1481. (இ-ள்.) வெளிப்படை. திருநாலூரும், அழகிய திருச்சேறையும் திருக்குடவாயிலும், திருநறையூரும் என்ற இத்தலங்களில் எழுந்தருளிய பால் போன்ற இனிய மொழியினையுடைய உமையம்மை பாகனாருடைய திருவடிகளைப் பரவிச் சென்று, விடையினை மேற்கொள்ளும் ஊர்தியாகவும் கொடியாகவும் உடைய இறைவர் எழுந்தருளிய பல தானங்களையும் பாடிப்போய்ச், சேல்மீன்கள் உலாவும் தண்ணிய வயல்கள் சூழ்ந்த அழகிய திருவாஞ்சியத்தினை அணைந்தனர். 216 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1480.(வி-ரை.) பழையாறை....இடம்பல - பழையாறையில். ஆறை - ஆறை வடதளி - ஆறை மேற்றளி என்ற மூன்று சிவத்தலங்கள் உள்ளன. ஆதலின் பயிலும் இடம் பல என்றார். அமர்நீதியார் புராணத் திறுதியில் தலவிசேடம் பார்க்க. பல என்றது இரண்டுக்கு மேற்பட்டதை யுணர்த்தும். பல ஊர் வெண் தலைக் கரத்தார் - அயன் கபாலமாகிய பிச்சைப் பாத்திரத்தைச் சிவபெருமான் கையில் ஏந்தியுள்ளார். அந்த மண்டையோட்டிற் பற்கள் தேற்றம்படத் தெரிய உள்ளன என்க. ஊர் - வெளித் தோற்றும். ஊர் - உவமவுருபு என்பாருமுண்டு. ஊர்தல் - போதல் என்று கொண்டு, பல்லில்லாத என்று ஈண்டுக் கொள்வாருமுண்டு. "பல்லை யுக்க படுதலையில்" முதலிய தேவாரங்களும் காட்டுவர். வெண்தலை - கபாலம். சொல் ஊர் வண்தமிழ் - சொல் ஊர்தலாவது நற்சொற்களால் நிரம்புதல். நாயனாரது முயற்சியின்றியே திருவருளால் நற்சொற்கள் தாமே வந்து பெய்து கொள்கின்றன. வண் தமிழ் - வண்மையாவது வேண்டுதலின்றியே குறையெலாம் நீக்கித்தருதல். இஃது அப்பூதியார் சரிதத்துள் தேற்றம்பெற விளங்குவது காண்க. அல் ஊர் வெண் பிறை - அல் - மாலை. இரவின் முற்பகுதி. ஊர்தல் - விளங்குதல். செல்லுதல் என்றலுமாம். மாலலையின் முளைத்துப் பெருகத் தொடங்குதல். மூன்றாம் பிறை. அருள்பெற்று - பணிந்து - ஏத்தி - அணைந்து - இறைஞ்சி - பரவிப் - பாடி - அணைந்தார் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக்கொள்க. 215 1481.(வி-ரை.) தென் திருச்சேறை - தென் திருவாஞ்சியம் - தென் என்பன அழகு குறித்து நின்றன. பாகனார் - நாலூரிலும், சேறையிலும், நறையூரிலும் எழுந்தருளிய இறைவர் என்க. விடை என்பதனை மேல்ஊர்தி என்பதனுடனும், கொடி என்பதனுடனும் கூட்டுக. இடைநிலைத்தீபம். பால் ஊரும் இன் மொழியாள் - அம்மையாரின் மொழிகள் பால்போன்ற தன்மையன. ஊர் - உவமவுருபு. "பண்ணினேர்மொழி யாளுமை" என்றது காண்க. பால் - சுவைக்கும், மரணத்தை வராமற்காக்கும் தன்மைக்கு எடுத்துக்காட்டு. சேல் ஊர்தல் - நீர்வளம் குறித்தது. பணை - வயல்கள். ஆற்றுநீருடன் வந்த சேல்மீன்கள் வயல்களிற்புகுந்து உலாவும். பண்ணை என்பது பணை என நின்றது. குறிப்பு :- இந்த இரண்டு பாட்டுக்களிலும் சொல்லப்பட்ட தலங்களைப் பின்னரும் நாயனார் சென்று வணங்கிப் பாடியிருத்தலும் கூடும். "பொருங்கு புனலார் பொன்னியினி லிரண்டு கரையும் பொருவிடையார், தங்கு மிடங்கள் புக்கிறைஞ்சித் தமிழ்மா லைகளும் சாத்திபோய்" (திருநா - புரா - 301); "பதிபலவும் காதல் கூரச் சென்றிறைஞ்சி" (மேற்படி - 311); "நெய்த்தான மேமுத லாக, மாடுயர் தானம் பணிந்து" (மேற்படி - 386); "பொன்னிநா டதுவணைந்து, வாம்புனல்சூழ் |