வது என்பதற்குரிய காரணம் மேல்வரும் 5 பாட்டுக்களா லுரைத்தருளினர். - (5) துரக்கும் - ஒட்டும், - (5) தப்பி - நிலையிற் பிறழ்ந்து. தரணி - நிலம். எல்லாவற்றையும் தரிப்பதால் தரணி எனப்படும். கம்பித்தல் - அசைதல். "வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்" (திருவிருத்தம்). ஒப்பில்....சீறிலென் - தனித்தனி தம்மை ஒப்பாரில்லாத பெருவன்மையுடைய எல்லா வேந்தர்களும் ஒன்றுகூடி ஒரு காலத்தில் ஒன்றுபோலவே சீற்றத்தைக் கொண்டாலும் எமக காவதென்னை?; செப்பம் ஆம் - காவல் ஆகும். -(7) ஒத்தொவ்வாத வுற்றார்கள் - செல்வமும் உதவியும் உண்டாயினபோது உடன்கூடி நின்று, அல்லுழிப் பிணங்கும் உறவினர். -(8) குலங்கள் - நலத்திற்கும், குற்றங்கள் - கேட்டிற்கும் காரணமாகக் கருதப்படும். இவைதாம் என்ன செய்ய வல்லன? - இவற்றால் நீ முறையே துலங்கி நின்றும் (தருக்கியும்), சோர்ந்தும், இவ்வனுபவங்களில் வீழாதே, அலங்கனார் - அலங்கல் - மாலை. அஃது அல் ஈறு குறைந்தும் அன் விகுதி பெற்று அலங்கன் என நின்று, உயர்வு பற்றிய பலர் பாலுணர்த்தும் ஆர் விகுதி பெற்றுவந்தது. அலங்கல் - விளங்குதல் என்று கொண்டு, எல்லாப் பொருள்களும் விளங்குதற் கேதுவாயுள்ளவன் என்றுரைத்தலுமாம். -(9) சுற்றமும் விழ விடாவிடில் - சுற்றமும் பற்றும் துணையும் விடாதிருப்பாராயின். "ஞாலத் தகட்டுட டோன்றி வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு" (தேவா). தலவிசேடம் :- இது உடையார் கோயில் என வழங்கப் பெறும். காவிரிக்குத் தென்கரை 65-வது தலம். தௌமியர் என்ற இருடி பூசித்த தலம். சுவாமி- செந்நெறியப்பர். அம்மையார் - ஞானவல்லி. பதிகம் 3. இது கும்பகோணம் வழியில் உள்ள நறையூர்ச்சித்தீச்சரத்துக்குத் தென்கிழக்கே கற்சாலை வழி 3 நாழிகை யளவில் உள்ளது. திருக்குடவாயிலிலிருந்து வடக்கே கற்சாலைவழி 2 நாழிகை யளவில் திருநாலூரை யடைந்து, அதினின்றும் வடகிழக்கே கரைவழி ஒருநாழிகையளவில் திருநாலூர் மயானத்தை யடைத்து, அதன் மேல் வடமேற்கே கற்சாலையில் ஒரு நாழிகை யளவிலும் அடையலாம். குறிப்பு :- சேறை என்ற பெயரால் இரண்டு ஊர்கள் உள்ளன என்பர். சிவ தலமும் வைணவ தலமுமா யிருப்பதனை இரண்டாகவும் கணிப்பர். பாட்டில் தென்றிருச்சேறை என்றது குறிக்கத் தக்கது. அது நேர் கற்சாலை வழியில் உள்ளது. இத் திருப்பாட்டில் நாலூர் - சேறை - குடவாயில் - நறையூர் என்ற வைப்பு முறை நாயனார் சென்றரளிய வழியைக் குறிப்பதாயின், நாயனார் நாலூரினின்றும் வடமேற்கு வழியில் போய் சேறையை அடைந்து, பின்மீண்டும அவ்வழியே தென்கிழக்கில் குடவாயில் சேர்ந்து, பின்னரும் அவ்வழியே வடக்கு நோக்கிச் சென்று நறையூரை அடைந்திருத்தல் வேண்டும் என்றும், அவ்வாறாயின், திருக் குடவாயிலினின்றும் தெற்கில் சோழசூடாமணி யாற்றைக் கடந்து புதுக்குடி வழியாகச் செல்லும் சாலைவழி அக்காலத்தில் வழிபோகக்கூடாத நிலையில் இருந்திருக்கக் கூடுமென்றும் கருதக் கிடக்கின்றது. ஆளுடையபிள்ளையார் சென்ற வழிபற்றி உரைப்பதும் கருதுக. (திருஞான - புரா - 403). திருக்குடவாயில் - நாயனாரருளிய பதிகம் கிடைத்திலது ! தலவிசேடம் வந்துழிக் காண்க. காவிரிக்குத் தென்கரை 94-வது தலம். திருநறையூர் - நாயனாரருளிய பதிகம் கிடைத்திலது! சிதலரித் தொழிந்தது போலும் ! காவிரிக்குத் தென்கரை 65-வது தலம். சித்தீச்சரம் என்பது இத்தலத்துக் கோயிலின் பெயர். |