பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்359

 

போன்றும் உளதென்பது அணிநயம். தட்டி எழுப்புவது போன்று கொடி தீண்டியதனால் நல்லுணர்வு பெற்று மதி இங்கு வந்துலவி வழிபட்டுய்ய நின்ற தென்பது ஒரு குறிப்பு. -(2) கடம் - காடு; பட நடம் ஆடினாய் - பட - உண்டாக - தோன்ற; அழிந்த உலகம் மீளவும் தோற்றுமாறு நடமாடினாய். களைகண் - உறுதுணை - சார்பு. அடி ஒடுங்கி - திருவடிச் சார்பினுளடங்கி. பிழைப்ப - பிழையாயினவற்றை. முடங்குதல் - வில்போல வளைந்திருத்தல் இறால் மீன்களின் இயல்பு. முதுநீர்மலங்கு - ஆழ்ந்த பெருநீர்களில் வாழ்தல் மலங்குமீன்களின் ளியல்பு. செங்கயல் - கயல்களினியல்பு. களிறு - களிற்றுமீன். இறால் - மலங்கு - வாளை - கயல் - சேல் - வரால் - களிறு - மீன்கீளின் வகைககள். தண்கழனி - பலவகை மீனினமும் சேர்தல் நீர்ச்சிறப்பு. -(3) அரம்பையர் - தேவருலகத்து நாடக மங்கயைர். தியாகேசர் இந்திரனால் தேவலோகத்து வைத்து வணங்கப்பட்டபோது உபசரித்தமை பற்றி இங்கு அவனுடன்வந்து வணங்குவார்கள். அருளிப்பாடியர் - இறைவனது கட்டளைகளை நிறைவேற்றுவோர். அருளிப்பாடு - கட்டளை. "அருளிப்பாடி யரோ டருமுனிவர்" (கோயிற் புரா - இரணி - 52) உரிமை - வழிவட்ட உரிமையும் ஏவல் செய்யும் உரிமையும். உருத்திர பல்கிணத்தார்....கபாலிகள் - சைவத்துள் பலவகை அகப்புறச் சமயத்தார். விரிசடை விரதியர் - மரவிரதியர். அந்தணர் - முனிவர். சைவர் - சைவவாதி முதலியோர். மானக்கஞ்சாறனாருக்குக் காட்சி தந்த கோல முதலியன காண்க. கபாலிகள் - கபாலியர். ஒங்கு தெங்கு - தென்னை நீண்டு வளரும் இயல்பையும், இலையார் கழுகு - கமுகின் இலையடர்ந்து விளங்கும் தன்மையினையும் உணர்த்தின. இளவாழை - வாழை ஈன்ற பின் குலையுடன் வெட்டி விடப்படுதலால் நிலையில் உள்ள எஞ்சியவை என்றும் இளைமையுடனுள்ளன. தெங்கு - கமுகு - வாழை - மா - மாதுளம் - மருதநிலக் கருப்பொருள். என்ன குறையுடையேன் - என்றும் ஒன்றாலும் குறைவில்லாமை அடியார் தன்மை. "கும்பிடலே யன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்", "யாதுங் குறைவிலார்" என்பன வாதியாகத் திருக்கூட்டச் சிறப்பிற் காண்க. "ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே" (மறு - தாண்). -(5) நீறுசேர் - நீறு வந்து கிடைந்த. அடைந்தொழிந்தேன் - அடைந்தேன். ஒழிதல் - துணிவுப் பொருள் குறித்து நின்றது. "திறத்தனை யொழித்தேன்." -(8) வண்டு - தும்பி - வண்டு வகை. சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் - முகை மலரும் பருவத்துத் தேன் உண்ண வண்டுகள் மேல் மொய்த்து ஊதுவதனால் மலரிதழ்கள் திறப்பன. உள்ளிருந்த தேன் வழியும். -(6) அளித்து அன்புகொண்டு. அளி - அன்பு. தொழுமவர் மேல் - வினைகெடுமென்று - வையகம் கலந்தாட - "பிணிதான் தீருமென்று பிறங்கிக் கிடப்பாரும்" (குறிஞ்சி - ஆரூர் -2). -(7) என்சிந்தையுள்...பேகலொட்டேன் - தவறுதலாற்கூட உன்னைப் புறம்போகவிடாமல் என் மனத்துட் பிடித்து வைத்துக் கொண்டேன்; நீ எங்ஙனம் பிரிவது? "சின்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே" (திருவா). பெரிய செந்நெல் - பிரம்புரி - கெந்தசாலி - திப்பியம் - நெல் வகைகள். 2-ல் நீர்ச்சிறப்பும், 4-ல் அச்சிறப்பினால் ஒங்கிப் புறத்துச் சூழ்ந்த மருதநில மவகையும், கூறி, இங்கு மருதத்துக்குரிய றிப்புடைய நெல்லைக் கூறினார். அரியும் - ஒருவகை நெல்லை அரிந்தெடுத்த தன்கீழ் மற்றொருவகை விளையும் சிறப்புக் குறித்தது. -(8) பிறத்தலும்....உளதே - நான் பிறப்பினை இழித்தேன் என்பதற்குக் காரணம் கூறியபடி. அறத்தையே...திறத்தனா யொழிந்தேன் - பிறவி தீதென்று கண்டார் செய்கை கூறியபடி. அறம் - சிவதர்மம். ஆர்வம் - செற்றம் - குரோதம். சிவதர்மங்களில் மனம் செல்லாது தடைபுரிவதால் இவை நீக்கத் தக்கன. -(9) எப்போதும்..போக