பக்கம் எண் :


378திருத்தொண்டர் புராணம்

 

(9) பிண்டம் - உயிர் புகுந்த உடல். "புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால் ... காயக்கருக் குழியிற் காத்திருந்தும்" முண்டம் - நெற்றி. - (10) ஒருகாலத்து அதற்கேற்ப ஒருருவாகி நின்றாலும் ஊழிபலவும் கண்டு மேலும் நீண்டிருந்தவர். உருகாதார்...நீங்காதார் - மனமுருகி நையாதார் மனத்துள் நில்லார்; ஆயினும் தம்மை விரும்புவார் மனத்துள் நீங்காதுறைபவர். அருகாக...என்பார் - நாயனாரை முன் ஆட்கொண்ட சரிதக் குறிப்பு. "தஞ்சே கண்டேன் ... அஞ்சேலுன்னை யழைக்க வந்தேனென்றார்" (வாய்மூர்) என்பதும் கருதுக. - (11) நன்றாக நடை பலவும் - உயிர்கள் நன்மை பெறும்படி பல சமய நெறிகளையும். 4-வது பாட்டுப் பார்க்க. கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் - கொன்று"ண்பார்பாலும் கொல்லப்பட்டதன்பாலும் நின்றவர். கண்ணப்ப நாயனார் சரிதக் குறிப்பும் காணப்படும். அன்றாகில் - எல்லாப் பொருளும் எல்லாத் திசையும் ஆயினார் என்று சொல்வோம்; அவ்வாறு சொல்லாவிடில்.

XIV திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்
         தீங்கரும்பி னின்சுவையைத் தெளிந்த தேறற்
குருமணியைத் குழல்மொந்தை தாளம் வீணை
         கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்
         பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்
அருமணியை யாரூரி லம்மான் றன்னை
         யறியா தடிநாயே னயர்த்த வாறே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருமணி - தித்தித்திக்கும தேன் - தீங்கரும்பி னின்சுவை - பொன்னேபோற் றிருமேனி யுடையான் - முந்திய வல்வினைகள் தீர்ப்பான் - மறுமையும் இம்மையு மானான் என்பன முதலாக அறியப்படுகின்ற இறைவனை, ஆரூரில் அம்மானை, அறியாது அடிநாயேன் இத்தனை காலமும் மறந்தவாறு தான் என்னே!

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) (திரு) மணி - திரு - தித்திக்கும் - தேன் - தீங்கரும்பின் இன் சுவை - அடைமொழிகள் சிறப்புக்குறித்தன. பிறிதினியைபு நீக்கிய விசேடணம். குழல் - மொந்தை - தாளம் - வீணை - கொக்கரை - சச்சாரி - இயங்களின் வகை. இவை இறைவனது திருக்கூத்துக் கியையப் பூதகணங்களால் முழக்கப்படுபவை. பாணியான் என்றது இலயம்படக் கைகொட்டியாடுதல் குறித்தது. அயர்த்தல் - மறத்தல் - "ஐம்புல வேடரி னயர்ந்தனை வளர்ந்தென" (8 - சூத்) என்பது சிவஞான போதம். ஆறே - ஆறுதான் என்னே! இரங்கற் குறிப்பு. - (2) பொன்னே போல் திருமேனி யுடையான் - "பொன்னார் மேனியன்" (தேவா); ஏகாரம் தேற்றம். - (4) முந்திய வல்வினைகள் - பிராரத்த வினைகள் பழகிய வல்வினைகள் (6) என்பதுமிது. மறுமையும் இம்மையும் ஆனான் - இம்மை மறுமைப் பயன்களைச் சேர்ப்பவன். அந்தரன் - தான் எல்லாவற்றையும் தாங்கித் தன்னைத் தாங்குவது பிறிதொன்று மில்லாதவன். - (5) பிறநெறி - வேற்றுச் சமயங்கள். - (6) பாவகன் - பாவிக்கப்படுவன். - (7) நாள்வாயும் - வாணாட்களைப், பேசாத நாட்களாகக் கழிக்காது, இறைவனைப் பேசுதலாற், பிறந்த நாட்களாக வாய்க்கச்செய்யும் - (8) பரிதி - இங்கு உதிக்கும் ஒருகோடி ஞாயிற்றினொளி குறித்தது. - (10) பெண்ணிரண்டு - உமையும் கங்கையும். ஆதி - பரை என்றலுமாம். பெண் - சத்தி. ஆண் - சத்தன். சத்தியை உடையவன். குறிப்பு :- "ஆரூரிற் கண்டடியே னயர்த்த வாறே" என்ற மகுடத்தையும், "அறியாதடி