வளநகர்கள் பின்னும்போய் வணங்கியே" (மேற்படி - 412) என்று பொதுவாகக் குறிப்பதன்றிச் சிறப்பாகத் தனித்தனி ஆசிரியர் கூறினாரலார். ஆதலின் அத்தலப் பதிகக் குறிப்பும், பிறவும் இங்குத் தரப்படுகின்றன. தலவிசேடம் - பழையாறை - அமர்நீதியார் புராணம் பார்க்க. 216 திருவலஞ்சுழி I திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| ஒத மார்கட லின்விட முண்டவன், பூத நாயகன் பொற்கயி லைக்கிறை, மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப், பாத மேத்தப் பறையுநம் பாவமே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- வலச்சுழியீசனை ஏத்தப் பாவம் பறையும்; அவனது அடிமைத் திறத்தாவன்; அவனைச் சிலர் பாவித்தொழும்பர் பயில்கிலார்; வலஞ்சுழி வலங் கொள்வாரடி யென் தலைமேலவே. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பறையும் - அழியும். நீங்கும். -(2) தொழும்பர் - ஆளானவர். பயிலுதல் - பல காலமும் பல வகையாலும் போற்றுதல். -(3) இளையகாலம் - கருவி கரணங்கள் ஒய்ந்து போகாமல் உள்ள காளைப்பருவம். துளையிலாச்செவி - சிவன்புகழ் கேட்கப்பெறாத செவிகள் கேள்விப்பொறியில்லாதவை என்பது. "தோளாத சுரையோ தொழும்பர் செவி" (பொது - குறுந்). உடல் வளையுங் காலம் - மூப்புப் பருவம்வந்து மெலியும் பருவம். களைகண் - ஆதரவு; பற்றுக்கோடு. -(4) மாணி - பிரமசாரி. மார்க்கண்டர். குறைவிலா - வலிமையா லொன்றும் குறைவில்லாத. இனி என்று கொல்? - அரிதிற்கிடைத்த இப்பிறவியிலன்றி வேறெப்போது? - (5) விண்டவர் - அறத்தினீங்கியவர், அடிமைத்திறத்து ஆவன் - அடிமையாக அமைவேன். ஆக்கம் பெறுவேன். அண்டன் - அண்டங்களை யெல்லாம் உடையவன். தேவன், உயிர்களால் அண்டப்பட்டவன் என்றலுமாம். இப்பாட்டு அரனடிமைத்திறத்தையும், மேல்வரும் பாட்டும் 10-வது பாட்டும், அடியார்க்கடிமைத் திறத்தையும் போற்றுவன. அரனடிமைத்திறம் ஒரு பாட்டாலும், அடியாராடிமைத்திறம் இரண்டு பாட்டுக்களாலும் போற்றப்பட்டமை அடியாரடிமைத்தின்உயர்வு காட்டுதற்கு. ஆளுடையபிள்ளையாரது (பண் - நட்டராகம்) இத்தலத் தேவாரத்தினுள் இவ்விரண்டுமே போற்றப்பட்டதும், "வலஞ்சுழி வாணனை வழிபடு மதனாலே என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே" என்று அரன்பணியைச் சாதனமாகவும், "வலஞ்சுழி நாதன் மெய்த் தொண்டரோ டினிதிருந் தமையாலே விண்டொழிந்தன நம்முடை வல்வினை" என்று அடியார் கூட்டத்தைப் பயனாகவும் வைத்துப் போற்றப்பட்டதும் காண்க. - (6) வலஞ்சுழியான் அடியடைந் தவர்க்கடிமைத் திறத்தாவனே - அடியார் பணி. (7) ஏ கொள - ஏ - அம்பு. தொட்ட அளவால். - (8) தலைவனைக் கண்டு தன் வசமிழந்து பிதற்றும் தலைவியை நோக்கிக் கூறிய தோழி கூற்றாகிய அகப்பொருள்பற்றி யமைந்தது இப்பாட்டு. கண் பனித்தல் - கைகூப்புதல் - நண்பனுக்கு என்னை நான் கொடுப்பேனென்றல் - இவை காதல் மிக்க அவசமாகும் மெய்ப்பாடுகள். பொனை - பொன்னை. தலைவியை. அருமைப்பாடு பெறச் சொல்லியது. -(10) மலங்கு - மீன் வகை. (238) II திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| அலையார் புனற்கங்கை நங்கைகாண வம்பலத்தி லருநட்ட மாடி வேடந் தொலையாத வென்றியார் நின்றி யூரு நெடுங்களமு மேவி விடைமேல் கொண்டு |
|