பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்389

 

செய்தருளும் பெரும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள, சிறந்த, தமது ஐந்தாவது தலயாத்திரையில் புகுவாராய்ச் சீகாழியினின்றும் புறப்பட்டுப் பல தலங்களையுங் கும்பிட்டுத் திருப்புகலூரில் எழுந்தருளியிருந்தனர். அச்செய்தி அவர்தம் புராணம் "அங்க ணமர்கின்ற நாளி லருந்தமிழ் நாடெத்தி னுள்ளுந், திங்கட் சடையண்ண லார்தந் திருப்பதி யாவையும் கும்பிட், டெங்குந் தமிழ்மாலை பாடி யேத்தியிங்லார்தந் திருப்பதி யாவையுங் குமபிட், டெங்குந் தமிழ்மாலை பாடி யேத்தியிங்கெய்துவ னென்று" (திருஞான புரா - 279), என்று தொடங்கி, "ஓங்கிய வன்பின் முருகனார்தம் முயர்திருத் தொண்டு சிறப்பித் தோங்கும், பாங்குடை வண்டமிழ் பாடி நாளும் பரமர்தம் பாதம் பணிந்திருந்தார்" (மேற்படி - 491) என்பது வரை 212 திருப்பாட்டுக்களால் உரைக்கப்படுவது காண்க. ஆளுடைய பிள்ளையாரது அப்பெருந் தனித் தலயாத்திரையினிடையேதான் அரசுகள் திருப்புகலூரில் அப்பெருந்தகையைக் கூடிப் பின்னர்த் திருமறைக் காட்டில் அவர் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளும் வரையில் உடனிருந்து சென்றருளுவார். அப்பெருந் தனி யாத்திரையில் ஆளுடைய பிள்ளையார் சரிதத்தினுள் சோழ நாட்டில் திருக்கண்ணார் கோயில், திருப்புள்ளிருக்குவேளூர் முதலான பல தலங்களையும் கும்பிட்டுச் சென்றதும், மழநாட்டில் கொல்லி மழவன் மகளின் முயலகனோய் தீர்த்தருளிய செயலும், கொங்கு நாட்டில் பனிநோய் தீர்த்தருளிய செயலும், திருப்பட்டீச்சரத்தில் முத்துப்பந்தர் பெற்றதும், யாழ்மூரித் திருப்பதிகம் பாடியதும், திருமருகலில் விடந்தீர்த்த அற்புதமும், பிறவும் நிகழ்ந்தன. அவை யாவும் பிள்ளையாரது சரித வரலாறுகளாயினமையாலும், அந்நிகழ்ச்சிகளின்பின் பிள்ளையாரை அரசுகள் கூடிய அம்மட்டில் இச்சரிதத்தினுள் பேச வேண்டுதல் தகுதியாமாதலாலும், அவ்வளவும் சுருக்கிக் குறிப்பிட்டு ஈண்டுப் பணிந்து செல்வார் என்ற தொடர்க் குறிப்பினாற் கூறியருளிய கவிநலம் காண்க. முன் சரிதத் தொடர்ச்சியை நினைவூட்டும் பொருட்டு இது தரப்பட்டது.

திருப்புகலி அதன்கண் நின்றும் - போந்து என்பது வருவித்துக்கொள்க. போந்து தல யாத்திரை தொடங்கியது மேற்காட்டப்பட்டது.

பயின்ற - விளங்க வீற்றிருந் தருள்புரிகின்ற. எங்கும் உள்ள கடவுள் ஒருவரே என்பதும் உணர்த்தப்பட்டது.

பதி பலவும் - இவை ஆளுடைய பிள்ளையார் புராணத்துள் திருக்கண்ணார் கோயில் முதலாகத் திருப்புகலூர் ஈறாக, 279-வது பாட்டு முதல் 491-வது பாட்டுவரை உள்ள பகுதியினுட் கண்டுகொள்க.

செல்வார் - புகலியினின்றும் யாத்திரையாகப் புறப்பட்ட பிள்ளையார் அங்கு மீண்டடையும் வரை தொடர்ந்து செல்வாராதலின் எதிர்கால வினைப்பெயராற் கூறினார்.

புன்னாகம் - சுரபுன்னை; மலர்களைக் குறித்தது. இங்குப் புன்னை தலமரமாம். ஆலயத்தினுள் உள்ளது. "புன்னைப் பொழிற்புக லூரண்ணல்" (திருவிருத்).

பூம்புகலூர் - பூ - போக மோட்சங்களுக்கு இடமாகிய அழகு. பூங்கமல வாவியினிடையே திருக்கோயில் ஒரு தாமரை போன்றிருத்தலால் வந்த பெயர் என்றலுமாம். "பூம்புகலூர் மேவிய புண்ணியனே" (தாண்டகம்). முன் 263-ல் உரைத்தவை
பார்க்க.

பொருவில் சீர்த்தி - இறைவனைக் காலங்களுக் கேற்றபடி வெவ்வேறு திருப்பூ மாலை வகைகளா லலங்கரித்து, அவரது திருவருட் குறிப்பறிந்து மகிழும் சிறப்பும், ஆளுடைய பிள்ளையார் - ஆளுடைய அரசுகள் என்ற எம்பெருமக்களிருவரையும் ஒருங்கே தமது திருமடத்தில் எழுந்தருளப்பெற்ற வழிபட்ட சிறப்பும்,