பதிகக் குறிப்பு :- திருப்புகலூர இறைவரே! தொண்ணூற்றாறு என்னும் தத்துவ தாத்துவிகக் கூட்டத்தாலாகிய இவ்வுடம்பினுள் வைக்கப்பட்ட ஐம்புலனாசைகளால் ஆட்டுண்டு திகைக்கின்றறேன்! திருக்கடவூர இறைவர பாதம் நாளும் நினைவிலேன்! உம்மை நினைந்து உய்யும் உபாயம் பற்றி உகக்கின்றேன்! உகவா வண்ணம் ஐம்புலன்கள் வலிமை செய்கின்றன! செய்வதொன் றறியேன்! என்றிரங்கியது. குறிப்பு :- திருப்புகலூரில் நாயனார கும்பிட்டு முதன் முறையாகப் பலநாள் தங்கி வாழ்ந்தனர. அப்போது பற்பல தேவாரங்கள் அருளியிருத்தல் வேண்டும். பின்னர இறுதியில் இரண்டாம் முறையாக அங்குப் பல காலம் தங்கி வாழ்ந்தனர. அக்காலத்தும் எண்ணிறந்த திருப்பதிகங்கள் அருளினர என்று ஆசிரியர அறிவிக்கின்றனர. - முதல் முறை தங்கி வாழ்ந்த காலத்துப் பாடியருளியவற்றுள் இப்போது கிடைப்பன மூன்று பதிகங்களேயாம்! அவற்றுள் இரண்டு பதிகங்கள் "பாலியன் மாலைச் செந்தமிழ் பாடி" (1504) என்ற இவ்விடத்தும் "துன்னக் கோவணம்" என்ற திருக்குறுந் தொகைப்பதிகம் "பூம்புகலூர தொழுதகன்றார" (1510) என்ற விடத்தும் அவற்றுட் பெறப்படும் சில குறிப்புக்களின் துணை கொண்டு குறிக்கப்படுவன. - திருப்புகலூர என்ற தலப்பெயர பற்றிவரும் ஐந்து பதிகங்களுள் எஞ்சிய "தன்னைச்சரணென்று" என்ற திருவிருத்தமும், "எண்ணுகேன்" என்ற திருத்தாண்டகமும் ஆகிய இரண்டும், தலப்பேராற் குறிக்கப்படாது பொதுப் பதிகங்களுள் தொகுக்கப்பட்ட நின்ற திருத்தாண்டகம், தனித்தாண்டகம், க்ஷேத்திரக் கோவை, குறைந்த திருநேரிசைப் பதிகங்களிரண்டு, தனித்திரு நேரிசைப் பதிகங்கள் மூன்று, ஆருயிரத் திருவிருத்தம் ஆகிய பன்னிரண்டும், பின்முறையில் இத்தலத்தில் எழுந்தருளிச் சரித்த காலத்தில் அருளியவற்றுள், இப்போது நமக்குக் கிடைத்துள்ளவை. அவற்றைப் பின்னரப் "பெருங் காதலுடன், வைகுநா ளெண்ணிறந்த வண்டமிழ் மாலைகள் மொழிவார" (திருநா - புரா - 413) என்னுமிடத்து ஆசிரியர காட்டியுள்ள குறிப்புக்களின் துணைகொண்டு குறிக்கப்படும். "பொய்ம்மாயப் பெருங்கடல்" என்ற திருத்தாண்டகம் இத்தலத்தே அருளிச்செய்யப்பட்டது. இத்தலத்துத் தேவாரங்களுட் சேரத்தற்குரியது. அதனைத் தல முறையுள் திருவாரூரப் பதிகங்களுள் வைத்துச் சேரத்துள்ளாரகள். அதனை "இம்மாயப் பவத்தொடக்காமம்" '(திருநா - புரா - 423) என்ற விடத்திற் குறிக்கப்படும். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பாறி - அழிந்து. பாறுதல் - அழிதல். "பழவினைகள் பாறும் வண்ணம்" (திருவா). பொறி - நல் உணரவு. "மற்றிது செய்ததென் பொறியிலாய்" (நீலநக். புரா - 13); "ஆரணமோதிலும், பொறியிலீர மனமென் கொல் புகாததே" (தேவா). அகைத்திட்டு - செலுத்தி. நாளும் அதனை ஐவரகொண்டு அகைத்திட்டு ஆட்ட - என்று கூட்டி உரைக்க. ஐவர - ஐம்பொறிகள். அவர ஐந்து என்றலுமாம். அகைத்தல் - வேதனை செய்தல் என்றலுமாம். - (2) மை - மை எழுதிய; அரி - செவ்வரிபடரந்த; மதரத்த - காமநோக்கு மிகுந்த; ஒண் - ஒள்ளிய; கண்ணுக்குக் கூறிய இந்த அடைமொழிகள் அதன் வலையிற் படுதலுக்குக் காரணங்காட்டின. எரி - சூலம் கை ஏந்தும் என்க. எரியும் சூலமும் என்று உம்மைத் தொகை. எரிகின்ற சூலம் என்றுரைத்தலுமாம். ஐ - கோழை. கபம். "ஐயினான் மிடறடைப் புண்டு" (தேவா). "ஐமேலுந்தி யலமந்த போது" (தேவா - பிள்ளையார - திருவையாறு - மேகராக - 1). நெரிந்து - மிகுந்து. - (3) முப்பதும் இடுகுரம்பை - தத்துவம் முப்பத்தாறும், தாத்துவிகம் அறுபதும் ஆகத் தொண்ணூற்றாறின் கூட்டமாகிய உடம்பு. அப்பர - தலைவர; போல் - ஏவல்வழி நிற்க வேண்டியவர, அவ்வாறன்றித் தாமே தலைவரபோல; அதுதருக - இது விடு - |