பக்கம் எண் :


370திருத்தொண்டர் புராணம்

 

ளாடுவர்; மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமாவுகந் தேறு மிறைவனார்; என்பன முதலிய தன்மைகளா லறியப்படுபவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இறையும் - சிறிதும்; செப்போதும் பொன் - செம்பொன். உவமானமாக எடுத்துச் சொல்லும் பொன் என்றலுமாம். அப்போதைக்கு - வேண்டியபோது. இறக்கும்போது என்றலுமாம். - (3) அண்டவரணர்க்கருளும் - தேவர்கள் வந்து வணங்கும் - தன்மை. தியாகேசர் தேவலோகத்தினின்றும இங்கு எழுந்தருளிய குறிப்பு. 9-வது பாட்டில் அண்டவாணரடையும் என்பதுமிது. - (3) திசைமுழுதளக்குஞ் சிந்தை - நினைப்பு மாத்திரத்தில் உலகந் தோற்றுவித்தும் அழித்தும் அருள்பவர் என்பது கருத்து. - (7) அட்டமரம் புயம் - எண்டோள்.

VIII திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி, பக்க மேபகு வாயன பூதங்கள்,
ஒக்க வாட லுகந்துடன் கூத்தராய், அக்கி னோடர வார்ப்பரா ரூரரே.

1

எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே, பந்தம் வீடவை யாய பராபரன்,
அந்த மில்புக ழாரூ ரரனெறி, சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே.

2

எம்மை யாரிலை யானுமு ளேனலேன், எம்மை யாரு மிதுசெய வல்லரே?
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற், நம்மையாரைத்தந்தாராரூரையரே.
மையு லாவிய கண்டத்த னண்டத்தன், கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்,
ஐய னாரூ ரடிதொழு வார்க்கெலா, முய்ய லாமல்ல லொன்றில்லை காண்மினே.

12

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆரூரர் அக்கினோடரவார்ப்பர்; தொடர்ந்து விடாதவர்க்கு அண்டமாளவும் வைப்பர்; அன்பர்க்கன்பர்; வாழ்நாளுள்ளபோதே அவரை அடைமின்; அவர் எனக்கு அம்மையைத் தந்தார்; ஆளுரைத் தூரத்தே தொழுவார் வினைதூளிபடும்; அவர்அடிதொழப் பண்டை வல்வினையும் பாவமும் பறையும்; அல்லலொன்றில்லை. அவரைக் கண்டு என் தையல் காமுற்றவாறு?

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கூத்தராய் - "நிருத்தர்" (149). அக்கு - உருத்திராக்கமணி. - (2) பந்தம் விடவையாய - "பந்தம் வீடு தரும் பரமன்" (300) பார்க்க. பராபரன் - பரைக்குப்பரன். பழமைக்குப் பழையவன் - புதுமைக்குப் புதியவன் என்றலுமாம். சிந்தையுள்ளுந் சிரத்துளுந் தங்க - "சிந்தையி னுள்ளுமென் சென்னியினுஞ் சேர வந்தவர்" (உந்தி - 44). அரனெறி - திருவாரூர் அரனெறி - தனிக்கோயில். - (3) விடாதவாரக்கு - விடாதவரை. உருபு மயக்கம். - (4) சுபத்தர் - சுபத்தை - இன்பத்தை - உடையவர். - (5) முருட்டுமெத்தை - சுடுகாட்டு விறகு. உருவகம். அரட்டர் - துன்பஞ் செய்பவர். ஐவர் - ஐம்பொறி. முரட்டடித்த - முரணாகக் கொண்ட. அரட்டு - செருக்குத் தொழில். அடக்கி - அடக்கியவர். பெயர். - (6) எம்மையார் - முன்னது, எமக்கு இன்பஞ் செய்பவர்; பின்னது, எவ்வகையார். உளேன் - இன்பஞ் செய்துகொள்ளும் வன்மையில்லேன். அம்மை - தாய்போல் தண்ணளி செய்வபர். அம்மையாரை - தாய்போன்ற தம்மையே. திலகவதியம்மையாரின் குறிப்புப்பட உரைத்தலுமாம். - (7) தண்ட ஆளி - தண்டத்தினை உடையவன். செண்டு அது ஆடிய - அழித்த. செண்டாடுதல் - அழித்தல். அகண்டன் - வியாபகமானவன். இப்பாட்டுத் தலைவன்பால் மனமிழந்த மகளைக் கண்ட தாய் கூற்றாகிய அகத்துறை. வரும் பாட்டுமது. - (8) பவனி - உலா. தலைவன் உலாவரும்போது கண்ட மங்கையர் காதல் கொண்டு வசமிழத்தல் அகப்பொருள். தவனி - காதலால் உடற்