பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்383

 

ஆகாமிய கன்மங்களை ஏறச்செய்து. "பொய்ம்மையே பெக்கி" (திருவா). தூம்பு - வயிறு - "தூராக் குழியைத் தூர்த்து" (11-ம் திருமுறை. திருவிடை - மும் - ) இருத்திர் - இருக்கவேண்டா என்பது குறிப்பு. சாம்பல் - திருநீறு. சலம் - வஞ்சனை. - (2) ஆராய்ந்து - ஆராய்வோமாயின்; அடித்தொண்டர் ஆணிப்பொன் - திருத்தொண்டினீர்மையை அறியும் பொன் உரையாணி போன்றார். இவ்வாறு நமிநந்தி நாயனாரைத் திருநாவுக்கரசர் பாராட்டிய திறத்தை ஆசிரியர் "நீறு புனைவாரடியார்க்கு நெடுவா ணியதி யாகவே, வேறு வேறு வேண்டுவன வெல்லாஞ் செய்து மேவுதலால், ஏறு சிறப்பின் மணிப்புற்றி லிருந்தார் தொண்டர்க் காணியெனும், பேறு திருநா வுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்" (நமிநந்தியார். புரா. 31) என்ற தேற்றம்பெற விளக்கியருளினர். அகத்தடக்கி - தியாகேசரைத்தம் அகத்துள் அகலாது வைத்து. "அம்பலத், தாடி பாதமென் னெஞ்சு ளிருக்கவே" (தேவா). "சிக்கெனப் பிடித்தேன்" (திருவா). பாரூர் பரிப்ப - உலகமெல்லாம் கொண்டாட. பங்குனி உத்திரம் பாற்படுத்தான் - நமிநந்தியடிகள் விளக்கிய திருவருட் பேறு கண்ட சோழ அரசர். அவர் விரும்பி யருளியவாறே அவரது திருத்தொண்டின் நன்மைபற்றிப் புற்றிடங்கொண்ட பெருமானுக்கு அமுதுபடி முதலிய நித்திய நிபந்தங்களையும், வீதி விடங்கப்பெருமானுக்குப் பங்குனி உத்தரத் திருவிழாச் சிறப்பாகிய நைமித்திக நிபந்தமும் வேதாகமநூல் விதி விளங்க அமைத்தான் என்பது வரலாறு. (நமிநந்தியார் புராணம் 19, 20 பாட்டுக்கள்.) பாற்படுத்தல் - அரசரையும், அவ்வழியே உலகரையும் வழிப்படுத்துதல். நாரூர் நறுமலர் நாதன் - திருவாரூர்ச் சிறப்புக்களுள் ஒன்றாகிய செங்கழுநீர் மலரை நாளும் அணியும் வீதி விடங்கர். அடித்தொண்டன் நம்பி நந்தி - அடித் தொண்டன் - 4-வது பாட்டில் விளக்கப்படுவது. நம்பி நந்தி - என்பது நமிநந்தி என வழங்குவது போலும். நீரால்...நாடறியு மன்றே - வரலாறு அவர் புராணத்துக் காண்க. இவ்வருட்செயல் திருவாரூர் அரனெறித் திருக்கோயிலில் நிகழ்ந்தது. இது பூங்கோயிலினுள் தென் கீழ்த் திசையில் உள்ள மேற்கு நோக்கிய தனியாலயம். இதனுள் நமிநந்தியாரது திருவுருவம் கையில் விளக்கேந்தியபடியாக வைத்து வழிபடப் பெறுகின்றது. பல நாளும் செய்தமையால் நீணாடறியும் என்றார். அன்றே - உறுதிப் பொருள் தந்தது. ஏகாரம் தேற்றம். "நாட்டாரறிய" (நமிநந்தியார் புரா. 33) என்பது பார்க்க. - (3) படிமக்கலம் - கண்ணாடி. பெரியோர்பாற் கொண்டுசெல்லும் கையுறை என்றலுமாம். இப்பாட்டு எளிதில் பொருள் விளங்காதவற்றுளொன்று. - (4) முனிவர் - இங்குச் சிவசாரூபம் பெற்றுப் பணிசெய்யும் கணங்களைக் குறித்தது. முடித்தொண்டர் என்றது பிறரால் தொழப்படும் பெருமைத் தொண்டர் என்ற பொருளில் வந்தது. அடித்தொண்டன் - அடியார்க்கடியவன். நந்தி - நமிநந்தி. ஆரூர் அமுது - ஆரூர்ப் பெருமான். - (5) கரும்பு பிடித்தவர் - கரும்புவில் ஏந்திய மன்மதன். கோடலியா லிரும்பு பிடித்தவர் - சண்டீசர். கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் என்றும், இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் என்றும் முரண் அணிச் சுவைபடக் கூறியபடி. இன்புறப் படுதல் - நித்தியானந்தமாகிய சிவானந்தம்பெற வைத்தல். - (6) தந்தி - நமிநந்தி. புறப்படில் - தம்முடனில்லாவிடில். தவளப் பொடியணிவார்க்கு - நீறணியும் தொண்டர்க்கு. செல்வ மெய்தினராயினும் திருவாரூரினுள் ளிருந்தேயும், இருள் கொண்டதே யொக்கும் நந்தியில்லாவிடத்து? - (10) சிறுகாலை சங்கொலிப் பித்திடுமின் - திருப்பள்ளி யெழுச்சியில் சங்கம் ஒலிக்கும் செயல் குறித்தது. சிறுகாலை - வைகறை. "இயம்பின சங்கம்" (திருவா). அழலில் குங்கிலியப் புகைக் கூட்டுக் காட்டி - தூபம் இட்டு. இருபது தோள் அங்கு உலம் வைத்தவன் - உலம் - திரண்ட கல். தோள்களைக் கல்லின்