| யருந்திறன்மா நடமாடு மம்மான் றன்னை யங்கனகச் சுடர்க்குன்றை யன்றா லின்கீழ்த் திருந்துமறைப் பொருணால்வர்க் கருள்செய் தானைச் செங்காட்டங் குடியதனிற் கண்டே னானே. |
1 | கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக் கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச் சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச் சாரசரநற் றாயானை நாயேன் முன்னைப் பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென் சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச் செங்காட்டங் குடியதனிற் கண்டே னானே. | 4 | கல்லாதார் மனத்தணுக்காக் கடவு டன்னைக் கற்றார்க ளுற்றோருங் காத லானைப் பொல்லாத நெறியுகந்தார் புரங்கண் மூன்றும் பொன்றிவிழ வன்றுபொரு சரந்தொட் டானை நில்லாத நிணக்குரம்பைப் பிணக்க நீங்க நிறைதவத்தை யடியேற்கு நிறைவித தென்றுஞ் செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச் செங்காட்டங் குடியதனிற் கண்டே னானே. |
8 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- பெருந்தகை, உருகுமனத் தடியவர்கட்கு ஊறுந் தேன், உண்மை நின்ற பெருகுநிலைக் குறியாளர் அறிவு, மெய்த்தவத்தோர் துணை, நாயேன் முனனைப் பந்தமறுத்து ஆளாக்கிப் பணிகொண்டு பன்னியநூற் றமிழ் மாலை பாடுவித்து என் சிந்தை மயக்கறுத்த திருவருளினான், பாவந்தீர்த்துப் பண்டை வினைப் பயமெல்லாம் போக்கித் தித்தித் தென்மனத்துள்ளே யூறுந்தேன், நிறை தவத்தை யடியேற்கு நிறைவித் தென்றுஞ் செல்லாத செந்நெறிக்கே செல்விப்பான், உரிய பலதொழில் செய்யு மடியார் தங்கட் குலகமெலா முழுதளிக்கு முலப்பிலான் என்பன முதலாக அறியப்படும் இறைவரை நான் திருச்செங்காட்டங் குடியிற் கண்டேன். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பேணி - அன்பு பூண்டு. பூ - இதய தாமரை. - (2) நகத்தால் அன்றித் தொலையா - படைக்கலங்களால் அழிக்கப்படாதபடி இரணியன் பெற்ற வரம். கனகத் திருமால் - நரசிங்க அவதாரம்.-(3) உண்மை நின்ற - மெய்ந்நெறி நின்ற. பெருகுநிலைக் குறியாளர் - பெருநிலையிற் குறிக்கோள் வைத்தவர். -(4) நாயேன் முன்னை....திருவருளினால் - நாயனாரது முன்னை நிலைக் குறிப்பும் சரித அகக்சான்றும்.-(5) வெஞ்சினத் திரிசூலம் - உடையானது சினம் படைமேல் ஏற்றப்பட்டது.-(6) கன்னி - கங்கை. பன்னிய - தன்னையே சொல்லிய.-(7) இல்லாத் தெய்வம் - உண்டு இல்லை என்று சொல்லும் சமணர் வழக்குக் குறித்தது. வீழாமே.......தேனை - நாயனாரது சரித நிகழ்ச்சியின் அகச்சான்று. தித்தித்தென் மனத்துள்ளே யூறும் தேன் - எண்ணி எண்ணி அள்ளூறும் அன்பு நிறைந்த நாயனாரது மனநிலை குறித்த அகச்சான்று. "நாயகன் சேவடி, தைவரு சிந்தையும் நைந்துருகி" (1405), "செம்பொற் றாளே சார்வான திருமனமும்" (1490) என்பன முதலாக ஆசிரியர் எடுத்துக் காட்டும் சரித நிகழ்ச்சிகள் இவ்வாறு கண்ட நாயனாரது திருவாக்குக்களின்படி போந்தன.-(8) நிறைதவத்தை யடியேற்கு நிறைவித்து - "பண்டுபுரி நற்றவத்துப் பழுதினள விறைவழுவுந் தொண்டர்" (1314) |