| நந்திபணி கொண்டருளு நம்பன் றன்னை நாகேச் சரமிடமா நண்ணி னானைச் சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந் தத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னை யிந்துநுழை பொழிலாரூர் மூலட் டான மிடங்கொண்ட பெருமானை யிமையோர் போற்றும் அந்தணனை யரனெறியி லப்பன் றன்னை யடைந்தடியே னருவினைநேர யறுத்த வாறே. |
2 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- கரியுரிபோர்த்தானை - பூவணம் முதலிய தலங்களில் விளங்க எழுந்தருளியவனை, திருவாரூர்த் திருமூலட்டானத்துப் பொருந்தி எழுந்தருளியிருந்த பெருமானை, அரனெறியிலப்பனை, அடியேன் அடைந்து அறுவினை நோய் அறுத்தவாறுதான் என்னே!; அற்புதமாவது!. குறிப்பு :- இத்திருப்பதிகப் பாட்டுக்கள்தோறும் வெவ்வேறு ஒன்றிரண்டு தலங்களிலும் திருவாரூர்த் திருமூலட்டானத்திலும் இறைவர் விளங்க எழுந்தருளியிருக்கும் தன்மையினையும் அவரே அரனெறியில் தேற்றம்பட விளங்வதனையும் உடன்கூறி யருளுதல் காண்க. இதனை ஆசிரியர் "தேன்மருவுங் கொன்றையார் திருவாரூர் அரனெறியிற்றிகழுந் தன்மை, யானதிறமும் போற்றி" (1492) என்று எடுத்துக் காட்டினர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கட்டி - அமிர்து - தேன் - வமையாகும்பெயர். காண்பரிய - பசுபோதத்தாற் காண்டற்கரிய. அருவினைநோய் - பழவினையாகிய நோய். வினையும் அதனால் வந்த நோயும் என்றலுமாம். - (2) காளத்த கயிலாயம் - காளத்தியும் கயிலை எனப்படும். (கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி). காளத்தியிலிருந்தபடி ஆசாரியர் பெருமக்கள் மூவரும் திருத்கயிலையை நினைந்தனர் என்பது வரலாறு. அற்புதன் - இன்னனென்று அறிய வாராதவன். - (3) மெய்ஞ்ஞான விளக்கு - மெய் - சத்து - என்றும் உள்ளது - அழியாதது. ஞானம் - சித்து - அறிவின் நிறைவு. விளக்கு - அது கொண்டு உலகினை விளங்கத் தேற்றுவது. - (4) நந்தி - நமிநந்தி. இந்து - மதி. - (5) சோதிலிங்கம் - இயல்பாய் ஒளிவிட்டு விளங்கும் இலிங்கத் திருமேனி. விடக்கு - மாமிசம். அதனாலாய உடல். ஆகுபெயர். - (6) பொருள்களும் அவற்றைக் காட்டும் சொற்களும் ஆயினான். சொல், பொருள் என்ற இருவகை உலகமும். மருள்...மருந்து - மருளை மாற்றும் மருந்து போல்பவன். மருள் - பொருளல்லவற்றைப் பொருள் என்று உணர்தற்கேதுவாகிய மயக்கம். இருள் - நிழல். - (8) பாலன் - உபமன்னியு முனிவர். பவளம் ஈன்ற ஆலவன் - பவளம் போலக் காய்க்கும் ஆலின்கீழ் எழுந்தருளியவன். - (9) இப்பாட்டில் பின் இரண்டடிகள் சிதலரித்தொழிந்தன!. மாணிக்கச் சோதி - இயல்பாகிய ஒளி. - (10) பகலவன் - ஞாயிறு. படிறன் - பல் உகுத்த செயல் குறித்து நின்றது. "பன்மையே பேசும் படிறன்" (தேவா). இருளானான் - விளங்காது நிற்பவன்; அகலவனை என்பதை விளக்கி நின்றது. 1494. | மேவுதிரு வாதிரைநாள் வீதிவிடங் கப்பெருமாள் பவனி தன்னில் தேவருடன் முனிவர்கண்முன் சேவிக்கு மடியார்களுடன்சேவித்து, மூவுலகுங் களிகூர வரம்பெருமை முறைமையெலாங்கண்டுபோற்றி, நாவினுக்குத் தனியரசர் நயக்குநா ணம்பர்திரு வருளினாலே, 229 |
|