பக்கம் எண் :


362திருத்தொண்டர் புராணம்

 

மாக்கி - "கால்கொடுத் திருகை யேற்றி" (திருநேரிசை) முதலியவை பார்க்க. புகப்பெய்கிட்டு - "ஆவிவைத்தார்" (நேரிசை). உடலுக்குள் உயிரைக் சேரச்செய்தல். இன்பிருத்தி - இனப்மென் றெண்ணவைத்து. "மால் கொடுத்து" (நேரிசை). வினை தீர்த்து - இட்டு - என் உள்ளம் கோயில் ஆக்கி - வீனை தீர்த்த பின்பே இறைவனைச் சார்தல் இயலும். "என் சிந்தைப், பாழறையுனக்குப் பள்ளியறையாக்கிச், சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி, செந்தைநீ யிருக்கவிட்டனன்" (11 திருமுறை - பட்டினத்தார் - கழுமல மும்மணிக்கோ - 4) கூழாட் கொண்டு - கூழையில் வைத்து ஆளாகக் கொண்டு. "கடைக் கூழை" (திருவா). கூழை - படையுறுப்பு. கடைமைப்பட்ட ஆள் என்றலுமாம். "அட்பட் டிருப்பதன்றோ நந்தங் கூழைமையே" (தேவா). - (3) என்பாவத்தைப் பெருகுவித்து - கேட்டு விதியின்றி என்று கூட்டுக. உருகுவித்து - உருகச்செய்து. கள்ளம் - ஆணவக்கறை - அருகுவித்து - அணுகச்செய்து. பிணி......தீர்த்த - சூலை தந்து ஆளாக்கிய சரித அகச்சான்று. - (4) தலை பறித்தல் - சமண குருமார் வழக்கு. குவிழலையார் நகை நாணாது உழிதருதல் - சமண குருமார் உடையின்றிச் செல்லும் வழக்கு. பண்டமாப்படுத்து - ஒரு பொருளாகக் கருதி. பொருட்படுத்தி. பால் தலையில் தெளித்தல் - தூய்மைப்படுத்தித் தன்னுடையமையாக்குதல். மரபு வழக்கு. பாவைசெய - என்பதும் பாடம். - (5) துன் ஆகத்தேன் - பயனின்றிப் பருத்த உடம்பினன். துவர்வாய்க் கொள்ளுதலும், இருகையேற்றிட உண்ணுதலும், (துவர்க்கர்யொடு சுக்குத் தின்னுதலும்) சமண குருமார் வழக்கு. பொன் ஆகத்துப் - புகப் பெய்தலாவது - தூய்மையின்றி யிருந்த உடலைத் தூய்மை செய்தல் என்பதாம். ஆகத்திருத்தாதே - உடலை இறைவனிருக்கு மிடமாகச் செய்யாமல்; "உடலிடங் கொண்டாய்" திருவா). - (6) பப்பு - பரப்பு என்றது பப்பு என வந்தது. சாத்திரங்களின் பரப்புக் குறித்தது. "பப்பற வீட்டிருந் துணரும்" (திருவாபள்ளியெ) - பறித்ததொரு தலை - மயிர்களை ஒன்றொன்றாகப் பறித்துவிட்ட தலை. ஒப்போட - ஒருப்பாடுபெற? - (7) கதி - செல்சார்வு. கண்ணழலுதல் - தலைமயிர் பறித்தலால் உளதாகும் மெய்ப்பாடு. மதிதந்த - நல்லறிவு தந்த. தேன் - உவமையாகுபெயர். தேன் என்றதற்கேற்ப வாய்மடுத்து என்றார். - (8) ஆவியைப் போக்காமே - ஆவி விணாய்க் கழியாமல். பயிக்கம் - பிச்சை. - (9) கட்டான் - அழித்தான் - களை கட்டல் என்றாற்போல. கண்ணிணொடுகாலின் - ஒடு - இன் - உருபுகள் கருவிப்பொருளில் வந்தன; உருபு மயக்கம். காமனைக் கண்ணினால், காலனைக் என நிரநிறையாக்குக. தட்டான் - தட்டுப்படாதவன். முளரி......இருந்தான் - பிரமன் தலையில் ஒன்றை - முன் இருந்த ஐந்து தலைகளுள் ஒன்றினை.

கனியிருக்கக் காய் கவர்தல் (1), முயல் விட்டுக் காக்கைப் பின் போதல் (2), அறமிருக்க மறம் விலைக்குக் கொள்ளுதல் (3), பனிநீராற் பரவை செய்தல் (4), ஏதன்போர்க் காதனா யகப்படுதல் (5), இருட்டறையில் மலடு கறந்து எய்த்தல் (6), விளக்கிருக்க மின்மினித்தீக் காய்தல் (7), பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்தல் (8), தவமிருக்க அவஞ்செய்தல் (9), கரும்பிக்க இரும்பு கடித்தல் (10) இவை இப்பதிகத்துட் கண்ட பழமொழிகள். நல்லன விருக்க அவற்றைப் பயன்படுத்தியுய்யாது தீமையிற் செல்வதற்கு இவை உவமையாவன. "கலநமிடு மமண்" என்ற (20) பாட்டினுள் (திருத்தொண்டர் புராண வரலாற்றினுள்) இப்பழசாரியார், உயர்ந்த சிவகதை யிருக்க அவகதையாகிய சிந்தாமணியை உலகர் பாராட்டிய செயலுக்கு எடுத்து உவமை கூறினர். "இனிய வுளவாக" என்ற குறளும் காண்க.