விளங்குதல் குறிப்பு. நிருத்தர் - ஐந்தொழில் அருட்கூத்து இயற்றுபவர். அத்திருக்கூத்தில் தோற்றம் என்னும முதற்றொழில், பிருதிவி என்ற முதற்பூததத்துவத்தில் வைத்து இங்குள்ளாராற் காணப்படலால், அத்தத்துவத்தின் சார்பாய புற்றிடமாகிய தலம் திருஆரூராதலினால், இங்கு நிருத்தர் என்ற பெயராற் கூறினார். "எல்லி, ஆடலனாதிரைய னாரூ ரமர்ந்தானே" (பண் - வியாழக் குறிஞ்சி) என்ற ஆளுடைய பிள்ளையார் திருவாக்கும் காண்க. கூடிய அன்பு - மேலும் மேலும் அதிகரித்துக் கூடிப் பெருகும் அன்பு. காலங்கள் - பூசைக்குரிய திருப்பள்ளி யெழுச்சி முதல் அத்தயாமம்வரையுள்ள காலங்கள். காலங்களிற் சென்று கும்பிடுதல் சிறப்பு என்பது ஆகமங்களில் விதிக்கப்படும். "காலமெல்லாந் துதித்திறைஞ்சி" (திருஞான -புரா - 164) என்று ஆளுடையபிள்ளையார் திருத்தில்லையில் அவ்வக்காலங்களிற் கும்பிட்டமையும், நம்பியாரூரர் "திருமூலட்டானத்து ளிடைதெரிந்து மாறிறிரு வத்தயாமத் திறைஞ்ச வந்தணைந்தார்" (ஏயர்கோன் - புரா - 304) என்றதுவும், பிறவும் சிந்திக்க. கோதுஇல் வாய்மை - குற்றங்களை இல்லையாகச் செய்யும் வாய்மைத் தன்மையுடைய. "குரும்பை யாண்பனையீனு மென்னும் வாய்மை குலுவுதலால்" (திருஞான - புரா - 980), "போதியோ வென்னு, மன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதம்" (மேற்படி - 1088) முதலியவை காண்க. பாடினம் பூதத்தினான் - பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. முதலான பலவும் - இவற்றுள், இப்போது கிடைத்துள்ளவற்றுள், "சூலப் படையானை" என்ற சீகாமரப்பண் - பதிகமொன்றும், "எப்போது மிறையும்", "கொக்கரை குழல்" என்ற குறுந்தொகைப் பதிகங்களிரண்டும், "படுகுழிப்பவ்வம்", "குழல்வலம் கொண்ட" என்ற திருநேரிசைப் பதிகங்களிரண்டும், "திருமணியை" , "எம்பந்த வல் வினைநோய்", "இடர் கெடுமாறு", "ஒருவனாயுலகேத்த" என்ற திருத்தாண்டகப் பதிகங்கள் ஏழும் ஆகப் பன்னிரண்டும் பதிகங்கள் இங்குப் பலவும் என்ற இடத்துக் கருதப்படும். நாடிய ஆர்வம் - இறைவரது பெருங் கருணையைச் சிந்திக்கச் சிந்திக்க அதன் பயனாக விளைந்த ஆர்வம். நாடிய - காரணப்பொருட்டில் வந்தது. நாடியதன் காரணமாக வந்த என்க. மனநைந்து கரைந்து உருகி - என்க. நைதல் - கரைதல் - உருகுதல் - அன்பு மேலிட மனம் அடையும் மாறுபாடுகள். நயந்து - விரும்பி; செல்வார் - திருத்தொண்டில் ஒழுகுவார். ஆர்வம் பொங்க - என்பதும் பாடம். 226 V திருச்சிற்றம்பலம் | பண் - காந்தாரம் |
| பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானுங் கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும் ஒடிள வெண்பிறை யானு மொளிகதிழ் சூலத்தி னானும் அடிளம் பாம்பசைத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. |
1 | ஆயிரந் தாமரை போலு மாயிரஞ் சேவடி யானும் ஆயிரம் பொன்வரை போலு மாயிரந் தோளுடை யானும் |
|