பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்343

 

திருக்குடமூக்கு

I திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

பூவ ணத்தவன் புண்ணி னண்ணியங், காவணத்துடை யானடி யார்களைத்,
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர், கோவ ணத்துடை யான்குட் மூக்கிலே.

1

காமி யஞ்செய்து காலங் கழியாதே, ஒழி யஞ்செய்தங் குள்ளத் துணர்மினோ!
சாமி யோடு சரச்சு வதியவன், கோமி யும்முறை யுங்குட மூக்கிலே.

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- தொண்டர்காள்! பிறவி நீங்க வேண்டில், பண்டை வினைபற்றற வேண்டில், காமியஞ் செய்து காலங் கழியாதே, ஒழியம் செய்து உள்ளத்து உணர்மின்; பிதற்றுமின்; தொண்டராகித் தொழுது பணிமின்; பூத்தரடிக் கழியாதே, பூவணத்தவன் - அடியார்களை ஆவணத்துடையான் - காளி விசை தீர்கென்று கூத்தாடி - நக்கரையன் - ஆசிய - சிவனைக், கங்கை - யமுனை - கன்னி - சாமி சரச்சுவதி - கோமி - கோதாவிரி - உறையும் குடமூக்கில் பணிமின்.

பதிகப் பாட்டுக்குறிப்பு :- பூவணத்தவன் - "பூவண்ணம் பூவின்மணம் போல" என்றபடி அருளொடு எங்கு நிறைந்தவன். பூவணம் என்ற தலத்தில் விளங்கு பவன் என்றலுமாம். புண்ணியன் - "புண்ணியப் பொருளாய் நின்றான்." அடியார்களை அங்கு நண்ணி ஆவணத்து உடையான் என்க. "என்றயோ டென்னப்ப னேழேழ் பிறவியும், அன்றே சிவனுக் கெழுதியஆவணம்" (திருமந்திரம்). ஆவணம் - ஒலை. இங்கு அடிமை ஒலை குறித்தது. ஆளுடையநம்பிகளைத் தடுத்தாட்கொண்ட சரித வரலாறு காண்க. தீவணத் திருநீறு மெய்பூசி - நீறுபூத்த நெருப்பு. "உலர்ந்த கோமயத்தை வாங்கிச், செக்கரந் தழலவாய்ப் பெய்து சிவந்திட வெதுப்பிவாங்கி", "இவ்வண்ண மிருக்கு மெங்க ளிறைவண்ண வடிவு மந்தச், செவ்வண்ண மேனி பூத்த திருவெண்ணீ றதுவும்" (திருவிளை - புரா - மண்சு -107 - 108); "நீற்றினை யணிந்ததுவெ னின்னிறைவ னென்றே, சாற்றினை யுயிர்க்கிடர் தணிக்க வென வெண்ணாய்; தோற்றியுள தம்புதல்வர் துன்பமுறும் வெந்நோய், மாற்றும் வகை யன்னைய ரருந்தி மருந்தாம்" (திருவாத - புரா - புத் - சரு - 76). ஒர் கோவணத்து உடையான் - ஒற்றைக் கோவணத்தை உடையாக உடையவன். -(2) பூத்தாடி - தோன்றி யழிதலாகிய விளையாட்டினைச் செய்து? -(3) கங்கை - கன்னி - ஏழு தீர்த்த மாதாக்களில் இருவர். கன்னி - காவிரி. -(4) ஒதா நாவன் - ஏனையர்போல ஒதாமல், இயல்பாகவே ஞானங்களை யுணர்ந்தவன். "கல்லாமே கலைஞானங் கற்பித்தான்". தான் பிறரை ஒதாத - துதிக்காத - நாவுடையான் என்றலுமாம். "சேர்ந்தறியாக் கையான்" (திருவா) என்றாற்போல. ஏதானும் இனிதாகும் - ஏதானும் - இனிய வல்லவும். - "தீமைதானு நன்மையாப் பயப்பதே" (மறுமாற் - தாண்.) இயமுனை - கோதாவரி - ஏழு பொந்தீர்த்தங்களுள் மற்றும் இருவர். -(8) காமியம் - உலகில் புலன்வழிச் சென்று வேண்டியவற்றையே. ஒமியம் - ஒமகாரியம். ஓமம் புறத்தும் அகத்தும் செய்தல். இது புறம்பே அக்கினி காரியம் செய்யு முறைப்படி, அகத்தே, குண்டலித் தானமான உந்தியில் ஞானவனலை எழுப்பி அதனுள் விந்துத்தானத் தமிழ்தமாகிய நெய்யைச் சுழுமுனைநாடி இடைநாடியாகிய சுருக்குச் சுருவங்களால் ஒமித்தல். உள்ளத்துணர்மினோ - உள்ளத்து. அர்ச்சித்துப் புருநடுவிற் றியானித்துப் பூசியுமின் என விரித்துரைத்துக் கொள்க. உள்ளத்து அர்ச்சித்தலாவது புறத்தே பூசை செய்தல்போல இதய பங்கயத்தில் முதல்வனை, ஐம்பொறியடக்கல் கொல்லாமை பொறை அருள் அறிவு வாய்மை