பக்கம் எண் :


364திருத்தொண்டர் புராணம்

 

1493. (இ-ள்.) நீராரும் ... பாடி - கங்கைநீரைப் பொருந்திய சடைமுடியினையுடைய பெருமானது திருவலிவலத்தினையும் நினைந்துபோய், வாரினை அணிந்த முலை மங்கையாகிய உமைபங்கர் கழல்களைப் பணிந்து மகிழ்ந்து பாடி; காராரும் ... பாடி - திருநீலகண்டரது திருக் கீழ்வேளூர், திருக்கன்றாப்பூர் முதலியவற்றையும் சென்று மனங்கலந்த ஒருமைப் பாட்டினாற் பாடி; ஆராத ... அணைந்தார் - நிறைவுறாத ஆசை மிகுதியினால் திருவாரூாரில் மீளவும் வந்தணைந்தனர்; (அன்று - ஏ - அசை).

228

இந்த நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1490. (வி-ரை.) இத்திருப்பாட்டு நாயனாரது திருவடிவத்தினையும், திருவாக்கு, திருவுள்ளம் இவற்றின் நிலைகளையும் ஒருங்கே எழுதிக் காட்டும் சிறந்த ஓவியம் போல விளங்கும பெருமையுடையது. "தூயவெண்ணீறு" (1405) என்ற திருப்பாட்டின்கீழ் உரைத்தவை எல்லாம் இங்கு வைத்துக் கண்டுகொள்ளவும், மேலுங் காணவும் வைத்தார்.

மார்பு ஆரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவு - ஆர - பொழி - மழை- வாரும் என்பவை மிகுதிப் பொருள் தந்து, கண்ணீர் இடையறாது பெருகி வழிந்து மார்பை நனைத்து நின்ற நிலையை உணர்த்தின. வார்தல் - இடையறாது ஓடுதல். "வந்திழி கண்ணீர் மழையும்" (திருஞான - புரா - 270), "நைந்துருகிப், பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும்" (1405), "பொங்கும்புனல் கண்கள் பொழிந்திழிய" (1337) முதலியவை பார்க்க. தாம் பிழை செய்த ஒப்பற்ற சிறுமையினையும், பிழை தீர்த்து ஆட்கொண்டருளிய இறைவரது ஒப்பற்ற பெருமையினையும் எண்ணி யெண்ணி அன்பின் மேலீட்டினால் கண்ணீர் பெருக ஒழுகுதல் நாயனாரது சிறப்பாகிய தன்மை. கண்ணீர் பெருக்குதல் முன்சொன்னார்; அக்கண்ணீர் மார்பின் நிறைந்து நனைத்துக் கிடந்தது என்பதனை இங்குக் கூறினார். மழைவாரும் வடிவு - அன்பினால் உருகிய நிலையை வடிவம் முழுதும் காட்டிற்று என்பது.

மதுரவாக்கில் தீம் தமிழ் இன் மாலைகளின் சேர்வு ஆகும் திருவாயும் என்க. திருவடிவும் திருமனமும் என்பனவற்றுக் கேற்பத் திருவாயும் என்று முடிக்க. வாக்கில் - என்றதின் இல் உருபை மாலைகள் என்பதனோடும், மாலைகளும் என்றதின் உம்மையைத் திருவாய் என்பதனோடும் பிரித்து கூட்டுக. மதுரவாக்கு என்பது சொன்னயமும், தீந்தமிழின் மாலைகள் என்பது பொருளினிமையும் உணர்த்தின. மாலைகள். திருப்பதிகங்கள். "ஈறின்றியெழுந் திருவாசகமும்" (1342) , "பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயும்" (1405) முதலியவை காண்க.

செம்பொன் தாளே சார்வு ஆன திருமனமும் - "பொன்னார் திருவடிக்கு" முதலியவற்றால் நாயனார் போற்றிய குறிப்பு. தாளே சார்வு ஆன - "சேவடி தைவருசிந்தையும்" (1405). ஏகாரம் பிரிநிலை. தேற்றமுமாம். சார்வு - "சார்புணர்ந்து" (குறள்). சார்பினால் ஆன - நன்மை ஆயின - ஆக்கம் சேர்ந்த - எனக் காரணப் பொருள் தந்து நின்றது. "மற்றொரு பற்றிலா அடியேற்கு என்றும் சிறந்தானை" (தேவா).

உழுவாரத் தனிப் படை - தனி சிறப்புணர்த்தி நின்றது. படை - பாசத்தை அறுக்கும் கருவி என்பது குறிப்பு.

தாமும் ஆகி - மேற்சொல்லிய வடிவு முதலியவை தம்மையே சிறப்பாக அறிவிக்கும்படி வெளிப்பட என்ற பொருள் தந்து நின்றது.

பார்வாழு - மனம் வாக்குக் காயங்களால் திருவீதியில் நாயனார் செய்த தொண்டுகளின் பயன் உலகமறிந்து பயன் பெற்று வாழ்வதேயாம். தமது பயன் கருதி நாயனார் ஒன்றும் செய்யாதாராவர் என்பது. "தாமென்று மனந்தளராத்