என்று - தகாதவழிகளில் விருப்பு வெறுப்புக்களில் செல்லும்படி ஏவி. - (4) பொறி - நல் உணர்வு. அழுக்கு - அழுக்குடைய உடல். "அழுக்கு மெய்கொடுன் றிருவடி யடைந்தேன்" (தேவா). பொய் - பொய்வாழ்வு. அமுதினை - சாதலை நீக்கி நிலைபேறு தரும் முத்தியை. மண்ணில் வைக்கும் - இவ்வுலகத்திலேயே பெற்றுவைத்தற்குரிய; மனனில் என்பது பாடமாயின் அமுது என்றதற்கு அமுதம் தரும் இறைவரை என்க. செறிவு - ஞானத்திண்மை. - (5) அளியினார் - வண்டுகள் மொய்க்கும. குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி - பாதம் நாளும் நினைவு இலா என்றது அழிவு தருவதனிடத்து அன்புகொண்டும், அழிவை நீக்குவதனைச் சிறிதும் நினையாமலும் உள்ள நிலையை எடுத்துக்காட்டியபடி. அது அதன் சிறிதும் நினையாமலும் உள்ள நிலையை எடுத்துக்காட்டியபடி. அது - அதன் மயமே; அதன் வசமே. மேயினார்கள் அவர்கள் - அவர்கள் - பகுதிப்பொருள் விகுதி. கடவூர் வீரட்டம் என்னும் தளியினார் - கூற்றுவனை உதைத்தவராதலின் அழிவில்லாமையை வேண்டினோர் அவரை நினைக்கக் கடவர் என்றபடி. வீரட்டம் என்ற குறிப்புமது. தளி - கோயில். - (6) இலவு - இலவின் தன்மை. "இலவு காத்த கிளி - பழமொழி. ஞானஞ் செலவு - ஞானநெறியிற் செல்லுதல். - (7) காத்திலேன் இரண்டும் மூன்றும் - ஐம்புலன் வழிச் செல்லாது மனத்தைக் காவல் புரிந்திலேன். இரண்டு மூன்று - ஆறு எனக் கொண்டு காமமாதி ஆறுவகைக் குற்றம் என்றலுமாம். வாய்மையால் தூயேனல்லேன் - உயிர்க்குத் தூய்மை தருவது வாய்மை "புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை, வாய்மையாற் காணப்படும்" (குறள்). தீர்த்தம் - தூய்மை தருவது. - (8) ஏருடைக் கதிர்கள் - ஞாயிறுந்திங்களும். இனம் பற்றி வாயுவும் ஆன்மாவுங் கொள்க. சிவனது எட்டு மூர்த்தமும் கூறப்பட்டன. அங்கங்கே ஆடுகின்ற தேவர்க்கும் தேவ ராவர் - அங்கங்ககும் ஆடும் - எவ்வகை அதிகாரமும் செய்யும் - தேவர் எல்லாருக்கும் தாமே ஆட்டுவிக்கும் தலைவர். இதனைத் "தேவர் பிரானை" (1504) என்று ஆசிரியர் குறித்தது காண்க. இக்குறிப்பினால் இப்பதிகம் முதலில் அருளப்பட்டது. என்று கருத இடமுண்டு. - (9) மெய்யுளே - உபாயம்பற்றி உகத்தின்றேன் - விளக்கு - ஞான விளக்கு; அதலின் உருவகம். "ஞான விளக்கினையேற்றி" (தேவா - பிள்ளையார்). யோகஞான முயற்சி. "உடம்பெனு மனையகத்து ளுள்ளமே தகளி யாக, மடம்படுமுணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி, யிடம்படு ஞானத் தீயா லெரிகொளவிருந்து நோக்கில், கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே" (பொது நேரிசை. 4) என்றது இதனை விளக்குதல் காண்க. பற்றி - பற்றாகக்கொண்டு. ஐவர் - ஐம்புலவாசை. சால வலியர் என்க. சால - சால்வு பொருந்தும் பொருட்டு என்றலுமாம். குறிப்பு :- இத்திருப்பதிகத்துள் 8 - 10 பாட்டுக்கள் மட்டும் திருப்புகலூரனாரே என்று படர்க்கையிடத்தும், ஏனையவை யெல்லாம் திருப்புகலூரனீரே! என்று முன்னிலை விளியிலும் மகுடம் அமைந்துள்ளன. முந்திய இரண்டும் வேறு பதிகத்தைச் சேர்ந்தனவோ என்பது ஐயம். திருப்புகலூர் II திருச்சிற்றம்பலம் | பண் - இந்தளம் |
| செய்யர்வெண் ணூலர் கருமான் மறிதுள்ளும் கையர் கணைகழல் கட்டிய காலினர்; மெய்யர்மெய்ந் நின்றவர்க் கல்லா தவர்க்கென்றும், பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே. |
| பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக், கருந்தாழ் குழலியும் தாமுங் கலந்து, திருந்தா மனமுடை யார்திறத் தென்றும், பொருந்தார் புகலூர்ப்புரிசுடையாரே. கறுத்தார்மணிகண்டங்கால்விரலூன்றி, யிறுத்தாரிலங்கையர்கோன்முடிபத்தும், அறுத்தார் புலனைந்து மாயிழை பாகம், பொறுத்தார் புகலூர்ப் புரிசடையாரே. |
10 திருச்சிற்றம்பலம் |