலந்துறை முதலியன. பதிகக் குறிப்புக்கள் வந்துழிக்காண்க.

1478.

சாலநா ளங்கமர்ந்து, தந்தலைமேற் றாள்வைத்த
ஆலமார் மணிமிடற்றா ரணிமலர்ச்சே வடிநினைந்து,
சேலுலாம் புனற்பொன்னித் தென்கரையே றிச்சென்று,
கோலநீள் மணிமாடத் திருநல்லூர் குறுகினார்.

213

(இ-ள்.) வெளிப்படை.மிகப் பலநாள்கள் அங்குத் (திருப்பழனத்தில்) விரும்பி வீற்றிருந் தருளி, தமது திருமுடியின்மேல் திருவடி சூட்டியருளிய திருநீலகண்டரது அழகிய மலர்ச் சேவடிகளை நினைந்துகொண்டு, சேல்மீன்கள் உலவுகின்ற நீர்ச்செழிப்பையுடைய காவிரியின் தென்கரையேறிப் போய்க், கோலம் மிக்க அழகிய மாடக்கோயிலாகிய திருநல்லூரைச் சேர்ந்தனர்.

(வி-ரை.) சாலநாள் அங்கமர்ந்து - மிகப் பல நாட்கள் திருப்பழனத்தில் அமர்ந்தது அப்பூதி நாயனார் வழிபகட இருந்தமை கருதி என்பது பதிகத் திருக்கடைக்காப்பினாற் கருதப்படும். அமர்தல் - விரும்பி வீற்றிருத்தல். திங்களூர்க்குச்