புனருற்பவம் நிகழ்த்தத் தொடங்குதற்கு. "வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" (திருவிருத்தம்). - (4) ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற ஓங்குதல் - உயர்தல் - எழுதல் - உலகங்களைப் படைக்கும்படி நினைத்தலும் வெளிப்படுதலும் எழுவித்தலும் குறித்தன. நின்ற - கலப்பால் நிறைந்த. நின்ற திருத்தாண்டகம் பார்க்க. ஒடுகம்போல் ஏழுகமாய் - எல்லாக் காலமுமாகி. நீர் நீங்கிய - என்க. நீர் - தனது நீர்மை. இதனை நெடுமால் என்பதனோடுங் கூட்டுக. - (5) பாலனாய் வளர்ந்திலாப் பான்மை - ஒரு காலத்துத் தோன்றாமலும மாறாமலும் நிலைத்து உள்ள தன்மை. அங்கங்கே - "உயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்" (பிள்ளையார் - தேவா). முற்றும்மை தொக்கது. இத்தன்மை திருவிளையாடற் புராணத்துட் பல சரிதங்களிலும் காண்க. நெருதல் - இன்று நாளை - இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற முக்காலமும். - (6) திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டி - "மாலுங் காட்டி நெறிகாட்டி வாரா வுலக நெறியேறக், கோலங் காட்டியாண்டாயை" (திருவா). அறம்பல - சிவதன்ம நெறிகள். - (7) நிற்பன - நடப்பன - அசரம் சரம் ஆகிய பிறப்புக்கள். நீயே யாகிக் கலந்து - இறைவன் உலகெலாம் அவையேயாய்க் கலந்து நிற்குமியல்பு. காரணத்தால் - உலகங் காத்தற் பொருட்டு. - (8) பாதுகாத்து - உயிர்களை வாடாமற் காத்து. - (9) பொருள் காணற் கரிய திருப்பாட்டுக்களுள் ஒன்று. - (10) சண்டி - சண்டீசர். பரமர் திருவித்தம் (1492) :- XVIII திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித் தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர்தொண்டீர்! ஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா னடிநிழற்கீழ்ச் சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே. |
1 | ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொ னாரூ ரகத்தடக்கிப் பாரூர் பர்ப்பத்தம் பங்குனி யுத்தரம் பாற்படுத்தான் ராரூர் நறுமலர் நாத னடித் தொண்ட னம்பிநந்தி நீராற் றிருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே. |
2 | துடிக்கின்ற பாம்பரை யார்த்துத் துளங்கா மதியணிந்து முடித்தொண்ட ராகி முனிவர் பணிசெய்வ தேயுமன்றிப் பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்தபொற்பால் அடித்தொண்ட னந்தியென் பானுள னாரூ ரமுதினுக்கே. |
3 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- தொண்டர்களை நோக்கி நல்வழியை உபதேசித்தது. தொண்டர்களே! ஆரூர்ப்பெருமான் திருவடிக்கீழ்ச் சலமின்றித் தொண்டுபட்டுய்ம்மின்! அவரருள்பெற்றுத், தொண்டர்க் குரையாணிபோல் விளங்கி, நாடறிய நீரால் விளக்கெரித்த நமிநந்தியாரது அடிமைத் திறத்தினைப் போற்றியுய்ம்மின்! குறிப்பு :- நமிநந்தியடிகள் திருத்தொண்டின் நன்மைப் பான்மையினால் பரமரைப் போற்றும் திருப்பதிகத்தினுள் அவரை வைத்துப்பாடிய பதிகம். 1492-ல் ஆசிரியர் இதனைத் தேற்றம்பட எடுத்துக் காட்டினர். இப்பதிகத்துள் ஏழு பாட்டுக்களே கிடைத்துள்ளன! பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வேம்பினைப்பேசி - வேம்பு - இங்கு வேம்பு போன்று கைப்புடையனவாய், அறிஞராலும் நூல்களாலும் வெறுக்கப்பட்ட சொற்களைக் குறித்தது. விடக்கினை - மாமிச பிண்டமாகிய உடலை. வினை பெருக்கி - |