1495. | திருப்புகலூ ரமர்ந்தருளுஞ் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டேத்தும்துப் விருப்புடைய வுள்ளத்து மேவியெழுங் காதல்புரி வேட்கை கூர வொருப்படுவார் திருவாரூ ரொருவாறுதொழுதகன்றங்குள்ளம்வைத் பொருப்பரைய்ன் மடப்பாவையிடப்பாகர் பதிபிறவும் பணிந்து போந்தார். |
1494. (இ-ள்.) மேவு...தன்னில் பொருந்தும் திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப் பெருமான் எழுந்தருளும் திருவுலாவில்; தேவருடன் ... சேவித்து - தேவர்களுடனே முனிவர்களுடைய கூட்டத்தில் அவர்கட்கெல்லாம் முன்னே நின்று சேவிக்கும் அடியார்களுடனே கூடிச் சேவித்து; மூவுலகும் போற்றி - மூன்றுலகங்களும் களிமகிழ்ச்சி யெய்திட வருகின்ற பெருமுறைகளையெல்லாம் தான் கண்ணாரக் கண்டு துதித்து; நாவினுக்குத் தனியரசர் அருளினாலே - ஒப்பற்ற திருநாவுக்கரசர் விரும்பி வாழும் நாட்களில் இறைவரது திருவருளினாலே, 229 1495. (இ-ள்.) திருப்புகலூர் ... வேட்கைகூர - திருப்புகலூரில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானது சேவடிகளைக் கும்பிட்டுப் பரவுகின்ற விருப்பத்தைக்கொண்ட திருவுள்ளத்தில், பொருந்தி எழுகின்ற காதல் இடைவிடாது பெருகுகின்ற வேட்கையாக ஓங்க; ஒருப்படுவார் - அவ்வாறே செல்வதற்கு மனம் ஒருப்படுவாராய்; திருவாரூர் ... வைத்து - திருவாரூரை ஒருவாறாகத் தொழுது நீங்கித் தம் கருத்தை அங்குத் திருவாரூரிலே வைத்து; பொருப்பரையன் ... போந்தார் - மலையரசன் பாவையாராகிய பார்வதி யம்மையாரை இடப்பாகத்தில் வைத்த பெருமான் எழுந்தளிய பிற பதிகளையும் பணிந்து சென்றனர். 230 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1494. (வி-ரை.) மேவு - சிறப்புக்கள் பொருந்தும். அச்சிறப்புக்களை, மேல் தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார் என்றும், மூவுலகும் களிகூர என்றும் விரிக்கின்றார். இச்சிறப்புக்களை யெல்லாம் நாயனார் தமது திருவாக்கினால் "முத்துவிதானம்" என்ற திருப்பதிகத்தினுள் விரிக்கின்றமை பின்னர்க் காணலாம். இத்துணையும்பெற மேவு என்றார். திருவாதிரை நாள் - மார்கழித் திருவாதிரைத் திருவிழா. பவனி - இறைவர் தமது குழாங்களுடன் திருவீதியில் போதும் திருவுலா. தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்கள் - "தொண்டர்கள் பின் உம்பர்குழாம் மல்குதிருக் காளத்தி" (திருஞான - புரா.) முதலியவை பார்க்க. திருத்தொண்டர் கூட்டத்தின் சிறப்பினால் மிக்கது திருவாரூர் என்றதும் குறிப்பு. நாவினுக்குத் தனியரசர் - "நாவுக்கரசு" என்று இறைவர் அளித்த திருப்பெயரை மேலும், தனி - தனக்கொப்பற்ற - என்று ஆசிரியர் விளக்கஞ் செய்தபடி. "மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை" என்ற ஆளுடைய பிள்ளையாரது திருவாலவாய்த் தேவாரத்தினை "மங்கையர்க்குத் தனியரசி" என்று (மங்கை - புரா - 1) மேல் விளக்கம் செய்வதும் காண்க. நயத்தல் - பெருவிருப்பினோடு ஒழுகிடுதலும், அதனால் மகிழ்ச்சி பெருகுதலும். "நாயகன்கண்ணயப்பால்" (சித்தி - 4 - 52) என்ற விடத்து நயப்பு - மகிழ்ச்சி என்றுரைத்தது காண்க. திரு அருளினாலே - வேட்கைகூர - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. 229 1495. (வி-ரை.) விருப்பு - காதல் - வேட்கை - இவற்றின் விளைவுகள் பற்றி முன் உரைத்தவை நினைவுகூர்தற்பாலன. இவை திருவருளினால் விளைந்தன என்பது |