பக்கம் எண் :


374திருத்தொண்டர் புராணம்

 

நுண்மணல்; பிருதுவி விசுவரூபமா யுள்ளவரே - வன்மீக நாதரே; இத்தலம் பிருதுவித் தலமாதல் குறிப்பு; இனி, அயிர்த்தல் - ஐயுறுதல்; தம்போன்ற பல மூர்த்திகளுள் தான் விரும்பிய மூர்த்தி எதுவோ என்று முசுகுந்தன் ஐயுறாவண்ணம் இருந்தவரே - வீதிவிடங்கரே - என்றலுமாம்" (இது வித்வான் - ந. சிவப்பிரகாச தேசிகர் எழுதிய குறிப்பு.) அல்லாதார் - ஒன்றுக்கும் பற்றாதவர். பயனற்றவர். - (3) தேர்ஊரார் - மா ஊரார் - தேரினையும் மா (குதிரை) வினையும் ஊர்தியாகக் கொள்ளாதவர். திங்களூர் : ஆப்பூதிநாயனாரது தலம். - (4) ஆவணமோ ஒற்றியோ - ஆவணம் - உரிமைச்சீட்டு. சீட்டின்படி முழு உரிமை பெற்றது. ஒற்றி - முழுஉரிமை பெறாமல் அனுபவிக்கும் உரிமைமட்டும் பெற்றது. - 5) கண்மாயம் - கண்ணைமயக்கும் வித்தை - இந்திரசாலம் என்பர். "இந்திரசாலம் போல வந்தருளி, யெவ்வெவர் தன்மையும் தன்வயப்படுத்தித், தானேயாகிய" (திருவா). - (6) கருவாகி...உருவாகிப் புறப்பட்டு - இது தாயின் கருப்பையினுள் குழவிபுகுந்து வளர்ந்து முற்றிப் பிறக்குந்தனையும் உடற்கூற்று வளர்ச்சியை முறையில் அறிவிக்கின்றது. இக்காலத்து உடற்கூற்று விஞ்ஞான நூலாராய்ச்சியாளர் மிக முயன்றுகாணும் உண்மைகள் இவை. பனியிலோர் பாதி சிறுதுளியாகத் தாயின் கருப்பைக்குள் புகுவது'; கரு அதன்பின் குழம்பாக வலுப்படுகின்றது; பின் அக்குழம்பு கடினத்தன்மை யடைகின்றது; அவ்வாறு கடினமாகிய உருவாகும்போது முதலில் வலுவடைகின்ற பகுதி மூளையாம்; அது கருமையும் வெண்மையுமாகிய இருபகுப்புடையது. அவற்றை gray and white matter of the brain என்பர் நவீனர். இவை அசைவுக்கு அறிதற்கும் கருவிகளாக உதவுகின்றன. இவ்வாறு மூளையும் கருநரம்பும் வெள்ளெலும்பும் ஆக உருப்பட்ட பின்பு உடம்பின் எழு தாதுக்களாகிய "தோலி ரத்த மிறைச்சி மேதை யெலும்பு மச்சை சுவேதநீர்" என்பவற்றுள் ஏனைத் தாதுக்களும் உண்டாகி உடல் உருவாக்கப்படுகின்றது. அவ்வாறு உரியபடி முற்றியபின் பிரசூதவாயு என்றும் காற்றினால் உந்தப்ட்டுக் குழவி கருப்பையினின்றும் புறப்படுத்தப்படுகின்றது : என்ற இவையெல்லாம் இங்குச் சுருக்கிக் கூறப்பட்டன. ஒருத்தி - தாய்; ஒவ்வோர் பிறவியிலும் ஒவ்வோர் தாய்; எப்பிறவியிலும் உடம்பு கொடுத்து வளர்க்கின்ற மாயை என்னும் ஒப்பற்ற இறைவனது சத்தியாகிய தாய். "கெர்ப்பமாய்ப், புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கா, லெல்லைபடா வுதரத் தீண்டியதீப் - பல்வகையா, லங்கே கிடந்த வநாதியுயிர் தம்பசியா, லெங்கேனுமாக வெடுக்குமென - வெங்கும்பிக், காயக் கருக்குழியிற் காத்திருந்துங் கான்மியத்துக், கேயக்கை கான் முதலா யெவ்வுறுப்பு - மாசறவே, செய்து திருத்திப்பின் பியோகிருத்தி முன்புக்க, வையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத, வல்லபமே போற்றியம் மாயக்காறான்மறைப்ப, நல்ல வறிவொழிந்து நன்குதீ - தெல்லையுறா, வக்காலந் தன்னிற் பசியையறி வித்தழுவித், துக்காவி சோரத்தா யுண்ணடுங்கி - மிக்கோங்குஞ், சிந்தை யுருக முலையுருகுந் திஞ்சுவைப்பால், வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் - பந்தித்த, பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிப்ப, நேசத்தை வைத்த நெறிபோற்றி" (போற்றிப் பஃறொடை). புறப்பட்டு - புறப்படுத்தப்பட்டு. செயப்பாட்டு வினையில் வந்தது. கடைபோதல் முற்ற நன்மை யடைதல். - (7) சிவஞான நெறிகள், சிவனை உயிர்கள் அடைய உதவும் நிலைகளைப் படிப்படியாய் உருசிபெற அகத்துறைப் பொருள்பட அறிவிக்கின்றது. யாவரும் இதனை நன்கு பயின்று இதன் பொருளை அறிந்தனுபவிக்கக் கடவர். பதிகக் குறிப்பிற் கண்டவை பார்க்க. தலைவி முதலில் தலைவனது பெயர்கேட்டுப், பின், அவனது வண்ணம் கேட்டுப், பின், அவனுடைய ஊர் கேட்டு, அவனிடத்தில் அன்புகொண்டு தன்