| ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும் ஆயிரம் பேருகந் தானு மாரு ரமர்ந்தவம் மானே. |
8 | பையஞ் சுடர்விடு நாகப் பள்ளிகொள் வானுள்ளத் தானுங் கையஞ்சு நான்குடை யானைக் கால்விர லாலடர்த் தானும் பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும் ஐயஞ்சி னப்புறத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- ஆரூரமர்ந்த அம்மானே, பாடிளம் பூதத்தினான்; நரியைக் குதிரை செய்வான்; நரகரைத் தேவுசெய்வான்; விச்சின்றி நாறு செய்வான்; நினைப்பவர் நெஞ்சத்துளான்; அம்பர ஈருரியான்; ஊழியளக்க வல்லான்; ஆழி வளைக்கையினான்; உலகிறந்த ஒண்பொருளான்; ஆதிைரைநாள் உகந்தான்; ஆயிரம் சேவடி - ஆயிரம் தோள் - ஆயிரம் நீண்முடி - ஆயிரம் பேர் - உடையான்; நாகப்பள்ளிகொள்வா னுள்ளத்தான்; ஐயஞ்சு னப்புறத்தான் என்பன முதலிய தன்மைகளாலறிந்து போற்றப்படுபவன். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பூதகணம்பாட ஆடுகின்றவன் இறைவன். நித்தியத்துவம் பெற்ற சிவகணமாதலின் இளம்பூதம் என்றார். நிருத்தர் (1491) என்று புராணத்துட் கூறிய குறிப்பு இது. செவ்வாயும் பவள வண்ணமுமுடையான். ஓடு இளவெண்பிறை - இளமை ஓடிக் கழிந்த - ஒளி குறைந்த பிறையும். ஒளி திகழ் சூலமும் என முரண் அணிபடவைத்தார். இளமை ஓடு பிறை - இளமை வரும்பிறை என்றலுமாம். - (2) நரியைக் குதிரை செய்வான் - மாணிக்கவாசக சுவாமிகளின் பொருட்டு இறைவர் செய்த திருவிளையாடல். இதற்கு இறைவரது எல்லாம்வல்ல சத்தியைக் குறிப்பதென்று வேறு பொருள் உரைப்பாருமுண்டு. நரகரைத் தேவு செய்தல் - உயிர்களை உயர்த்துதல். விச்சின்றி நாறு செய்வான், - "விச்சதின்றியே விளைவு செய்குவாய்" (திருவாசகம்) முதலியவை காண்க. இவை புனருற்பவம் வருமாறுணர்த்துவன என்றும், வித்தின்றி விளைவாய் எனப் பொருள் பட்டு இறைவன் திருமேனி கொள்ளும் முறைமை யுணர்த்தியதுமாம் என்றும், உரைப்பர் மாதவச்சிவஞானமுனிவரர் (மாபாடியம். 2. சூத். சூனிய முதற்காரண வாதமறுப்பு). - (3) எரிபுரை மேனியினான் - தீ வண்ணன். - (4) வேனிலவன் - வேனிற் காலத்தைத் தனக்கு உரிய காலமாகக்கொண்டு ஆட்சி புரிபவன்; மன்மதன். வம்பு - மணம்.. அம்பர ஈர் உரியான் - அம்பரம் - உடை; ஈர்உரி - தோல். தோல் உடையினன். - (5) ஊழி அளக்க வல்லான் - காலங் கடந்தவன். ஆழி வளைக்கையினான் - சக்கரமும் சங்கும் கையில் ஏந்தி அரிவடிவுபோன்ற திருவுருவோடிருந்து உலகங் காப்பவன் . "உலகுகள்நிலை பெறுவகைநினைவொடுமிகுமலை கடனடுவறி துயிலமரரி யுருவியல்பரன்" (சிவபுரம் - திருவிராகம் - நட்டபாடை - 2) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் காண்க. - (6) உலகிறந்த ஒண்பொருள் - உலகினைக் கடந்த செம்பொருள். ஆதிரை நாள் சிவனுக்குகந்தது. - (7) தொழுற்கு அங்கைதுன்னி நின்றார் - என்றது சிவனைத் தொழுவதற்கும் பூசித்தலுக்குமே கைகள் கொடுக்கப்பட்டன என்று துணிந்து அவற்றையே இடையறாது செய்பவர். துன்னுதல் - கூடுதல் - சேர்தல். காதல் கனற்ற - ஆசை மிக; கனற்றுதல் - தீச் சூழ்தல் போல அகப்படுத்துதல்; என்பினை உருக்குதல். - (8) ஆயிரம் - இங்கு எண்ணிறந்த என்ற பொருளில் வந்தது. "சகஸ்ரசீர்ஷஃ புருஷ;" என்ற வேதப் பொருளை விளக்கிக் காட்டுவது இத்திருப்பாட்டு. "ஆயிரங் கமல ஞாயி றாயிரமுக் கண்முக கரசர ணத்தோன்" (சேந். வீழி). - |