பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்351

 

திருவாரூர்ச் சிறப்பிற் காண்க. சேண்திகழ் வீதிகள் பொலிய - என்றதும் இக்கருத்துப் பற்றியது.

சேண் திகழ் வீதிகள் - திருவாரூர் வீதிகளின் ஒளிசேணிலும்சென்று விளங்குவது. தேவர்கள் இங்கு வந்து வழிபடும் சிறப்புக் குறித்து.

218

வேறு

1484.

வல்லமண் குண்டர்தம் மாயை கடந்து மறிகடலிற்
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தா ரெனுங்களிப்பால்
எல்லையி றொண்ட ரெயிற்புறஞ் சென்றெதிர் கொண்டபோது
சொல்லி னரசர் வணங்கித் தொழுதுரை செய்தணைவார்,

219

1485.

"பற்றொன் றிலாவரும் பாதக ராகு மமணர்தம்பால்
 உற்றபிணியொழிந்துய்யப்போந்தேன்பெறலாவதொன்றே?
 புற்றிடங் கொண்டான்றன் றொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமென்"
 றற்ற வுணர்வொடு மாரூர்த் திருவீதி யுள்ளணைந்தார்.

220

1484. (இ-ள்.) வெளிப்படை. கொடிய மனவண்மை யுடைண அமணர்களாகிய கீழ் மக்களது மாயையினைக் கடந்து, மறிகடலினின்று கல்லையே தெப்பமாகக் கொண்டு ஏறிப்போந்த பெரியவர் வந்தார் என்ற மகிழ்ச்சியினாலே, அளவில்லாத தொண்டர்கள் நகர்த் திருமதிலின் புறத்தில் வந்து எதிர்கொண்ட போது, திருநாவுக்கரசு நாயனார் அத்திருத்தொண்டர்களைத் தொழுது தோத்திரித்து அணைவாராய்,

219

1485.(இ-ள்.) புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் - புற்றினையிடமாகக் கொண்டெழுந்தருளி யிருக்கும் வன்மீக நாதரது தொண்டர்களுக்குத் தொண்டராகும் புண்ணியமாவது; பற்று ஒன்று இலா அரும்பாதகர் ஆகும் அமணர் தம்பால் உற்றபிணி ஒழிந்து உய்யப் போந்ததேன் - ஒன்றாலும் பற்றத் தகாதவர்களாய்ப் பெரும் பாதகர்களாகிய அமணர்களிடத்திற் பொருந்திய பிணி தீர்ந்து உய்யும் பொருட்டாக வந்து புகுந்தவனாகிய நானும்; பெறலாவதொன்றே - பெறத்தக்க தொன்றாகுமோ?; என்று - என்று கூறி; அற்ற....அணைந்தார் - தம்முணர்க்கச்சி யென்ப தற்றவராய்த் திருவாரூர் திருவீதியினுள் அணைந்தனர்.

220

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1484. (வி-ரை.) மாயை கூந்து......கல்லே மிதப்பாக - ஆழும் தன்மையுடைய கல்லினையே மறிகடலி னடுவுள் மிதவையாக ஆக்கி ஊர்ந்து வந்தது செயற்கரிய பெருஞ்செயல்; அதனினும் பெரிது வலிய அமண்குண்டர் தம்மாயை கடந்து போதல் என்பது குறிக்க முன் வைத்தார். இவற்றையே ஆரூர்த் திருத்தொண்டர் கருதித், திருவருட்பெருமை கண்டு, எதிர்கொண்டனர். இச்சிறப்பே உலகில் பலரும் வியந்து பாராட்டிப் போற்றுகின்றதென்பது. "பொங்குகடற் கன்மிதப்பிற் போந்தேறுமவர் பெருமை, யங்கணர்தம் புவனத்தி லறியாதார் யாருளரே?" (அப்பூதி - புரா - 15) என்று அப்பூதிநாயனார் இதனையே தேற்றம்பெற எடுத்துக் கூறுதலாற் காணப்படும்.

எல்லையில் தொண்டர் - "அளவிலாத பெருமையராகிய அளவிலா அடியார்.(5).

எயிற்புறம் - திருமதிலின் புறத்தே. எயில் - நகரினைச் சுற்றிய மதில்.

தொண்டர் எதிர் கொண்டபோது - வணங்கித் தொழுது உரை செய்து - இவ்வாறே ஆளுடைய பிள்ளையாரையும் ஆளுடைய நம்பிகளையும் திருவாரூர்த்