பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்363

 

1490.

மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந் திருவடிவும் மதுர வாக்கிற்
சேர்வாகுந் திருவாயிற் றீந்தமிழின் மாலைகளுஞ், செம்பொற் றாளே
சார்வான திருமனமு, முழவாரத் தனிப்படையுந், தாமு மாகிப்
பார்வாழத்திருவீ திப்பணிசெய்துபணிந்தேத்திப்பரவிச்செல்வார்.


1491.

 நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப் புறறிடங்கொணிருத்தர் தம்மைக்
 கூடியவன் பொடுகாலங் களிலணைந்து கும்பிட்டுக் கோதில்வாய்மைப்
"பாடிளம்பூ தத்தினா" னெனும்பதிக முதலான பலவும் பாடி,
 நாடியவார் வம்பெருக நைந்துமனங் கரைந்துருகி நயந்து செல்வார்,


1492.

நான்மறை நூற்பெருவாய்மை நமிநந்தியடிகடிருத் தொண்டினன்மைப்
பான்மைநிலை யாலவரைப் பரமர்திரு விருத்தத்துள் வைத்துப்பாடித்,
தேன்மருவுங் கொன்றையார் திருவாரூ ரரனெறியிற் றிகழுந் தன்மை
யானதிற மும்போற்றி யணிவீதிப் பணிசெய்தங் கமரு நாளில்,


1493.

நீராருஞ் சடைமுடியார் நிலவுதிரு வலிவலமு நினைந்து சென்று
வாராரு முலைமங்கை யமபங்கர் கழல்பணிந்து மகிழ்ந்து பாடிக்,
காராருங் கறைக்கண்டர் கீழ்வேளூர், கன்றாப்பூர் கலந்து பாடி,
யாராத காதலினாற் றிருவாரூர் தனின்மீண்டு மணைந்தா ரன்றே.

1490. (இ-ள்.) மார்பு ஆரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் - மார்பில் நிறையும்படி பொழிகின்ற கண்ணீர் மழை வார்கின்ற திருவடிவமும்; மதுரவாக்கில் தீந்தமிழின் மாலைகள் சேர்வு ஆகும் திருவாயும் - மதுரவாக்கில் இனிய தமிழ்ப் பதிகங்கள் சேரும் திருவாயும்; செம்பொன் தானே சார்பு ஆன திருமனமும் - இறைவருடைய செவ்விய பொன்னார்ந்த திருவடிகளையே சார்பு கொண்ட திருமனமும்; உழவாரத் தனிப்படையும் - திரு உழவாரமாகிய ஒப்பற்ற படையும்; தாமும் ஆகி - (ஆகிய) இவற்றைக் கொண்டுள்ள தாமும் ஆகிய இவையுமே யாகி; பார் வாழ... செல்வார் - உலகமெல்லாம் வாழும் பொருட்டுத் திருவீதிப் பணிகளைச் செய்து பணிந்து துதித்துப் பரவிச் செல்வாராய்,

225

1491. (இ-ள்.) நீடு ... தம்மை - புகழ்நீடும் திருவாரூரில் மணிப்புற்றினை நிலவும் இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் நிருத்தரை; கூடிய ... கும்பிட்டு - பொருந்திய அன்பினோடு ஒவ்வோர் காலங்களிலும் அணைந்து கும்பிட்டு; கோதில் ... பாடி - குற்றமில்லாத வாய்மையுடைய "பாடினம் பூதத்தினான்" என்று தொடங்கும் பதிகத்தினையும், அது முதலாகிய பல பதிகங்களையும் அருளிச் செய்து; நாடிய ... செல்வார் - உள்ளத்தால் நாடிய ஆசைபெருக மனம் நைந்து கரைந்து உருகி நயந்து செல்வாராகி,

226

1492. (இ-ள்.) நான்மறைநூல் ... நிலையால் - நான்கு வேதங்களிலும் ஏனைய ஞான நூல்களிலும் பேசப்படும் பெருமையையுடைய வாய்மையாற் சிறந்த நமிநந்தியடிகளுடைய திருத்தொண்டினது நலத்தின் சிறப்பினாலே; அவரை ... பாடி - பரமேசுவரரையே போற்றுகின்ற திருவிருத்தத் திருப்பதிகத்தினுள் அவரை வைத்துப்பாடி; தேன்மருவும் .. போற்றி - தேன் பொருந்திய கொன்றையினையுடைய சிவபெருமான் திருவாரூர் அரனெறியில் விளங்க வீற்றிரும் சிறப்பினையும் போற்றி; அணிவீதி ... நாளில் - அழகிய திருவீதிப் பணியினையும் செய்து அங்கு விரும்பி எழுந்தருளியிருக்கும் நாளிலே,

227