பக்கம் எண் :


342திருத்தொண்டர் புராணம்

 

உடையவன். மைந்து - வல்லமை. -(5) சண்டன் - சண்டீசர். சங்கரன் - சுகத்தைச் செய்பவன். மருநது - வினை நோய் தீர்த்தலின் மருந்தென்றார். உருவகம். "தீராநோய் தீர்த்தருள வல்லான்", "மூலநோய் தீர்க்கும் முதல்வன்" இறைவன் எல்லார்க்கும் மருந்தாவானாயினும் இங்கு மாமுனிவர் தம்முடைய மருந்து என்றது, ஏனைய பிறர் அறியார்; மாமுனிவர்கள் அறிந்து பிறர்க்கும் அதனால் பயனுறச் செய்பவர் என்றதாம். - (7) அணவு அறியான் - அணவுதல் - அணிமையாதல். அவிநாசி - நாசமில்லாதவன். அவிநாசியினது ஊராதலின் அவிநாசி எனப்பட்டதொரு தலம் உண்டு. அது கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற எனப்பட்டதொரு தலம் உண்டு. அது கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. பகவன் - ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறும் பகம் எனப்படும். இவ்வாறினையு முடையவன் பகவன். மாதவன் - இங்கு விட்டுணுவைக் குறித்து நின்றது. வரதன் - வரம் - வேண்டும் பொருள்; தன் - தருபவன். -(9) தசரதன்தன் மகன் அசைவு தவிர்த்தான் - இராவணனைக் கொன்றதால் வந்த இராமனது பழியைப் போக்கியவர். "தென்னிலங்கை யிராவணன்றன் சிரமீரைந்துந்ணித்த, மன்னவனா மிராமனுக்கு வரும்பெரும்பா தகந்தீர்க்கும் பிஞ்ஞகர்" (திருநா. புரா. 408) எட்டெட்டு இருங்கலைகள் - 64 கலைஞானங்கள். (குறிப்பு) - தலவரலாற்றிற் காணுமாறு கொட்டையூரில் தவஞ்செய்திருந்த ஏரண்ட முனிவர் இங்கு வந்து பிலத்தில் இறங்கியதனால் காவிரி பிலத்தினின்று மீள வெளியே வலஞ்சுழித் தெழுந்தமையாலே இத்தல விசேடமும் கொட்டையூர்த் தல சம்பந்தமாய் நிகழ்ந்தமையும் குறிக்கும்பொருட்டு இவ்விரு தலங்களையும் சேர்த்து இத்திருப்பதிகம் அருளிச் செய்யப்பட்டது போலும்? (ஏரண்டம் - ஆமணக்கு. கொட்டைச் செடி).

தலவிசேடம் :- திருவலஞ்சுழி - காவிரிக்குத் தென்கரை 25-வது தலம். முன் உரைத்தவாறு காவிரி வலம்சுழித்த இடமாதலின் இப்பெயரெய்தியது. இங்குக் காவிரி மேலைக்காவிரி என வழங்கப்பெறும். ஆதிசேடன் பாதாளத்தினின்றும் ஒரு சிவராத்திரியில் பிலத்தின் வழிவந்து நான்கு யாமங்களினும் நான்கு தலங்களிற் பூசித்தான் என்றும், அவற்றுள் இஃதொன்று என்றும், ஏனையவை திருநாகேசுவரம், திருப்பாம்புரம், திருநாகைக்காரோணம் என்ற மூன்றுமாம் என்றும் வரலாறு கூறப்படும். அவ்வாறு சேடன் வந்த பிலத்தின்வழிக் காவிரி உள்ளே இறங்கிவிட, அது கண்ட சோழ அரசர் வேண்டுதலுக்கிரங்கி, இறைவர் காவிரி இறங்கிய அந்த இடத்தில் ஒரு சடைத்தலையேனும் முடித்தலையேனும் பலியிட்டால் காவிரி வெளிப்படுமென்று அசரீநி வாக்கின்மூலம் அறியவே, கொட்டையூரில் தவஞ்செய்துகொண்டிருந்த ஏரண்டமுனிவர் பிலத்தினுள் இறங்கக், காவிரி வெளிப்போந்து வலஞ்சுழித்துப் பெருகிற்று என்பது தலவரலாறு. கோயிலில் பிலத்துவாரத்தில் திரிணாவார்த்தேசுவரரும் அருகில் ஏரண்டமுனிவரும் வீற்றிருக்கின்றனர். இத்தலம் திரிணாவர்த்தம் என்றும் தட்சிணாவர்த்தம் என்றும் வழங்கப்படும். தேவர்கள் அமுதம் பெறப் பாற்கடலைக் கடைந்த காலத்தில் அமுதம் திரளும்படி பூசித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இங்குக் கொண்டுவந்து தாபித்துப் பூசித்தனன். அவ் வெள்ளைப் பிள்ளையார் விளக்கமாய்த் திருக்கோயிலின் முன்பு வீற்றிருந்தருள்கின்றார்.பூசித்த தலம். சுவாமி - கபர்த்சீர். அம்மையார் - பெரியநாயகி. தீர்த்தம் - காவிரி. பதிகம் 5.

இத்தலம் சுவாமிமலை என்ற இருப்புப்பாதை நிலயத்தினின்று வடக்கே வயற்கால் வழி கால்நாழிகையளவில் அடையத்தக்கது.

குறிப்பு :- இத்தலத்துக்கு வடக்கில் காவிரியையும் அரிசொல் ஆற்றையும் பரிசினைாற் கடந்து சென்று ஒருநாழிகையளவில் திருவேரகம் என்னும் சுவாமிமலையை (முருகப்பெருமானது நான்காவது படைவீடு?) அடையலாம்.