கொதிப்புடையவள். 7 - 8 இந்த இரண்டு பாட்டுக்களும் வேறு ஒரு பதிகத்தினைச் சேர்ந்தனவோ என்பது ஐயப்பாடு. - (9) தூளி - பொடிபட்டு அழிவது. - குறிப்பு : இப்பதிகத்தில் 12 பாட்டுக்கள் காணப்படுகின்றன. 2-வது பாட்டின் குறிப்பினால் இது திருவாரூர் அரனெறிக் கோயிலைப் பற்றியதோ என்பது ஐயம். "பவனிவீதி விடங்கனைக் கண்டு" (8) என்றதனால், "முத்து விதானம்" என்ற குறிஞ்சிப்பண் பதிகம்போல இப்பதிகமும் தியாகேசரைப் போற்றிய தாமோ என்பதும் ஐயப்பாடு திருமூலட்டானனாரே எனவரும் ஏனைப் பதிகங்களை நோக்குக. ஏனைய தலங்கள் போலன்றி வீதிவிடங்கருக்கும் திருமூலட்டானருக்கும தனிப் பதிகங்கள் உள்ளமை திருவாரூரின் தனிப்பெருஞ் சிறப்புக்களும் ஒன்று. IX திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றாத் கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன் முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே யிவர்க ளோடும் அடியனேன் வாழ மாட்டே னாரூர்மு லட்ட னீரே. |
1 | உயர்நிலை யுடம்பே காலா வுள்ளமே தாழி யாகத் துயரமே யேற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப் பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீ ரிறைந்து மிக்க அயர்வினை லைவர்க் காற்றே னாரூர்மூ லட்ட னீரே. |
7 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- ஆரூர்த்திருமூலட்டனீரே! இவ்வுடம்பினுள் ஐம்பொறிகளும் என்னை மயக்கிச் சங்கடம் பலவும் செய்து இடர்க்குழியில் நூக்குகின்றன; என் உள்ளம் அலந்து மத்துறுதயிர்போல் மறுகும்; காத்துக்கொள்ளாய். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) படுகுழி - வீழ்த்தும் குழி. பெருங்குழி. பவ்வம் - கடல். பண்டி - வயிறு. பவ்வம்போன்ற படுகுழியில் வண்டியைத் தள்ளுதல்போல் ஐவர் முடுக்கிப் பாவப் படுகுழியில் வீழ்த்தலால் வருந்துவது இவ்வாழ்க்கை என்று கூட்டியுரைத்தலுமொன்று. கேதுதல் - அஞ்சுதல். - (2) அழிப்பன் - ஆழிக்கப்பட்டவன். - (4) கெழுமுதல் - கூடுதல். நூக்குதல் - வலியத் தள்ளுதல். - (6) சிக்கனவுடையர் - விடாது பற்றிக்கொண்டவர். கோகு - துன்பம். - தல். - (6) சிக்கனவுடையர் - விடாது பற்றிக்கொண்டவர். கோகு - துன்பம் - (7) இப்பாட்டு உருவகம். கிணற்றிலிருந்து பயிருக்கு நீர் இறைக்கும ஏற்றக் கோலாக உடம்பை நன்மைக்குப் பயன்படுத்தும் வகைக்கே ஏற்பட்டதொன்றாக உருவகித்தார். ஏற்றத்திற்குக் = கால் - தாழி - ஏற்றத்தின் மரம் - ஊற்றக்கோல் - நீர்பாயும் புலம் - உடலுக்கு = உயிர் நிலைக்கும் உடம்பு - கால்; உள்ளம் - தாழி; துயரம் - ஏற்றம்; துன்பம் - கோல்; சிவலோகம் - பயிர் விளைபுலம் என்று காண்க. சுழிய - வாட. பயிர் - இங்குச் சிவபோக விளைவாகிய பயன் குறித்தது. - (8) அற்று - பயனற்று; - (9) மத்துறுதயிர் - பழமொழி. உவமை - "மத்துறு தண்டயிரிற்புலன் றீக்கது வக்கலங்கி" (திருவா - நீத் - விண் - 30). - (10) இறையே - சிறிது. அடர்த்து அருள்செய்தது - முன் அடர்த்துப் பின் அருள் செய்தது. குறிப்பு : இது திருமூலட்டானரை முன்னிலைப்படுததிக் கூறிய பதிகம். திருமூலட்டானனாரே என்று படர்க்கையிற் போற்றிய திருத்தாண்டகம் காண்க. X திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| குழல்வலங் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக், கழல்வலங் கொண்டு நீங்காக் கணங்களக் கணங்க ளார |
|