சொல்ல மாட்டார்" (வெண்காடு - தாண்ட - 3), "பயின்றிருக்கு மூரேதோ பணியீ ரென்ன" (திருவொற்றியூர் தாண்டகம் - 5), "புறம்பய நம்மூரென்று போயி னாரே" என்றவாறு கனவிற் கண்ட தலைவரது ஊர் கேட்டுத்தெரிந்தது போல உரைக்கும் முகத்தால் கயிலையே போல்வது திருநல்லூர் என்று தலச் சிறப்புரைக்கும் கருத்து - (4) துஞ்சிடைக் கண்டு - கனவிடைத் தொழுதேற்கு - அகத்துறை, நெஞ்சிடை...நின்றனன் - "பொங்கிய அன்பொடு திளைத்து" என்று ஆசிரியர் இதனைக் குறித்தனர். மேல் 5-ம் திருப்பாட்டில் கண்ணுளும்...சேவடியே என்ற கருத்துமிது. - (6) தேற்றப்படத்...சிவனிருந்தான் - "வடபாற் கயிலையும் தென்பானல் லூருந்தம் வாழ்பதியே" என்ற கருத்தைப் பின்னும் விளக்கியது. சிவனை நல்லுரிற் கண்டு கொள்ளாதாரது நல்விதியின்மைக் கிரங்கிக் கூறியது. ஆற்றில்...ஆதர் - பழமொழி. ஆதர் - கீழ்கள். அறிவில்லார். "ஏதன் போர்க் காதனாய்" (ஆரூர் - பழமொழி - காந்தாரம்), "முன்பொருள் செய்யாதரே" (சிறுபஞ் - 20). குருடர் என்றலுமாம். காற்றிற் கடுத்து - காற்றினும் கடுக - வேகமாக. -(7) அமர்நீதியார் சரிதங் கூறித் துதிப்பது இத் திருப்பாட்டு. அவர் புராணம் பார்க்க. கோவணம் கா - பிரமசாரியராய் வந்த இறைவர் அமர் நீதியாரிடம் சொல்லியது. கிறிபட - பலதிறமாக வன்மை பேசி. (526 . 527). ஒர் வாணிகன் - அமர்நீதீயார். அகலிடம் உரைக்கும் - உலகெலா மறிந்து சொல்லும். "நாட்டாரறிய முன்னாளில்."- (8) அறை - அறைதலால் எழும் ஒசை. பரிசழித்தான் - பசுத்தன்மை போக்கினான். "பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின்றார்தாம்" (ஆமாத்தூர் - தாண்டகம் - 3). -(9) அன்னியர் அற்றவர் - களைகணாவார் பிறரொருவரு மில்லாதவர். -(10) சிவன் பெருங்கோயில் (ஆகிய) சிவபுரமும் புகவல்லேன் என்க. நல்லூரிருந்தபிரான் நம்மை ஆண்டவன் ஆதலின் சிவமாநகர் குறுகவல்லேன். 3-6-வது பாட்டுக்களின் கருத்தை மேலும் வற்புறுத்தியது. சிவன் - என்ற சிறப்புப் பெயராற் றேற்றம்படக் கூறியது காண்க. "சிவனெனு நாமந் தனக்கே யுடைய" (தேவா). இப்பதிகம் 11 திருப்பாட்டுக்கள் கொண்டது. 1480. | நல்லூரி னம்பரருள் பெற்றுப்போய்ப், பழையாறை பல்லூர்வெண் டலைக்கரத்தார் பயிலுமிடம் பலபணிந்து சொல்லூர்வண் டமிழ்பாடி, வலஞ்சுழியைத் தொழுதேத்தி, யல்லூர்வெண் பிறையணிந்தார் திருக்குடமூக் கணைந்திறைஞ்சி, |
1481. | நாலூர்தென் றிருச்சேறை குடவாயி னறையூர்சேர் பாலூரு மின்மொழியாள் பாகனார் கழல்பரவி, மேலூர்தி விடைக்கொடியார் மேவுமிடம் பலபாடிச், சேலூர்தண் பணைசூழ்ந்த தென்றிருவாஞ் சியமணைந்தார். |
216 1480. (இ-ள்.) வெளிப்படை. திருநல்லூரில் இறைவரிடம் அருள் விடை பெற்றுக்கொண்டு சென்று, பழையாறையில், பற்கள் வெளித்தோன்றவுள்ள வெண்டலை யோட்டினைக் கையிலேந்திய சிவபெருமான் எழுந்தருளிய பல கோயில்களையும் பணிந்து, நல்ல சொற்களால் நிரம்பிய வளப்பமுடைய திருப்பதிகங்களைப்பாடி, அதன்பின், திருவலஞ்சுழியைச் சென்று தொழுது ஏத்திப் போய், மாலையில் வெளிப்படும் வெண்பிறை யணிந்த பெருமான் எழுந்தருளிய திருக்குடமூக்கின் அணைந்து பணிந்து, 215 |