1299. | "தம்பியா ருளராக வேண்டு"மென வைத்ததயா வும்பருவ கணையவுறு நிலைவிலக்க, வுயிர்தாங்கி, யம்பொன்மணி நூறாங்கா, தனைத்துயிர்க்கு மருடாங்கி, யிம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி யாரிருந்தார். |
34 1297.(இ-ள்.) வெளிப்படை. "எனது தந்தையும் என் அன்னையும் என்னை அவருக்குக் கொக்க இசைந்தனர்; அந்த முறையினாலே நான் அவருக்கே உரியது; ஆதலினால் எனது இந்த வுயிரை அவருடைய உயிருடன் சேர்விப்பன்" என்று திலகவதியம்மையார் துணிவு கொண்டெழுந்தனராக, அவருடைய திருவடியிணையின்மேல் மருணீக்கியார் வந்து விழுந்தனராகி, 32 1298.(இ-ள்.) வெளிப்படை. அந்த நிலையில் மிகவும் புலம்பித் "தாயும் தந்தையும் போயின பின்னையும் நான் உம்மை வணங்கப்பெறுதலினால் உயிர் வாழ்ந்தேன்; இனி, என்னைத் தனியாகக் கைவிட்டு நீர் செல்வீரேயாகில் நானும் முன்னம் உயிர் விடுவேன்" என்று சொல்லித் துன்பத்துள் அழுந்தினாராகவே, 33 1299. (இ-ள்.) வெளிப்படை. "தமது தம்பியார் உளராகவேண்டும்" என்று உட்கொண்டு வைத்த கருணையானது தேவருலகு செல்லும் துணிவு கொண்ட நிலையை விலக்க, உயிரைத் தாங்குவாராகி, அழகிய பொன்னும் மணியுமுடைய நாண் பூணுதலை ஒழித்து, எல்லா வுயிர்களுக்கும் கருணையைத் தாங்கி நின்று, இவ்வுலகத்தில் மனையில் இருந்து தவம்புரிந்துகொண்டு திலகவதியார் இருந்தார். 34 இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்த கருத்தும் நிகழ்ச்சியும்கொண்டு ஒன்றாக முடிவுபெற்றன. கருத்தின் தொடர்ச்சிபற்றி ஒன்றாக முடிபுகொண்டு உரைக்கப்பட்டன. இவ்வாறன்றி விழுந்தார் (1297) - அழந்தினார் (1298) என்பவற்றை உள்ளவாறே வினைமுற்றாகக்கொண்டு தனி முடிபுகாளக உரைப்பினுமிழுக்கில்லை. 1297. (வி-ரை.) எந்தையும்....இசைந்தார்கள் - மணம் இசைந்து மகட்கொடை நேர்வதில் குடும்பத் தலைவரான தந்தையாரே முற்பட வருவதும், தந்தையார் எண்ணத்தக்கவற்றை எண்ணியும் பேசத்தக்கவற்றைப் பேசியும் இசைவுபட்டால், தாயாரின் இசைவு பின்னரே வேண்டுப்படுவதும், வழக்கும் முறையுமாதலின் எந்தையும் என முதலில் வைத்துக் கூறப்பட்டது. "புகழனார்...மணநேர்ந்தார்" (1289) என்றது பார்க்க. எம் தந்தை என்றது எந்தை என மருவிநின்றது; மரூஉ வழக்கு. எனைக் கொடுக்க - பெண்கள் மணத்தின் முன்னர்ப் பெற்றோர் சொல்வழியும், மணத்தின்பின் கணவன் சொல்வழியும், கணவனுக்குப் பின் இருக்கவேண்டிவரின் புதல்வன் சொல்வழியும் அமர்ந்து ஒழுகக்கடவர் என்ற மரபினை நமது நாட்டில் முந்தையோர் கையாண்டுவந்தனர். இந்நாளில் பெண்உரிமை என்ற பேரால் அம்மரபினைப் பலவாற்றானும் மாற்றும் முயற்சிகள் எழுகின்றன. அவை நின்க; இங்குத் திலகவதியம்மையார் கைக்கொண்டு ஒழுகி நின்றது முந்தையோர் கண்ட முறை. அதன்படி பெற்றோர்களுடைய இசைவின் வழியே தாம் நிற்கும் கடமைபற்றி அமைந்து தம்மை அவர்களது கொடைப் பண்டமாகக் கருதி எனைக் கொடுக்க என்றார். தமக்கென ஒன்றும் வேண்டாது பெற்றோர் செலுத்தியவழி தமது அறிவு இச்சை செயல்களை அமைவு செய்துகொண்டனர் என்க. "என்னுயிர்க்கொரு நாதர்நீ ருரைத்த தொன்றை நான்செயு மத்தனை யல்லா லுரிமை வேறுள தோவெனக்கு?" (412) என்றது மனைவியின் நிலை ஒழுக்கம் பற்றியது. |