பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்391

 

(வி-ரை.) கரண்டம் - நீர்க்காக்கை. காரண்டம் என்பதன் சிதைவு. பொய்கைக் காழி என்றும், புனற்புகலூர் என்றும் அவதரித்த இடமும் சேர்ந்திருந்த இடமும் நீர்ச்சிறப்புப் பற்றிக் கூறப்பட்டன; அன்பின் நீர்மையின் தண்ணளி குறிப்பதற்கு.

காதல் - அன்பின் பெருக்கு.

நிலச்சிறப்பும் நீர்ச்சிறப்பும் குறிப்பது.

நோக்கி - அதுவே கருத்தாக. "வேட்கை கூர ஒருப்படுவார்" (1495). திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும்போது பசியும் இளைப்பும் கருதாது சென்றருளும் நாயனாரது சித்த நிலை இங்குக் கருதற்பாலது.

மகிழ்ந்து - ஆளுடைய பிள்ளையாரைக் கண்டு வணங்கும் பேறு கிடைக்கப் பெறுதற்கு மகிழ்ந்து.

திரண்டு வரும் - இவ்விரு பெருமக்களும் சேர்ந்தணையும் வாழ்வு காண ஆர்வமுடன் திரண்டு.

சேர்ந்த போதில் - கூடியபோது.

நிலவின் கடல்கள் - நிலவொளிப் பிழம்பேயாகிய இரண்டு கடல்கள் "அவரணிந்த, சேமநிலவு திரு நீற்றின் சிறந்த வெண்மைத் திருந்தொளி (1018), "வெண்ணீற்றொளி போற்றி" (திருஞான - புரா - 216), "வெண்ணீற் றின் பேரொளி போன்றது நீணிலா" (308) என்பனவற்றால் நிலவினொளி திருநீற்றினொளிக்கு உவமிக்கப்படுதல் காண்க. இனி நிலவு ஆகுபெயராய் நிலவு போன்ற வெள்ளியபாலினை உணர்த்தி நின்றதெனக் கொண்டு இரண்டு பாற்கடல்கள் ஒன்றாகி யணைந்தன போல என்றுரைத்தலுமொன்று. "பாலுந்துறு திரளாயின பரமன்" (புள்ளமங்கை - நட்டபாடை) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் காண்க.

இரண்டு - ஒன்றாகி - அணைந்தனபோல் - சிவானந்த அத்துவிதக் கலப்புப் போல என்றதும் குறிப்பு. ஒன்றாகி - கலப்பினால் ஒன்றுகூடி. இசைதல் - மாறின்றிப் பொருந்துதல். "அருட்பெருகு தனிக்கடலும்" (1450) என்றதும் பிறவும் பார்க்க.

அன்றே - கண்ட அப்பொழுதே. அன்று - ஏ அசை யென்பாருமுளர்.

நேர் நோக்கி - திரணடுவரும் - என்பனவும் பாடல்கள்.

233

1499.

திருநாவுக்கரசரெதிர் சென்றிறைஞ்சச்சிரபுரத்துத் தெய்வவாய்மைப்
பெருஞான சம்பந்தப் பிள்ளையா ரெதிர்வணங்கி, "யப்பரே! நீர்
வருநாளிற் றிருவாரூர் நிகழ்பெருமை. வகுத்துரைப்பீர்" என்று கூற,
வருநாமத்தஞ்செழுத்தும்பயில்வாய்மையவருமெதி ரருளிச்செய்வார்.

வேறு

1500.

"சித்த நிலாவுந் தென்றிரு வாரூர் நகராளும்
 மைத்தழை கண்ட ராதிரை நாளின் மகிழ்செல்வம்
 இத்தகை மைத்தென் றென்மொழிகேன்?" என் றருள்செய்தார்
"முத்து விதான மணிப்பொற் கவரி" மொழிமாலை.

235

1499. (இ-ள்.) திருநாவுக்கரசர் ... இறைஞ்ச - எதிரே சென்று திருநாவுக்கரசு நாயனார் வணங்க; சிரபுரத்து ... எதிர் வணங்கி - சிரபுரத்தில் வந்தருளிய தெய்வத் தன்மையான வாய்மை பொருந்திய பெருமையுடைய திருஞானசம்பந்தப் பிள்ளையார் எதிர் வணங்கி; "அப்பரே! நீர் ... வகுத்துரைப்பீர்" என்று கூற - "அப்பரே! நீர் வரும் நாளில் திருவாரூரில் நிகழும் பெருமையினை வகுத்