(5) முகில் போற் கண்டம் - உருவும் பயனும் பற்றிவந்த உவமம். பாவம் - அல்லல் நோய்வினை - நல்குரவு - காரண காரியமாய் வருவன. அல்லல் செய்யும் நோய். படிந்தான் - வெளிப்பட நிறைந்தான். - (6) சிரம் - இங்கு ஆகுபெயராய்க் கபாலம் குறித்து நின்றது. - (7) நெதியாளன் - குபேரன். நதி - கங்கை; நல்லம் - சோழநாட்டில் காவிரிக்குத் தென்கரையில் 34-வது தலம். - (8) குறைந்தடைந்து "குறைந்தடையும் நன்னாளில்" (1310). கொண்டார் பற்றாகக் கொண்டார் - (9) வளவி - சிரம். கலந்து - நெஞ்சிற் கலத்தலினால். பானவன் - பரவினவன். நிறைவானவன். - (10) பேர் - இராவணன் என்ற பெயர். படுத்தான் - படச் செய்தான் அழித்தான். பதி பிறவும் என்றதில் கருதப்பட்ட திருவிற்குடி, திருப்பனையூர் முதலிய தலங்களில் நாயனார் அருளிய தேவாரங்கள் கிடைத்தில்! சிதலரித் தொழிந்தன போலும். 1496. | அந்நாளி லாளுடைய பிள்ளையார் திருப்புகலி யதன்க ணின்றும் பன்னாகப் பூணணிவார் பயின்றதிருப் பதிபலவும் பணிந்து செல்வார் புன்னாக மணங்கமழும் பூம்புகலூர் வந்திறைஞ்சிப் பொருவில் சீர்த்தி மின்னாரும் புரிமுந்நூன் முருகனார் திருமடத்தின் மேவுங் காலை, |
1497. | ஆண்டவர செழுந்தருளி யணியாரூர் மணிப்புற்றி லமர்ந்து வாழும் நீண்டசுடர் மாமணியைக் கும்பிட்டு நீடுதிருப் புகலூர் நோக்கி மீண்டருளி னாரென்று கேட்டருளி யெதிர்கொள்ளும் விருப்பி னோடும் ஈண்டுபெருந் தொண்டர்குழாம் புடைசூழ வெழுந்தருளி யெதிரே சென்றார். |
1496. (இ-ள்.) வெளிப்படை. அந்நாளில், ஆளுடைய பிள்ளையார் சீர்காழியினின்றும் புறப்பட்டுப், பாம்புகளாகிய அணிகளை அணிந்த சிவபெருமான் விளங்கிய திருத்தலங்கள் பலவற்றையும் அடைந்து, பணிந்து, செல்வார், சுரபுன்னை மலர்களின் வாசம் வீசுகின்ற பூம்புகலூரில் வந்து தரிசித்து, ஒப்பற்ற சிறப்பினையுடைய ஒளியுடைய முப்புரிநூல் அணிந்த முருகநாயனாரது திருமடத்தில் எழுந்தருளியிருக்கும காலத்து, 231 1497. (இ-ள்.) ஆண்ட அரசு ... கேட்டருளி (அவர்) இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட திருநாவுக்கரசுகள் எழுந்தருளிப் போந்து அணியுடைய திருவாரூரில் மணிப்புற்றில் விரும்பி வீற்றிருக்கும் நீண்ட - சுடருடைய மாமணியைக் கும்பிட்டு, திருநீடும் புகலூரினை நோக்கி எழுந்தருளினார் என்று கேட்டருளி; எதிர்கொள்ளும் விருப்பினாலே - அவரை எதிர்கொண்டழைக்கும் விருப்பத்தினாலே; ஈண்டுபெரும் ... எதிரே வந்தார் - நெருங்கிய தொண்டர் கூட்டம் தம்மைச் சுற்றிச் சூழ்ந்துவர எழுந்தருளி எதிரே சென்றனர். 232 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1496. (வி-ரை.) அந்நாளில்...செல்வார் - இத்திருப்பாட்டினால் நாயனாரும் ஆளுடைய பிள்ளையாரும் சீகாழியில் கூடிப்பிரிந்த பின்னர், இதுவரை ஆளுடைய பிள்ளையாரது சரித நிகழ்ச்சியைச் சுருக்கிக் காட்டினார். "ஆண்டவர செழுந்தருளக் கோலக் காவை யவரோடுஞ் சென்றிறைஞ்சி யன்பு கொண்டு, மீண்டருளினாரவரும் விடைகொண்டு" (1454) என்று முன்னரும், "புகலிப் பிரானிசைவோடும், பின்னாக வெய்த விறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்" (திருஞான - புரா - 274) என்று ஆளடைய பிள்ளையார் புராணத்தும் இவ்விரு பெருமக்களும் கூடிப்பிரிந்த நிகழ்ச்சி உரைக்கப்பட்டது. அவ்வாறு பிரிந்த நாளிலிருந்து திருப்புகலியினின்றும் ஆளுடைய பிள்ளையார் தமது அவதார உள்ளுறையாகிய பரசமய நிராகரிப்பும் திருநீற்றுச் சைவ நெறி ஆக்கமும் நிகழச் |