| இலையார் படைகையி லேந்தி யெங்கு மிமையவரு முமையவளு மிறைஞ்சி யேத்த மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- இத்திருப்பதிகத்தில் ஒரு திருப்பாடலே கிடைத்துள்ளது! ஏனைப் பல தலங்களிலும் பொருந்திய இறைவர் திருவலஞ் சுழியிற்புக்கு அதனை இடமாகக் கொண்டு பொருந்தியிருந்தனர். பதிகப் பாட்டுக்குறிப்பு :- கங்கை நங்கை காண - கங்கையும் நங்கையாகிய உமையம்மையும் காணும்படி. உம்மைத்தொகை. பொன்னி சூழ்ந்த - காவிரிக் கரையில் உள்ள தலம். இங்குக் காவிரி ஆதிசேடனது பிலத்துவாரத்தி லிறங்கி விடச், சோழராசன் பிரார்த்தனைக்கிரங்கி ஏரண்ட முனிவர் அப்பிலத்தில் இறங்கக், காவிரி வலஞ்சுழித்து மேல் எழுந்த இடம் என்பது தல வரலாறு. இடமா - நிலைபெற்ற விளக்கமாகிய இடமாக. திருவலஞ் சுழியும் திருக்கொட்டையூர்க் கோடீச்சரமும் III திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் கல்லா னிழற்கீ ழிருந்தான் கண்டாய் பருமணிமா நாகம் பூண்டான் கண்டாய் பவளக்குன் றன்ன பரமன் கண்டாய் வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் குருமணிபோ லழகமருங் கொட்டை யூரிற் கோடீச் சரத்துறையுங் கோமான் றானே. |
1 திருச்சிற்றம்பலம் பதிகக்குறிப்பு :- கொட்டையூரிற் கோடீச்சரத் துறையும் கோமான், கருமணிபோற் கண்டத்தழகன்; மாதேவன்; கலைபயில்வோர் ஞானக் கண்ணானான்; அண்ட கபாலத் தப்பாலான்! சிவன்; சதாசிவன்; சண்டனை நல் அண்டர்தொழச் செய்தான்; அணவரியான்; அவிநாசி; பண்டரங்கள்; பகவான்; வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன்! எட்டெட் டிருங்கலையு மானான் - முதலிய தன்மைகளா லறியப்படுவன்; அவனே வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வருமணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் - ஆதிசேடனது பிலத்தினுட் புக்க காவிரி மீண்டு மேலெழுந்து வலஞ்சுழித்து வந்த வரலாற்றுக் குறிப்பு. இவ்வாறே பாட்டுக்கள் தோறும் கூறுதலும் காண்க. மாதேவன் - தேவதேவன். இப்பதிகத்தினுட் சிவபெருமானது பல நாமங்களும் போற்றப்படுதல் காணலாம். பரமன் - சிவன் (3); சதாசிவன் (5-6); சங்கரன் (6); அவிநாசி - ( நாசமில்லாதவன்) (7); பகவன் (7) முதலியவை பார்க்க. வரதன் - வரங்கொடுப்பவன். கொட்டையூர் - தலப்பேரும், கோடீச்சரம் - கோயிலின் பெயருமாம். -(2) கலைபயில்வோர் ஞானக்கண் - கலைபயில்வோருக்கு ஞானமாகிய கண்கொடுப்பவர். அண்டகபாலம் - அண்டகோளகையின் உச்சி. மலைப்பண்டம் - காவிரி பிறந்து கீழ் ஒடிவரும் மலையிற்படு பொருள்கள்; சந்து - அகில் - பொன் - மணி முதலியன. -(3) தாமரை - வேதியர்க்குரிய அடையாளமாலை. தேவர்களுக்குள் சிவன் ஒருவனே பிராமணன் என்ப. சிவன் - பேரின்பத்துக்கக் காரணன், முற்றுணர்வினன், தூயதன்மையன் என்பன முதலிய இறைமைக்குணங்களுணர நின்றது. சிவஞான போதம் 5-ம் சூத். "மன்னுசிவன்" என்ற விடத்துரைத் தவை பார்க்க. -(4) புட்பாகன் - விட்டுணு. புள் - கருடன். மைந்தன் - வன்மையை |