பக்கம் எண் :


376திருத்தொண்டர் புராணம்

 

சோதிச்சந் திரன்மேனி மறுச்செய் தானைச்
         சுடரங்கித் தேவனையோர் கைக்கொண் டானை
ஆதித்தன் பற்கொண்ட வம்மான் றன்னை
         யாரூரிற் கண்டடியே னயர்த்த வாறே.

1

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
         வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
யொப்பானை யொப்பிலா வொருவன் றன்னை
         யுத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
         வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
         யாரூரிற் கண்டடியே னயர்த்த வாறே.

4

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- தமது திருவுருவில் ஒருபாதியில் அம்மையாரை வைத்தவர்; காமனுடலட்டார்; திருவடியாற் கூற்றுவனை அட்டார்; ஊழிதோறூழி யுயர்ந்தார்; உலகமெல்லாம் வைப்பார் - களைவார் - வருவிப்பார்; அப்பாலைக் கப்பாலைக் கப்பாலார் என்றிவ்வா றெல்லாம் அறியப்படுகின்ற முழுமுதல்வராகிய இறைவரைத் திருவாரூரில் இருப்பாரைக் கண்டும் அடியேன் அடைய மறந்தவாறு தான் என்னை? "ஆரூரிலம்மான் றன்னை யறியா தடிநாயே னயர்த்த வாறே" என்ற பதிகத்தின் மகுடமும் இக்கருத்துப் பற்றியது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- தசமுகன். இராவணன். ஒருகால் - கயிலை மலையை எடுக்க முயன்றபோது. அழுவித்தான் - மலையின் கீழ்ச்சிக்க அழுத்தி அழும்படிச் செய்தமையால் அவனுக்கு அழுகின்றவன் - இராவணன் - என்ற பெயர் போந்தது. சந்திரன் மேனி மறுச் செய்தான் - தக்க யாகத்தில் வீரபத்திரரால் சந்திரனைத் தேய்த்தவன். ஆதித்தன்பல் கொண்டதும் அப்போது. - (2) விளக்கினொளி - மின்னொளி - முத்தின் சோதி - "சோதியே சுடரே சூழொளி விளக்கே" (திருவா.) சத்து - சித்து - ஆனந்தம் என்னும் மூன்றும் நிறைந்த சோமாஸ்கந்த மூர்த்தம். நீரகத்தே அழலானான் - ஒடுக்கும் முறை. ஏழ்கடலையும் சுவறச் செய்யும் தீ, அக்கடலின் அகத்தே தங்கிக் கிடப்பதென்பது வரலாறு. - (3) ஒரு தேவர் - விட்டுணு. ஒரு காலத்து - ஆயிரம் மலரா லருச்சித்தபோது. ஊழி ஆயினானை - காலங் கடந்தவர். என்றும் உள்ளவர். - (4) வெண்பளிங்கி னுட்பதித்த சோதியான் - "பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே" (திருமந்திரம்). வெண்பளிங்கு - ஆன்மா. அதனுள் தன் தன்மையை வைத்தவன். உயிர்க்குயிராயுள்ளவன். உலகமெல்லாம் வைப்பான் - நிலைபெற வைப்பவன். களைவான் - அழிப்பவன்; வருவிப்பான் - ஒடுங்கின தன்னிடத்திலிருந்து மீள உண்டாக்குபவன். புனருற்பவம் செய்விப்பவன். "ஒடுங்கி மலத்துளதாம் அந்தமாதி" (சிவஞான போதம் 1 - சூத்). - (6) நிலனாகி என்பது முதலியன இறைவன் ஐம்பூதம் முதலிய எல்லாமாயிருக்கும் தன்மை. இவையிற்றின் நியமமாகி - இவற்றை நியமித்து நடத்துபவன். நீதி - செம்மை நெறி. பாதியாய் ஒன்றாகி - "பாதியுமாய் முற்றுமாயினார்க்கு" (திருவா - பொற்சுண்ணம்.) பாதி...முன்றாய் - பெருகு நிலை. பரமாணுவாய் - சிறுகுநிலை. சோதியாயிருளாகி - சோதி - ஒளி; இருள் - ஒளிக்கு மறுதலை.. இவ்விரு பொருள்களுந் தாமச அகங்காரத்தின் தத்துவக்கூறு; தாமசக் கூறுகளிற் றோன்றியன. இவை தங்காரியங்களைச்