தொண்டர்கள் எதிர்கொண்டனர். பெரியார் மூவரும் அத்திருத்தொண்டர்களை நோக்கிப் பாடிப் போற்றிப் பின்பே நகரினுட் புகுந்தனர். இதுபற்றி 269-ல் உரைத்தவை பார்க்க. உரை செய்து - திருப்பதிகத்தினாற் றொண்டர்களது பெருமையைப் போற்றி செய்து. பதிகக் குறிப்புப் பார்க்க. சொல்லி னரசர் - பதிகப் பொருளினருமையும் சொல்லினருமையும் குறித்தது. அணைவார் - என்று - அற்ற உணர்வொடும் - வீதியுள் - அணைந்தார் - எனமேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. இது முதல்ஐந்து பாட்டுக்கள் இப்பதிகப்பாட்டின் யாப்பில் அமைந்தன. 219 1485. (வி-ரை.) பற்றொன்றிலா.....என்று - இது பதிகக் கருத்தும் குறிப்பும் ஆசிரியர் காட்டுகின்றபடி. பதிகக் குறிப்புப் பார்க்க. பற்றொன்று இலா - ஒன்றும் பற்று இலா என்க. முற்றும்மை தொக்கது. வீடு நெறிக்கு ஒரு பற்றுக்கோடுமில்லாத என்றலுமாம். பற்று - பற்றத்தக்க நன்மை. அரும் பாதகர் - அரும் என்பது மிகுதி உணர்த்திற்று. பிணி - பிணிப்பு. கேதம் - பாவம் என்ற பொருளில் வந்தது. ஒழிந்து உய்யப் போந்தேன் - ஒழிதலால் உய்யும்படி; அந்தப் பிணிமுற்றும் ஒழிந்தாலன்றி உய்தியில்லை என்பது. சூலை நோயால் அப்பிணி ஒழிந்து கரையேறித் திருவதிகை சேர்ந்தது இறைவரருளப் பெற்றசெயல். தூங்கானை மாடத்திற் சூலவிடபக்குறிகள் தோளிற் பொறிக்கப் பெற்றது தாம் வேண்டிப் பெற்ற செய்தி. அது அமண் சமயத்தொடக்குண்டு போந்த உடல் தன்னுடனே யுயிர்வாழத் தரியாமைக்காகப் பெற்ற உடற்சுத்தியாம். இங்குத் திருவாரூரில் நாயனார்பெற நிநை்தது தாம் பெற்ற சிவநந்தானுபவம் மேன்மேற் பெருகுதற்கும், வாதனை தாக்காதிருத்தற்கும் உரிய சீரடியாரிணக்கமாம். இவை சிவஞானபோதம் 12 சூத்திரத்தினுட் பேசப்படுவன. "அமணரைவிட் டுய்யு நெறிகண்டிங் குய்யப் போந் தேனுக்கும்" (9), "அமணர் திறமது கையகன்றிட் டுற்ற கருமஞ்செய்ய துய்யப்போந் தேனுக்கும்" (10) என்ற இத்தேவாரப் பாட்டுக்கள் பத்துப் பதினோராஞ் சூத்திரங்களின் கருத்தை உட்கொண்டன. இதனையே ஆசிரியர் "உற்ற பிணியொழிந் துய்யப் போந்தேன்" என்று விளக்கினர். பண்ணியம் - உய்யப்போந்தேன் - பெறலாவ தொன்றே - என்று கூட்டுக. போந்தேனாகிய நானும். இழிவு சிறப்பம்மை தொக்கது. பெறலாவ தொன்றே? ஏகார வினா ஐயங் குறித்தது. தொண்டர்க்குத் தொண்டாம் புண்ணியம் - "அடியார்க்கு மடியேன்" என்று திருத்தொண்டத் தொகையுட் போற்றிய கருத்துமிது. என்று - என்ற கருத்துடைய பதிகத்தை அருளி. இது வாக்கின் றொண்டு. அற்ற உணர்வொடும் - தம் உணர்வு - ஆன்மபோதம் - முற்றும் நீங்கிய உணர்ச்சியுடனே. இது மனத்தினிலைபேறாகிய தொன்டு. ஆரூர்த் திருவீதியுள் அணைந்தார் - இது மெய்யின் தொண்டு. பெறலாவ துண்டே - உற்ற உணர்வெலாம் - என்பனவும் பாடங்கள். 220 திருவாரூர் - திருமூலட்டானம் திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ வலம்பலம் பாவரு தண்புன லாரூ ரவிர்சடையான் |
|