பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்357

 

அலை என்றலுமாம். -(3) ஏழ் பொழில் - ஏழுலகங்கள். -(4) உன்னும் அவர்க்கு உண்மையன் - நினைக்கின்ற அடியார்கள்பால் விளங்கி நிற்பவன். -(5) வெங்கதிரோன் - ஞாயிறு. துஞ்சு இருள் - உலகங்களெல்லாம் அழிந்த ஊழி. -(6) சங்கரன் - சுகத்தைச் செய்பவன். சதாசிவன் - இறைவரது அருவுருவமாகிய ஒளிமேனி. சிவலிங்கத் திருவடிவம். -(7) வம்பு - மணம். -(8) உள்ளமாய்உள்ளத்தே நின்றாய் - உயிர்குயிராய்க் கலந்து நிற்கும் நிலை குறித்தது. உள்ளம் - இங்கு உயிர் என்ற பொருள் தந்து நின்றது. "மனமணி யிலிங்கமாக" (தேவா). உள்ளம் - மனம் என்னும் உட்கரணமாகிய தத்துவம் என்று கொண்டு மாயைப் புணர்ப்பினால் அந்தத் தத்துவமாகி, அதீதக் கலப்பினால் அதனுள் நிற்பவன் என்றலுமாம். மணாளா - உயிர்களை ஆட்கொள்ளும் மணவாளன். வானவர்கோன் தோள் துணிந்தது. இந்திரன் முடிமேல் வளை எறிந்த திருவிளையாடல். -(9) சாவாமே - பிறப்பும் இறப்பும் இல்லாமல் நித்தியமான வீட்டின்பம்பெற வைத்து. - (10) கரம் நான்கும் முக்கண்ணும் - உருவத் திருமேனிகளுள் ஒன்று. ஆற்ற - மிகவும். அருமந்த - அருமையுடைய.

1488. (வி-ரை.) "காண்டலே கருத்தாய் நினைந்து" இது பதிகத் தொடக்கக் குறிப்பு. பதிகக் கருத்துமாம். இக்கருத்துப் பற்றியே, திருநல்லூரிற் றங்கிய போது நாயனார் "திருவாரூர் தொழ நினைந்தார்" (1479) என்று முன்னர் ஆசிரியர் சரித வரலாறு கூறியதும் காண்க.

காண்டல் - கண்டு தொழுதல். கருத்தாய் நினைந்து - அதனையே மனத்துள் ஊன்றக்கொண்டு.

கலைப் பதிகம் - கலைஞானங்கள் பலவும் விளங்குதற்கிடமாகிய பதிகம். கலைஞானமாகிய பதிகம் என்றலுமாம். பதிகப் பாட்டுக் குறிப்புக்கள் பார்க்க.

தூண்டா விளக்கன்ன சோதி - பிறரொருவராற் கொளுத்தப்படாததும் தூண்டப்படாததுமாகியதொரு விளக்குப் போன்ற சுயஞ்சோதி. ஆயின் "தூண்டிய சுடர்போலொக்கும் சோதியான், காண்டலு மெளியா னடியார்கட்கு" (பாண்டிக் கொடுமுடி - குறுந்), "தூண்டு சுடரனைய சோதி கண்டாய்" (மறைக்காடு - தாண்). என்றற்றொடக்கத்த திருவாக்குக்களோடு இக்கருத்து மாறுபடுமன்றே? எனின், படாது. என்னை; இங்குத் தூண்டா விளக்குக்கு உவமித்தார். அத்திரு வாக்குக்களில் தூண்டு சுடருக்கு உவமிக்கப்பட்டது. சுடர் வேறு; விளக்கும் (இடம்) வேறு; "சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே" (திருவாசகம்); அல்லதூஉம், அங்குத் தூண்டு சுடர் என்றது முன்னர் வெளிப்படாது மறைந்து, பின்னர்க் கடைதல் முதலிய செயல்களால் முன்னின்று வெளிப்படும் சுடர் குறிக்கப்பட்டது. "மறைய நின்றுளன்....முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே" (தேவா).

தூண்டு சுடர் - ஒளிப்படு விளங்குதலையும், தூண்டா விளக்கு - இடைவிடாது விளங்குதலையும், சூழ் ஒளி விளக்கு ஒளி மயமாய் நின்று பிறருக்கு ஒளி தருதலையும் குறிக்கும் என்றலுமொன்று.

துதித்து உருகி - முன்பாட்டில் உடம்பெல்லாம் புளகம் போர்ப்ப அன்புகூரக் கண்ணீர் பெருகத் தாண்டகம் புனைந்ததுவும் உருகித் துதித்த செய்கையேயாயினும், இங்குக் கூறியது அதன் மேலும் துதித்தது. இப்பதிகம் சந்நிதியில் நின்று பாடிய இரண்டாவது பதிகம்.

ஈண்டுதல் - அணிமையாதல். இங்கு அடியார் ஈட்டம் நெருங்குதல் குறித்தது.

கோயில் சூழ வலஞ் செய்து....புறத்தணைந்தார் - கோயிலினுள் புகும்போதும், அங்கு நின்றும் புறம் போகும் போதும் வலஞ்செய்து போதல் முறை.

வாயிற் புறத்தணைந்தார் - "காண்டலே கருத்தாய்" என்ற பதிகம் பாடித் துதித்த பின்பே புறம் போந்தனர் என்பது "கழலடி பூண்டு கொண்டொழிந்தேன் புறம் போயினாலறையோ?" என்ற பதிகக் குறிப்பினாலறியப்படும்.

223