உறைகின்றார் - உறைகின்றாராகி; நிகழ்கால முற்றெச்சம். உறைகின்றாராகி - இன்புற்றார் என மேல்வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க. திருப்புகலூரில் தங்கியிருந்தபடியே மேற்பாட்டில் கூறும் தலங்களைச் சென்று கும்பிட்டு வந்து மீண்டும் திருப்புகலூரில் எழுந்தருளி யிருந்தனர் என்று குறிக்க இரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்து ஒரு முடிவுபெறவைத்தார். உறைகின்றார் - முன்பாட்டில் பணிவுற்றார் - எனவும், மேல்வரும் பாட்டில் இன்புற்றார் எனவும், உரைத்தது போல, உறைந்தார் என்று இறந்த காலத்தாற் கூறாது, நிகழ்காலத்தாற் கூறிய கருத்துமிது. இக்கருத்தறியாது முன் உரையாசிரியர்கள் வசித்திருந்தார் என்று இறந்தகால வினைமுற்றாகக் கொண்டுரைத்தனர். 1439, 1463, 1493 முதலியவற்றின் உரிய சரித நிகழ்ச்சிகள் இங்குக் கருதத்தக்கன. அங்கு - திருப்புகலூரில். 239 1505. (வி-ரை.) சீர்தரு - சார்ந்து வந்தடைந்தார்க் கெல்லாம் சிறப்புத்தரும் தன்மையுடைய. தரு என எதிர்கால வினைத்தொகையாற் கூறினார்; அங்குச் சிறுத்தொண்ட நாயனாரின் பெருஞ்சிறப்பு இனி வெளிப்பட உள்ளதென்று குறித்தற்கு. "சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் - கடிநகராய் வீற்றிருந்தான்" என்ற ஆளுடைய பிள்ளையாரது அத்தலத் தேவாரக் குறிப்பும் காண்க. திருநீடு நள்ளாறு - என்று கூட்டுக. அடியார் மனத்தில் நீடியிருக்கும் திருநள்ளாறு என்றலுமாம். தரு ஆர் சோலை என்க. தரு - மரம் - பூந்தருக்கள். சூழ்தரு - தரு - பகுதிப்பொருள் விகுதி. சாந்தை - சாத்தமங்கை என்பது சாந்தை என மருவிவந்தது. அயவந்தி - அத்தலத்துக் கோயிலின் பெயர். சாந்தை - ஊர். அயவந்தி - கோயில். வார்திகழ் மென்முலையாள் - உமையம்மையார் இத்தலத் திருக்குறுந் தொகைப் பதிகத்தில் காணுமாறு திருமருகலிறைவரது திருவருளின் எளிமைப்பாடு குறித்தற்கு இத்தன்மையாற் கூறினார். ஆளுடைய பிள்ளையார் இத்தலத்தில் வணிகப் பெண்ணுக் கிரங்கி வணிகனை விடம்தீர்த்து மணஞ் செய்வித்தருளிய அருட்சரிதத்தையும் இங்கு நினைவு கூர்க. ஏர் தரும் அன்பு - அன்பு செய்தார்க்கும எல்ா நலனும் எய்தும் என்பதாம். அன்பே எல்லா அழகும் தருவதாம் என்க. ஏர் - இங்குப் பெரியதாகிய அருட்சிறப்புக் குறித்தது. இன்புற்றார் - வணங்குதலாகிய அந்த இன்பத்தினுள் திளைத்து இருந்தனர். வணங்குதலே இன்பமாம் என்பது. "கூடுமன்பினிற் கும்பிடலே யன்றி, லீடும் வேண்டா விறலின் விளங்கினார்" (143). 240 திருப்புகலூர் I திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறிநீ றாகி வீழப் புகைத்திட்ட தேவர் கோவே பொறியிலே னுடலந் தன்னுள் அகைத்திட்டங் கதனை நாளு மைவர்கொண் டாட்ட வாடித் திகைத்திட்டேன் செய்வ தென்னே! திருப்புக லூர னீரே! |
1 | நீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகி யேருடையக் கதிர்க ளாகி யிமையவ ரிறைஞ்ச நின்றார் ஆய்வதற் கரிய ராகி யங்கங்கே யாடு கின்ற தேவர்க்குந் தேவ ராவார் திருப்புக லூர னாரே. |
8 திருச்சிற்றம்பலம் |