பக்கம் எண் :


372திருத்தொண்டர் புராணம்

 

அழல்வலங் கொண்ட கையா னருட்கதி ரெறிக்கு மாரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான் றோன்றினார் தோன்றினாரே.

1

காகத்தை நங்கை யஞ்ச நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தி னுரிவை போர்த்துப்
பாகத்தி னிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாக மடங்குமா ரூர னார்க்கே.

2

ஆயிரந் திங்கள் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி
யாயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ
வாயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர
லாயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆரூரைத் தொழுவதற்குத் தோன்றியவர்களே உலகிற் பிறந்தார் எனப்படுவர்; ஆரூரர் பெருமான் தோட்டிமையுடைய தொண்டரகம் புகுந்து நின்றார்; திங்கணிவர்; தளிர் ஆகம்போலும் வடிவர். அஞ்சணை வேலி யாரூர் இடங்கொண்டார்; இவை முதலிய தன்மைகளாலறியப்படுபவர்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வலங்கொண்ட - சொற்பின் வருநிலையணி. குழல் வலங்கொண்ட - குழலினிசையை வென்ற. வலம் - திறம். கொண்ட - திறை கொண்ட. கழல் வலங்கொண்டு - திருவடியைச் சுற்றி. அழல்வலங்கொண்ட - வலஞ் சுழித்தெழுந்த அழல். தொழல் வலங்கொண்டல் செய்வான் - தொழுவதற்காக வலஞ்செய்யும் பொருட்டு. தோன்றினார் தோன்றினார் - ஆரூர் வலஞ் செய்யும் ஊழ்பெற்றுப் பிறந்தவர்களே பிறந்தவர்களாவார். ஏனையோர் பிறந்தும் பிறவாதவர்; இறந்தவரோடொப்பர் என்பது குறிப்பெச்சம். "மற்றுப் பிறந்தவர் பிறந்திலரே" (தேவாரம்). - (2) உவமையை உள்ளுறுத்தபெயர்பொருள் தற்குறிப்பேற்ற அணி. நாகத்தை அஞ்ச - இறைவர் திருமேனியிலணிந்த நாகத்தைக் கண்டு அம்மையார் அஞ்ச; நங்கை ... நாகம் - அம்மையாரது சாயல்கண்டு அவரை ஒரு மயில் என்று அஞ்சி அந்நாகங்கள் ஒடுங்க; வேழம் - யானை; பாகத்தன் ... அடங்கும் - வளைவு நிமிராத பிறையை ஒரு மின்னல் என்று எண்ணி நாகம் அடங்கும்; மின்னென்று நாகம் அடங்குதல் "மின்னானை மின்னிடைச்சே ருருமினானை" என்றபடி மின்னும் இடியும் நாகங்களுக்குப் பகையாதலினாலாகியது. - (3) "கிடந்த பாம்பு" (அதிகை - காந்தார பஞ்சமம் - கெடிலவாணர் - 8) என்ற நாயனார் தேவாரம் பார்க்க. - (3) தோட்டிமை - ஒன்றுமை. "ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்" என்ற கருத்து. அழுத அகம் - என்றது அழுதகம் என அகரவீறு கெட்டு நின்றது. திங்கட் புதுமுகிழ் - திங்களாகிய புதிதின் மலரும் அரும்பு. உருவகம். - (4) நகை இருள் - விரியும் இருள். பேரிருள். ஈமக்கங்குல் - உலகமழிந்த ஊழி. நாராசம் - கம்பி. - (5) படர்கொடி - படரும் கொடிபோன்ற உமையம்மையார். சடைத் தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் - சடைக்கொத்து "மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றை" (அற்பு - அந் - 65) என்றபடி செவ்வொளி யுடைய பூங்கொத்துப் போன்றது. தம் நீர்மையும் "செம்பவள எரிபோன் மேனி" (அங்கமாலை) என்றபடி சிவந்த வண்ணம். தளிர் ஆகம் - தளிரின் வடிவம். - (7) அஞ்சணை கணையினான் - மன்மதன். ஐந்து பூக்களை அம்பாக உடையவன். அஞ்சு அணை குழலினாள் - ஐந்து வகையாக முடிக்கப்பட்ட கூந்தலையுடைய அம்மையார். ஆஞ்சணை அஞ்சு - ஆனைந்து. அஞ்சணை வேலி ஆரூர் - கமலாலயக்குளமும் பூங்கோயிலும் செங்கழுநீர் ஓடையும் ஒவ்வொன்றும்