படலம் முதல் திருக்கல்யாணப்படலம் வரை உள்ள பகுதியில் விரித்துரைக்கப்படுவன. திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணமும் பார்க்க. "குரும்பை முலை மலர்க்குழலி" என்ற நம்பிகள் தேவாரமும் காண்க. வருந்தும் வான் தவங்கள் என்க. வான் - பெருமை குறித்தது. -(2) சமணர் சம்பந்தம்பற்றி நாயனாரது சரித வரலாற்றின் அகச்சான்று. தீர்த்து அருள்செய்தார் - பிறவியில் வரும் பிணிகளேயன்றிப் பிறவியும் தீர்த்தனர். "இனிப் பிறவாத தன்மைவந் தெய்தினேன்" - நம்பிகள். -(3) வேடனாய் வந்து விசயற்கருள்செய்த வரலாறு. -(4) பசீரதனது தவத்துக்கு இரங்கிக் கங்கையை அழைத்துச் சடையில் ஏற்றுநின்ற வரலாறு. -(5) சண்டீசநாயனார் சரிதம். சிறந்த பேர் - "சண்டீ சனுமாம் பதந் தந்தோம்." -(6) காலபயிரவராய் வந்த வரலாறு. -(7) திரிபுரமெரித்த வரலாறு. -(8) அனலுருவாய் நீண்ட சரிதம். II திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்; கூரி தாய வறிவுகை கூடிடும்; சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி, நாரி பாகன்ற னாம நவிலவே. |
1 | தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்?; ஒப்பில் வேந்த ரொருங்குடன் சீறிலென்? செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய, அப்ப னாருள ரஞ்சுவ தென்னுக்கே. |
6 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- சேறைச் செந்நெறியப்பர் உளர். நெஞ்சமே! நாம் அஞ்சுவ தென்னுக்கு?; அவனது நாமம் நவிலப் புண்ணியம் பூரியாவரும்; பொய் கெடும்; பிறப்பு - மூப்பு - பசி - பிணி - இறப்பு நீக்கி இன்பம்வரும்; கூற்றுவனைத் துரக்கும் வழி அதுவே; வானமும் தரணியும் கம்பிக்கிலும், அரசர் சீறிவரினும் காம் அஞ்ச வேண்டுவதில்லை பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பூரியா - நிறைந்து. பூரித்தல் - நிறைத்தல்; பொய் - புண்ணியத்துக்கு மாறாகிய கீழ்மை. பொய்யினால் வருவது. கொடுவினை. கூரிதாய அறிவு - கூர்ந்த அறிவு. நன்மையிற் செல்வது, எத்துணை நுண்ணியதே யாயினும் தீமையிற் சென்றால் அது கடைபோகக் கூர்ந்த அறிவாகாது ஒழியும்; சீரியார் - சிறந்தோர் - அடியார். செந்நெறி - சேறையின் திருக்கோயிலின் பெயர். செம்மை (முத்தி) தரும் நெறியருளும் இறைவர் வெளிப்பட வீற்றிருக்குமிடம். நவில - வரும் எனக் கூட்டுக. விற்பூட்டு பொருள்கோள். மேல்வரும் இரண்டு பாட்டுக்களும் இவ்வாறே. வைகவே - என்ன மாதவஞ் செய்தனை (2) எனவும், வைக்கவே - எய்திடும் (3) எனவும் கொள்க. -(2) "என்ன பண்ணியஞ் செய்தனை நெஞ்சமே......வழிபடு மதனாலே" (திருவலஞ்சுழி - ஆளுடையபிள்ளையார்). வந்து வைகவே - வருதல் - வெளிப்படுதல். வைகுதல் - அவ்வாறு வெளிப்பட்ட நிலையில் நிலைத்திருத்தல். -(3) முப்பு - பசி - பிணி - இறப்பு - நரை திரை மூப்பு பிணி சாக்காடு என்னும் ஐந்து. இங்கு இப்பிறப்பிலேயும். மறப்பதின்றி - வைக்க - இடையறாது பொருந்தச்செய்ய. மார்க்கண்டர் சரிதம் காண்க. -(4) மாடு செல்வம். மயக்கு - "நில்லா தவற்றை நிலையின வென்றுணரும், புல்லறி வாண்மை" (குறள்). "பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருள்" (மேற்படி). ஊமர் - சொல்லுங் கருவியிருந்தும் சொல்லாதவர். அடியடைதற்குரிய தலை - மனம் - வாய் - முதலிய எல்லாக் கருவிகளும் தரப்பட்டும் பயன் பெறாமையின் ஊமர் என்றார். உருவகம். சேடர் - அரிவிற் சிறந்ததோர். சேடு - ஒளி. இங்கு அறிவொளி. ஆடலான் - ஐந்தொழிற்கூத் தியற்றுவோன். உயம்மினே - ஏகாரம் இரக்கங் குறித்தது. ஊமர்காள் - உயம்மினே என்றது வீணாக வாணாள் கழிக்கும் மக்களுக்கிரங்கி உபதேசித்தது. அடியடைவதுவே உய்யும் வழியா |