பக்கம் எண் :


394திருத்தொண்டர் புராணம்

 

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் றீரு மென்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே! பொன்னே! மைந்தா! மணாளா! வென்பார்கட்
கணியா னாரு ராதிரை நாளா லதுவண்ணம்!

2

துன்ப நும்மைத் தொழாத நாள்க ளென்பாரும்
இன்ப நும்மை யேத்து நாள்க ளென்பாரும்
நும்பி னெம்மை நுழையப் பணியே யென்பாரும்
அன்ப னாரூ ராதிரை நாளா லதுவண்ணம்.

9

பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாட லாட லறாத செம்மாப்பார்ந்
தோரூ ரொழியா துலக மெங்கு மெடுத்தேத்தும்
ஆரூ ரன்ற னாதிரை நாளா லதுவண்ணமே!

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆரூர்ப் பெருமானது திருவாதிரைத் திருநாளின் சிறப்புமுத்துவிதானம் நாற்றுதல், பத்தர்கள் சூழ்ந்தேத்துதல் முதலிய பெருமைகளையுடையது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- இறைவனது திருவிழாப் பெருமையினையும் சிறப்பினையும் செம்மைபெற எடுத்துக் கூறும் தனிப் பெருமையுடைய பதிகம் இது! ஒரு ஆசாரியர் இன்னொரு ஆசாரியர் கேட்க அருளியதும், அதனைக் கேட்டவுடனே அவர் விழாவைக் காணாவிடினும் விழாக்கொண்ட பெருமானைக் கண்டு சேவிக்கப் பிரிந்துசென்று மீண்டருளியதும் ஆகிய பெருஞ்சிறப்பும் உடையது. ஆளுடைய பிள்ளையாரது "மட்டிட்ட புன்னை" என்னும் திருமயிலைப் பதிகத்திற் காட்டப்பட்ட மண்ணினிற் பிறந்தார் பெறும்பய னிரண்டனுள், கண்ணினால் இறைவரது திருவிழாப் பொலிவுகண் டார்தல் ஒன்றாகும் என்பதறிவோம். இப்பதிகம் அத்திருவிழாவைக் காணும் வகையை அறிவிப்பது. இதனை யாவரும் பயின்று பயன்பெறக் கடவர்! (1) முத்து விதானம் - மூத்துக்கள் கட்டிய மேற்கட்டி. கவரி - வீசப்படுவது. பத்தர்களோடு பாவையர் சூழ - திருவிழாக்களில் ஆடவரும் மகளிரும் சேர்ந்து வணங்கும் முறை குறித்தது. பத்தர்கள் - ஆண் மக்களைக் குறித்தது. பலி - திருவிழாவில் எட்டுத்திசை காவலரை நோக்கி நாளிருபொழுதும் இடும் அட்டபலி. விரதிகள் - மாவிரதிகள். எலும்பு மாலை முதலியன அணிதலால் வித்தகக் கோலம் என்றார். இறைவர், மானக்கஞ் சாற நாயனாருக்கு அருள்புரிய வந்த திருக்கோலம் காண்க. மாவிரதம் - சைவத்தின் அகப்புறச் சமயம் ஆறனுள் ஒன்று. நாள் - வண்ணம் அது என்று கூட்டுக. பதிக முழுமையும் இவ்வாறு வினைமுற்றுப் பயனிலையால் முடிக்காது பெயர்ப் பயனிலைபெறக் கூறியது திருவிழாக் கண்டார்க்கு வினையில்லையாகும் என்பது குறிப்பு. - (2) நணியார் சேயார் - நணியாரும் சேயாரும். நணியார் - அணிமையில் உள்ளார். சேயார் - தூரத்தே உள்ளவர்கள். உம்மைத் தொகை. நணியார்களுள் திருநாள் காணப் பெறாதார் சேயார்களாக என்றும், சேயார்கள் அன்பினாற் கூடியவர் நணியார்களாக என்றும் உரைக்க நின்றது. பிணி - உடற்பிணி. உடலாகிய - பிறவியாகிய - பிணி என்றலுமாம். பிறங்கிக் கிடத்தல் - வரங்கிடத்தல். - (3) சாதிகள் - மணிகளுள் உயர்ந்தசாதி குறித்தது. ஒளிச்செறிவு - குற்றமின்மை - விளைவு முதலியவற்றாற் கணிக்கப்படுவது. விதானமும் வெண்குற்றமின்மை - விளைவு முதலியவற்றாற் கணிக்கப்படுவது. விதானமும் வெண் கொடியும் - இவை நகருக்கு மங்கலம் செய்தல் முன்னாள் வழக்கு. விதானமும் வெண் கொடியும் மில்லா ஊரும் ...... ஊரல்ல" (தேவா). - குணங்