பக்கம் எண் :


358திருத்தொண்டர் புராணம்

 

திருவாரூர்

III திருச்சிற்றம்பலம்

பண் - சீகாமரம்

காண்ட லேகருத் தாய்நி னைந்திருந் தேன்ம னம்புகுந் தாய்க ழலடி
பூண்டு கொண்டொழிந் தேன்புறம் போயினா லறையோ!
ஈண்டு மாடங்க ணீண்ட மாளிகை மேலெழுங்கொடி வானி ளம்மதி
தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.

1

நாடி னார்கம லம்ம லரய னோடி ரணிய னாகங் கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பரனைப்
பாடு வார்பணி வார்பல் லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத் துள்புக்குத்
தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூ ரம்மானே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருவாரூர் அம்மானே! பலநாள் உன்னைக் கண்டு தொழுவதே கருத்தில் வைத்திருந்தேன். அதுவும் நீ என் மனம் புகுந்தருளியதனாலாயிற்று. இன்று வந்து நேர்கண்டு கொண்டு கழலடி பூண்டுகொண்டொழிந்தேன்; எனக் கொரு களைகண்ணாவாய் நீ என்று ஒடுங்கி வந்தடைந்தேன்; பிழைப்பன எல்லாம் ஒழிப்பாய்; இனி என்ன குறையுடையேன்!; பிறத்தலும் பிறந்தா லிறத் தலுமுடைய இப்பிறப்பினை இழிந்தேன்; ஆதலின் உன் திறத்தனாய் ஒழிந்தேன்; என்சிந்தையுள் நின்று நீபிரியுமா றெங்ஙனே? பிழைத்தோயும் போகலொட்டேன்; என் நெஞ்சினுள் உன்னை வளைத்துக் கொண்டிருந்தேன்; வலிசெய்து போக லொட்டேன்; உன்னை இங்குத் திருவாரூரில் வெளிப்பட நேர்கண்டு கொண்டதே போல என் சித்தத் துள்புக்குத் தேடிக் கண்டுகொண்டேன்; இனிப் புறம் போயினா லறையோ? (புறம்போயினாலும் பிரியாது அடைக்கலமாவேன்.)

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) காண்டலே - நேர் கண்டு கொண்டு தொழுவதனையே. ஏகாரம் தேற்றம். பிரிநிலையுமாம். கருத்தாய் - பிறிதொன்றிலு மின்றி, அதுவே குறியாய், உட்கோளாய்; மனம் புகுந்தாய் - மனம் புகுந்தாயாதலின் நினைந் திருந்தேன்; நினைந்திருந்தே னாதலின் மனம் புகுந்தாய் என இருவழியும் உரைக்க நின்றது. "அவனருளாலே அவன்றாள் வணங்ங்கி", "காண உள்ளத்தைக் கண்டு காட்டலின், அயரா வன்பி னரன்கழல் செலுமே" என்ற திருவாக்குக்கள் காண்க. கழலடி பூண்டு கொண்டு ஒழிந்தேன் - நேர் கண்டுகொண்டு அதுவே பற்றாக அமைந்து கொண்டேன். ஒழிதல் - தீர்தல். புறம் போயினால் அறையோ? - உன் திருமுன்பு நின்றும் வெளிப் போயினாலும் பிரியுமா றுளதே? உன் அடைக்கலப் பொருளே யாவேன். அறையோ? - இரக்கக் குறிப்புப்பட வருவதோர் இடைச்சொல். அறை - சொல்லுதல் என்று கொண்டு, அறையோ? சொல்லுந்தரமோ என்றலுமாம்; புறம்போயினால் வருந்துன்பம் சொல்லும் தரமே என்க. "சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே!" (பியந்தைக் காந்தாரம் - நாயனார்). ஈண்டு - நெருங்கிய. கொடி - வெண் கொடிகள். "விதானமும் வெண்கொடியு மில்லா வூரும் அவை....வூரல்ல" - கொடி வானிள மதி தீண்டி - என்றது கொடிகள் வானளாவ வுயர்த்துக் கட்டிய நிலை. மதி தீண்டிவந்துலவு - என்றது கொடிகள் மதிமண்டலம் வரை போயும் பின்னர் இங்கு வந்து அசைகின்றன. மதிமண்டல முதலியவற்றின் அழியுந் தன்மையைப்போக்கி அழியாத தன்மை தருகின்ற திந்நகரே என்று கண்டது போன்றும், உணர்த்துவது