கங்கையை ஏற்றுக்கொண்ட. - (5) தேம் காவி - தேன் பொருந்திய நீலோற்பலம். கழுநீர். திருவாரூர்ச் சிறப்புக்களுள் ஐந்து வேலிப்பரப்புடைய கழுநீர் ஓடையும் ஒன்று என்ப. பூங்கோயில் - திருவாரூர்க் கோயிலின் பெயர். "அனையதனுக் ககமலரா மறவனார் பூங்கோயில்" (135). போகாதிருந்தார் - முன்னர்ப் பாற்கடலில் விட்டுணுவினிடமும் தேவலோகத்தில் இந்திரனிடமும் இருந்ததும் போனதும்போலன்றி, இங்குப் போகாது நிலைத்திருந்தார் என்பது குறிப்பு. பாங்கான ஊர்க்கெல்லாம் செல்லும் - அன்பானினைவார் வழிபடு மிடமெல்லாம் என்ற இதுவும் முன்சொன்ன குறிப்பினை விளக்கும். இத்திருப்பதிகத்தினுள் ஏனைய எல்லாப்பாட்டுக்களும் "நான் கண்டதாரூரே" என்ற மகுடத்தையுடையன. இப்பதிகம் 11 பாடல்களுள்ளது. இப்பாட்டு வேறொருபதிகத்தைச் சார்ந்ததோ என்பது ஐயப்பாடு. - (6) எம்பட்டம் பட்ட முடையான் - எம்மை என்றும் மீளா அடிமையாக உடையவன்; பட்டம் - நெற்றியிற் கட்டும் தகடு. மதியின் நும் பட்டம்சேர்ந்த நுதலான் - பட்டம் கட்டியது போலப் பிறையை மேல்வைத்த நெற்றியினை உடையவன்?. "கண்ணிடை கரந்தகதிர் வெண்பட மெனச்சூழ், புண்ணிய நுதற்புனித நீறுபொலி வெய்த" (175). அந்தி வாய்ச்செம்பட்டு உடுத்து - என்றது செம்பட்டு உடுத்ததுபோன்ற அந்திச் செவ்வான ஒளியுடைய திருமேனியுடையவன். - (7) போழ்ஒத்த - போழ்ந்தால் ஒத்த. பிளந்தது போன்ற. வெருவப்போர்த்தான் என்க. ஒங்கு ஒலி மா - நாத உருவமான வேதங்களாகிய குதிரைகள். ஆழித்தேர் - உலகமாகிய இரதம். முப்புர மெரித்தபோது இறைவன் கொண்டது. - (8) பாடு - இடம் ஏழனுருபு. துஞ்சு இருள் - உலகம் ஒடுங்கிய ஊழி. ஆடல் உகத்தால் - "வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" என்றபடி உலகை மீளத் தேற்றுவித்தற்பொருட்டு நினைத்தல். இருள்கூரும்பொழுது - மலவாதனையாற் றுன்புறும்போது. - (9) கார்முது கொன்றை - கார்காலத்திற் பூக்கும் கொன்றை. கொன்றையாற் குறிக்கப்படும் பிரணவத்தின் தொன்மை காட்ட முதுகொன்றை என்றார். பேரமுதம் - சாவாமை செய்யும் மருந்து. உய்ய - அமுதமுண்டும் சாகும் துன்பமடைந்தார் அத்துன்ப நீங்க. நஞ்சுஅமுதா - அமுதா உண்டான் - சாதலைவிளைக்கும் நஞ்சினை, அதனைச் செய்யாத அமுதம்போல உண்டவன். - (10) தாட உடுக்கையான் - அடிக்கும் உடுக்கை - துடி- உடையவன். கோடலாவேடம் - கொள்ளாதவேடம்; நக்க உருவம். கோடலா - கொண்ட - முரண்அணி. வீணை - "மிகநல்ல வீணை தடவி." ஆடுஅரவக் கிண்கிணி - ஆடுந்தோறும அரவஞ்செய்யும் - சத்திக்கும் - கழல். ஆடும் அரவத்தையே - பாம்பினையே - கிண்கிணி யாகப் பூண்டவன் என்றலுமாம். சேடன் - ஒளியுடையவன் - பெருமையன். தீஆடும் - என்க குருதிச் செஞ்சாந்து அணிவித்து - உடல் முழுதும் குருதி - இரத்தம் - படியும் படி செய்து. நீற்று அஞ்சாந்து - திருநீற்றினை அழகிய சாந்தமாக. இராவணனைச் செஞ்சாந்தணிவித்துத் தான் வெண்சாந் தணிந்தான் - என்று நகைச் சுவைபடக் கூறியபடி. VIII திருச்சிற்றம்பலம் | திருக்குறுந்தொகை |
| எப்போ தும்மிறை யும்மற வாதுநீர், முப்போ தும்பிர மன்றொழ நின்றவன், செப்போதும் பொனின்மேனிச்சிவனவன், அப்போதைக்கஞ்சலென்னுமாரூரனே. |
திருச்சிற்றம்பலம் பதிகக்குறிப்பு :- ஆரூரிறைவரே சிவன்; அப்போதைக் கஞ்சல் என்னும்; அண்டவாணர்க் கருள்வர்; திசைமுழு தளக்குஞ் சிந்தையர்; கனலேந்தி எல்லியு |