கனியிருப்பக் காய் கவர்தல் - என்பது பழமொழி. பயனுள்ள பொருள் பெறக் கூடியதா யிருப்பவும் அது செய்யாது பயனற்றத்தும் கேடு தருவதும் ஆகிய பொருளை வலிதிற்றேடுதல் என்பது கருத்து. இங்கு இத்திருப்பதிகத்துள் ஒவ்வோர் பாட்டிலும் இவ்வாறு ஒவ்வோர் பழமொழியை வைத்துக்காட்டி யருளியிருத்தலால் இப்பதிகம் "பழமொழிப் பதிகம்" என்று வழங்கப்படும். பயனுள்ள பொருளாவது திருவாரூர்ப் பொருமனை அடைதல்; என்று வழங்கப்படும். பயனுள்ள பொருளாவது திருவாரூர்ப் பெருமானை அடைதல்; பயனற்ற கேடாவது அமண் சார்பினைப்பற்றி அழிந்தது. கவர்ந்த கள்வனேன் - பயனற்ற கேடாகிய அந்தப் பொருளுக்காக வலிந்து சென்று அழிந்தமை குறிப்பு. கள்வன் - இறைவன், நாம் நன்மையடையத் தரப்பட்ட வாழ்வை அதற்குப் பயன்படுத்தாது கேட்டினிற் செல்லவைத்தமைகள்ளத் தன்மை - திருட்டு - ஒப்புவித்த பொருளை அபகரித்தல் - ஆகும் என்பது கருத்து. எய்தரிய கையறவு - கையறவு - துன்பம். இஃது இப்பதிகம் அருளியபோது நாயனாரது மனமகிந்த நிலை. தாம் அவதரித்த சைவச்சார்வு இருக்கவும் தாமே வலிந்து சென்று சமண் சார்பிற் சாலநாள் போக்கித் தம் வாழ்நாளைக் கழித்தமை பற்றி நாயனார் மிக வருந்தி இதனைப் பாடியருளினர் என்பது அவ்வொரு செயலினுக்கே பத்துப் பழமொழிகளால் உவமித்து வருந்தியதால் விளங்கும். அங்கும் இருந்தார் - அத்தலத்தில் எழுந்தருளி யிருந்தனர். பலகாலம் அங்குத் தங்கிப் பணி செய்திருந்தனர் என்பது பல திருப்பதிகங்களின் குறிப்பினாலு மறியப்படும். கொய்யுமா - கையறவாம் - என்பனவும் பாடங்கள். 224 IV திருச்சிற்றம்பலம் | பழமொழி - பண் - காந்தாரம் |
| மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் றாடொ ழாதே யுய்யலா மென்றெண்ணி யுறுதூக்கி யுழிதற்தென் னுள்ளம் விட்டுக் கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலு மாரூ ரரைக் கையினாற் றொழாதொழிந்து "கனியிருக்கக் காய்வர்ந்த" கள்வ னேனே. 1 என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட டென்னையோ ருருவ மாக்கி யின்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட் டென்னுள்ளங் கோயி லாக்கி யின்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண் டருள்செய்த் வாரூ ரர்தம் முன்பிருக்கும் விதியின்றி "முயல்விட்டுக் காக்கைப்பின் போன" வாறே. |
2 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- சைவச் சார்பு பெறும் நல்லூழ் வாய்க்கப்பெற்றும் திருவாரூர்ப் பெருமானைக் கருதாது சமண்சார்பில் வலிந்து சென்று பலகாலங் கழித்த எனது செயல் கனியிருக்கக் காய்கவர்ந்த கள்ளம் முதலிய பழமொரீகளா லறியப்படும் வீண் செயலேயாயிற்று என்றிரங்கிக் கூறியது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சண்ணித்தல் - பூசுதல். "வெண்ணீறு சண்ணித்த மேனியெம்மான்" - (நம்பிகள் - திருவதிகை - 6) உறிதூக்கி உழிதந்து - நீருடைய குண்டிகைகளைச் சிறு உறியில் வைத்துத் தூக்கித்திரிதல் சமண குருமாருள் ஒரு வழக்கு. உள்ளம் விட்டு - உள்ளத்தை அவர்கள் வசமாக விட்டு. உழிதந்த என் உள்ளத்தை விட்டு - அவர் வசமாதலை நீக்கி என்றலுமாம். தொழாது விட்டு உள்ளம் உழிதந்து எனக்கூட்டி உரைத்தலுமாம்.- (2) என்பிருத்தி...உருவ |