தங்கு பெருங்காதல் - மனத்துள்ளே பல நாள் தங்கிக் கிடந்து இப்போது வெளிப்பாடுற்ற பெரிய காதல். காதலினால் - தொழ நினைந்தார் என்று கூட்டுக. இடையில் பல தலங்களிருப்பவும் திருவாரூரைத்தொழ நினைந்து சென்றனர். என்பது "காண்டலேகருத் தாய்நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்கழலடி, பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயினா லரையே" என்ற திருவாக்கா லறியப்படும். அவ்வாறு நினைத்தற்குக் காரணம் "தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமும்" பெறுதல் வேண்டுமென்று எழுந்த ஆசை என்க. அந்த ஆசைதானும் சமண்போந்து துரிசுபட்டதனை மாற்றும் வகையால் அடியார்க் கடிமை செய்யும் ஆசையால் எழுந்ததென்பது "மற்றிடமின்றி" "மெய்யெலாம்" என்ற பதிகங்களாற் பெறப்படும். 214 திருநல்லூர் திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| அட்டுமி னில்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்து மட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும் வகையென்கொலோ கொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங் கோளரவு நட்டநின் றாடிய நாத!நல் லூரிடங் கொண்டவரே. |
1 | படவே ரரவல்குற் பாவைநல் லீர்!பக லேயொருவர் இடுவா ரிடைப்பலி கொள்பவர் போலவந் தில்புகுந்து நடவா ரடிக ணடம்பயின் றாடிய கூத்தர்கொலோ வடபாற் கயிலையுந் தென்பானல் லூருந்தம் வாழ்பதியே. |
3 | நாட்கொண்ட தாமரைப் பூந்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான் வாட்கொண்ட நோக்கி மனைவி யொடுமங்கொர் வாணிகனை யாட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே. |
7 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- நாயனார் தமக்கு இறைவர் திருவடி தீக்கைசெய்த தலமாதலில் திருநல்லூரிற் பலநாள் தங்கிப் பாவுற்ற தமிழ்மாலை பலபாடித் திருத் தொண்டு செய்தொழுகினார் என்று ஆசிரியர் அறிவிக்கினார் (1462). அவ்வாறு பாடியருளிய பல பதிகங்களுள்ளும், "பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றிசைத்து" என்றதனால் அறியப்படும் பதிகங்களுள்ளும், இவ்வொரு பதிகமே நமக்குக் கிடைத்துளது! நமது தவக்குறை. தலைவனைப் பலநாட் பிரிந்து கனவிடைக்கண்டு பின் கனவுமிழந்து வருந்தும் தலைவி தோழிக்குரைத்த கூற்றாகிய கனவிழந்துரைத்தல் என்ற அகத்துறையின் குறிப்புடையது இத்திருப்பதிகம். "தில்லை சேரலர்போல், ஆவா கனவு மிழந்தே னனவன் றமளியின்மேற பூவாரகலம்வந் தூரன் றரப்பனே பாய்நலம்பாய், பாவாய் தழுவிற் றிலேன்விழித் தேனரும் பாவியனே" என்ற திருக்கோவையார் (355) காண்க. 4, 8, 9 திருப்பாட்டுக்கள் பார்க்க. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) அட்டுமின் - இடுமின். கடை - முற்றம் - முன்வாயில். வளைகொள்ளுதலாவது பலியிடும்போது மால் கொண்டைமையால் உடல் இளைக்க வளைகழன்று வீழ்தல். "சூழொளிய, வங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவான், நங்கை யிவளு நல்ந்தோற்றாள்" (அரிவை) என்ற ஞானவுலா இதனைச் சுவைபடப் பேசுவது காண்க. - (3) "வடபாற் கயிலையுந் தென்பானல் லூருத்தம் வாழ்பதியே", "நும்மூர்தா னேதோ வென்றேனுக் கொன்றாகச் |