பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்349

 

இடம்பல - பேணுபெருந்துறை - நாலூர்மயானம் முதலியன போலும்?

திருவாஞ்சியம்

திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

படையும் பூதமும் பாம்பும்புல் வாயத, ளுடையுந் தாங்கிய வுத்தம னார்க்கிடம்,
புடைநிலாவியபூம்பொழில்வாஞ்சியம், அடையவல்லவர்க்கல்லலொன்றில்லையே.

அருக்க னங்கி யமனொடு தேவர்கள், திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம், அருத்தி யாலடை வார்க்கில்லையல்லலே.

7

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருவாஞ்சியத்தை அடைய வல்லவர்க்கு அல்லல் இல்லை; பாவமில்லை; செல்வமாகும்; அங்குத் தங்குவார் அமரர்க் கமரர்.

பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) புல்வாய் - மான். தாங்கிய - தரித்த. அல்லலொன் றில்லை - துன்பஞ் சிறிதுமில்லை. பாவமில்லை (3), இல்லை யல்லலே (7) என்றவை இத்தம் தென்றிசையில் காசிக்குக் சமமாகச் சொல்லப்படும் ஆறுதலங்களுள் ஒன்று என்பதும், இங்கு இறப்பவருக்கு மரணவேதனை இல்லை என்பதும் ஆகிய வரலாறுகள் குறிப்பன. ஆளுடைய நம்பிகளருளிய இத்தலத் தேவாரத்துள் (காந்தார பஞ்சமம்) "வாஞ்சியத் துறையும், ஒருவனா ரடியாரை யூழ்வினை நலிய வொட்டாரே", "மருந்தனா ரடியாரை வல்வினை நலிய வொட்டாரே", " நினைப்பவர் வினை நலிவிலரே" என்று அருளியிருப்பதும் கருதுக. -(2) பறப்பை - கருடன் முதலிய பறவையின் வடிவம் பொருந்த அமைக்கும் வேள்வித் திண்ணை. பசு - வேள்விப் பசு. கறை - மதியின் முயற்கறையும், சாபக் கறையும். சிறப்பு - தலச் சிறப்பு. -(6) அற்று - பிற பற்றுக்க ளெல்லாவற்றையும் அறுத்து. பற்றின்றி - வேறொரு பற்றுமின்றி. "மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாதமே மனம் பாவித்தேன்" (நம்பிகள் - தேவா). யாரையும் - துணையாவார் யாரையும். "அற்றவர்க் கற்றசிவன்" (ஆளுடைய பிள்ளையார் - தேவா). -(7) அருக்கன் - சூரியன்; அங்கி - தீக்கடவுள். இயமன் - கூற்றுவன்; காலன் முதலிய தேவர்கள் இங்குப் பூசித்துப் பேறு பெற்றமை தலவரலாறு. அருத்தி - ஆசை - குறிப்பு :- இப்பதிகத்து ஏழு பாட்டுக்களே கிடைத்தன; ஏனையவை சிதலரித் தொழிந்தன போலும் !

தலவிசேடம் :- திருவாஞ்சியம் -ஸ்ரீ வாஞ்சியம் என வழங்கப்படும். விட்டுணு இலக்குமியை - (ஸ்ரீயை) வாஞ்சித்து இறைவனைப் பூசித்த தலமாதலின் இப்பெயரால் வழங்கப்படுவது. இயமன் முதலியோர் பூசித்தமை பதிகத்துட் காண்க. இயமன் சந்நிதி திருக்கோயிலுக்கு வெளியே தென்கீழ்த் திசையில் உள்ளது. தலவிசேடங்கள் முன்னர்ப் பதிகப்பாட்டுக் குறிப்பினுள் உரைக்கப்பட்டன. காவிரிக்குத் தென்கரையில் 70-வது தலம். மூவர் பதிகமும் பெற்ற பெருமையுடையது. சுவாமி - வாஞ்சியநாதர்; அம்மை - வாழவந்த நாயகி. தீர்த்தம் - குப்தகங்கை. மரம் - சந்தனம். பதிகம் 3.

இது நன்னிலம் என்ற இருப்புப்பாதை நிலயத்தினின்றும் மேற்கே கற்சாலை வழி 1 நாழிகை யளவில் திருக்கொண்டீச்சரத்தையும், அங்கிருந்து மேற்கே 1 நாழிகை யளவில் நன்னிலத்துப் பெருங்கோயிலையும், டந்து தென்மேற்கே மாப்பிள்ளைக் குப்பம் மட்சாலை வழி 3 நாழிகையளவில் புத்தாற்றின் வடகரையில் உள்ளது. புத்தாறு குடமுருட்டி யாற்றின் ஒரு பிரிவு. நாயனார் சென்ற வழி நறையூர்ச் சித்தீச்சரத்தினின்றும் தெற்கில் திருமலைராஜனாற்றின் தென்கரையில்,